How to read deleted WhatsApp messages in 2Minutes | Notification History App

Using Apps you can read deleted WhatsApp messages. One of the Android App is “Notification History”. Here I have explained the steps to use.

இன்று அனைவரும் குறுந்தகவல் அனுப்ப பயன்படுத்துகிற செயலிகளில் முக்கியமானது வாட்ஸ்ஆப். அந்த வாட்ஸ்ஆப் நிறுவனம் அண்மையில் பயனாளர்கள் தவறுதலாக அனுப்பக்கூடிய மெசேஜ்களை நீக்கிவிடும் வசதியை “Delete for everyone” கொண்டு வந்தது.

இதனால் பெறக்கூடியவர்கள் பார்ப்பதற்கு முன்னதாகவே அந்த மெசேஜ் ஐ நீக்கிவிட முடியும். அந்த தகவல் பெறுபவரின் வாட்ஸ்ஆப்பில் இருந்தும் நீக்கப்பட்டு விடுவதால் அவரால் அதனை படிக்க முடியாது.

இந்த வசதி வரவேற்பை பெற்று இருந்தாலும் சிலருக்கு மீண்டும் புதிதாக அனுப்பிய மெசேஜ் ஐ படிக்கும் ஆர்வத்தை விட delete செய்தது என்னவாக இருக்கும் என அறியவே விரும்புவார்கள்.

இதோ அதுவும் முடியும். இணைய உலகில் எதுவும் சாத்தியம் என்பதைப்போல வாட்ஸ் ஆப்பில் Deleted Message ஐ படிக்கவும் ஆப் கொண்டுவந்துவிட்டார்கள். இது பற்றி பலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் பயன்படுத்திக்கொண்டு படிக்கலாம் {சண்டை போடாமல் இருந்தால் சரி தான் }

இதற்கு பல வழிகள் இருந்தாலும் எளிமையான வழி இதுதான்

ஆண்ட்ராய்டு பயனாளர்களாக இருந்தால் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்கள்

Notification History Android App

https://play.google.com/store/apps/details?id=com.evanhe.nhfree

இந்த ஆப்பை ஓபன் செய்தவுடன் “Enable System Setting” என ஆப்சன் வரும்.

அதில் இருக்கும் இரண்டு ஆப்சனில் “Notification Access – Disabled” ஐ கிளிக் செய்யவும்.

அடுத்து Notification History ஆப்பிற்கு அருகில் இருக்கக்கூடிய பட்டனை கிளிக் செய்யவும்.

இப்போது Back பட்டனை அழுத்தினால் “Notification Access – Enabled” என இருக்கும்.

இனி உங்களது மொபைலுக்கு வருகின்ற அனைத்து நோட்டிபிகேஷன்களும் இந்த ஆப்பிலும் ரெகார்ட் செய்து வைக்கப்படும்.

உங்களுக்கு யாராவது மெசேஜ் அனுப்பி delete செய்திருந்தாலும் அவர் முதல் முறை அனுப்பும் போது வந்த நோட்டிபிகேஷன் ஐ பார்ப்பதன் மூலமாக அவர் அனுப்பியதை பார்க்க முடியும்.

அதனை பார்க்க இந்த ஆப்பிற்குள் நுழைந்து யார் டெலீட் செய்த மெசேஜ் ஐ பார்க்க வேண்டுமோ அந்த பெயரை கிளிக் செய்து பார்த்தால் அவர் டெலிட் செய்த மெசேஜ் ஐ பார்க்க முடியும் .

குறிப்பு : இதில் மிகப்பெரிய மெசேஜ் களை பார்க்க முடியாது, குறிப்பிட்ட அளவு அதாவது 100 characters களுக்கு உள்ளே இருப்பவற்றை மட்டுமே பார்க்க முடியும்.

இந்த நோட்டிபிகேஷன் ஆப் வாட்ஸ்ஆப் மெசேஜ் ஐ மட்டும் சேமிப்பது இல்லை , உங்கள் மொபைலுக்கு வரக்குடிய நோட்டிபிகேஷன்கள் அனைத்தையும் சேமிக்கும் .

ஆகவே அது உங்களுக்கு பிரச்சனை இல்லை என்று கருதும் பட்சத்தில் இந்த ஆப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் .

PAMARAN KARUTHU

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *