WhatsApp Business வந்துவிட்டது இந்தியாவுக்கு – பயன்படுத்துவது எப்படி ?

WhatsApp :

உலகில் அதிகம்பேர் பயன்படுத்தக்கூடிய சாட் செயலிகளில் முதன்மையானது facebook நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் செயலி . அடுத்ததாக வாட்ஸ் ஆப் பிசினஸ் என்கிற ஆப் கடந்த வாரங்களில் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது . தற்போது அந்த செயலி இந்தியாவிலும் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது .

இதன் சிறப்பம்சமாக என்னவென்றால் வியாபாரம் , கம்பெனி நடத்துபவர்கள் தங்களது வாடிக்கியாளர்களை எளிமையாக தொடர்புகொள்ளவும் தங்களது ஆபர்களை வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக கொண்டுசேர்க்கவும் இந்த ஆப் உதவுகிறது . மேலும் வாடிக்கையாளர்களும் எளிமையாக தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களை தொடர்பு கொள்ளவும் இதில் வசதி உள்ளது  .

தற்போது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இலவசமாக இந்த ஆப் play store இல் கிடைக்கிறது . ஆப்பிள் பயனாளர்களுக்கு விரைவில் கிடைக்கும் .

பயன்படுத்துவது எப்படி ?

பார்ப்பதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் ஆப் போலவே இதன் வடிவமைப்பு இருக்கின்றது.

வழக்கம் போல இந்த ஆப்பை திறந்தவுடன் உங்கள் மொபைல் எண்ணினை பதிவிட்டு OTP மூலமாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் .

குறிப்பாக நீங்கள் ஏற்கனவே உங்களது  வாட்ஸ் ஆப் க்கு பயன்படுத்திய எண்ணை பயன்படுத்தாமல் இதற்கு வேறு எண்ணையே பயன்படுத்த முடியும் . உங்களிடம் வேறு மொபைல் எண் இல்லையெனில் அதே எண்ணை இதில் பதிவிட்டு உங்களது வாட்ஸ் ஆப்பை பிசினெஸ் வாட்ஸ் ஆப் ஆக மாற்றிக்கொள்ளலாம் .

ஏற்கனவே பதிவு செய்த நண்பர்களின் எண்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அப்படியே இருக்கும் .

 

இந்த ஆப்பிற்குள் நுழைந்தவுடன் உங்கள் நிறுவன பெயரை பதிவிட சொல்லும் . ஒருமுறை நீங்கள் பதிவிட்டுவிட்டால் அதனை மாற்றிட முடியாது .

நீங்கள் “Business Settings ” ஆப்ஷனில் சென்று ப்ரொபைல்(Profile) இல் உங்களது நிறுவனம் அல்லது கடையின் பெயர் , இடம் , திறந்திருக்கும் நேரம் போன்ற தகவல்களை குறிப்பிட வேண்டும் .

அதற்கு அடுத்தாக away message , greeting message , quick replies போன்ற ஆப்ஷன்கள் இருக்கும் . இவையே இந்த ஆப்பின் சிறப்பம்சங்கள் .

நீங்கள் இணைப்பில் இல்லாதபோது உங்களை தொடர்புகொள்பவர்களுக்கு சொல்லவேண்டிய செய்தியை away message இல் இடவும் .

புதிதாக உங்களை தொடர்புகொள்வவர்களுக்கு  சொல்லவேண்டிய செய்தியை greeting message இல் இடவும் .

quick replies ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் பதிலை வேகமாக அனுப்பிட வசதியாக இருக்கும் .

 

இவைகளை தவிர மற்ற அனைத்துமே ஏற்கனவே உள்ள வாட்ஸ் ஆப்பில் உள்ள வசதிகள் தான் .

சிறிய அளவில் வியாபாரம் ,வணிகம் செய்வோருக்கும் வீட்டிலேயே பொருள்களை தயாரித்து விற்போருக்கும் இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும் .

பயன்படுத்தி பாருங்களேன் .

மேலும் இணையம் அறிவியல் பதிவுகளை படிக்க கிளிக் செய்யுங்கள்

பாமரன் கருத்து

Share with your friends !

2 thoughts on “WhatsApp Business வந்துவிட்டது இந்தியாவுக்கு – பயன்படுத்துவது எப்படி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *