How to start Free Website/Blog | இலவசமாக website/blog தொடங்குவது எப்படி ?
இன்று அனைத்தும் இணையமயமாகி விட்டது ஆகையால் நாமும் மற்றவர்களுக்கு இணையாக நமது தொழில்வளத்தை பெருக்கிட நிச்சயமாக இணையத்தோடு இணைந்திருப்பது அவசியமாகிவிட்டது. தொழில் செய்பவர்கள், எழுத்தாளர்கள், புகைப்பட வல்லுநர்கள் என மக்களுக்கு தங்களை பற்றியோ தங்களது திறமையை பற்றியோ கூறிட மிகப்பெரிய அளவில் உதவுவது இணையமும் இணையதளமும்.
இன்று யார் வேண்டுமானாலும் இணையதளம் தொடங்கலாம். ஆனால் அதற்காக சிறு தொகையினை செலவு செய்ய வேண்டி இருக்கும். இலவசமாக உதவிகரமாக வருமானத்தை எதிர்பார்க்காமல் செயல்பட நினைப்பவர்களுக்கு இந்த சிறு தொகையை செலவு செய்வதும் கடினமானதாக இருக்கும்.
உங்களுக்காக இலவசமாக இணையதளம் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன .
அறிவோம் வாருங்கள் .
இலவசமாக இணையதளம் தொடங்க உள்ள வாய்ப்புகள் :
Here is the list of websites to create blog/websites :
இலவசமாக இணையதளம் தொடங்கும் வாய்ப்பினை பின்வரும் நிறுவனங்கள் அளிக்கின்றன.
கூகிள் : www.google.co.in/business/website
விக்ஸ் : www.wix.com/create-your-website
வெப்சைட் : https://www.website.com/
வெப்நோட் : https://us.webnode.com/
யோலா : https://www.yola.com/
வேர்ட்பிரஸ் : https://wordpress.com/learn-more/?v=site
இதில் ஏதேனும் ஒரு இணையத்தளத்திற்குள் சென்று உங்களுக்கான இணையதளத்தை திறந்து கொள்ளுங்கள்.
குறிப்பு : ஒவ்வொரு நிறுவனமும் சில குறிப்பிட்ட ஆப்ஷன்களை உங்களுக்கு வழங்கும். ஆகவே நீங்கள் இணையதளம் திறப்பதற்கு முன்பாக எது சிறந்தது என்பதனை தேர்ந்தெடுத்து அதில் உங்களது வெப்சைட் ஐ பதிவு செய்யுங்கள்.
நாம் இங்கு கூகிளில் வெப்சைட் தொடங்குவது எப்படியென்று பார்ப்போம் :
>> முதலில் கூகிள் அக்கௌன்ட் (Google Account ) ஒன்றினை ஓபன் செய்யுங்கள்.
>> https://www.blogger.com/ என்கிற லிங்கை கிளிக் செய்யுங்கள் அல்லது பிளாக்கர் (blogger) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள் .
>> “CREATE BLOG” என்பதை கிளிக் செய்யுங்கள்.
>> உங்கள் வெப்சைட்க்கான பெயரை Title இல் பதிவிடுங்கள்.
>> உங்களுக்கான இணைய முகவரியை address இல் பதிவிடுங்கள். இது இலவச வெப்சைட் என்பதால் கூகிளின் அடையாளம் .blogspot.com என்பது சேர்ந்தே வரும்.
>> நீங்கள் உங்கள் வெப்சைட் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அதற்கேற்ற “Theme” ஐ தேர்ந்தெடுங்கள்.
>> இது தான் உங்களுக்கான “Dashboard”.
>> “New Post” என்பதை கிளிக் செய்து பதிவிட ஆரம்பிக்கலாம்.
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின் கமெண்ட் இல் பதிவிடுங்கள்.
நன்றி
பாமரன் கருத்து
Dear sir.
i have plan new wepsite created. but i have no idea how to open sir. small business purpose sir. pls guidelines for me.
Thanks
K.Goutham
Mobil : 9094710326
Hi Gowtham,
For creating websites you should buy domain and hosting place .
In my view you can buy domain in godaddy since they provide first one year for 99 only, next year’s it will around 600 to 700
Lots of providers available for hosting . Godaddy also provide hosting place.
Iam using GlobeHost. You can check price and storage range and then choose which is suitable for you!
Note : you can transfer domain and hosting place anywhere ..so don’t worry about it .
If you need any more details let me know.
dear sir,
i like to create Hindu AAnmegam related blog ( free Blog ) what can i do it sir.