How to earn in money Youtube? யூடுயூப் மூலமாக சம்பாதிப்பது எப்படி ?

Most of the individuals highly earned in Youtube

 

இன்று பல வீடியோக்கள் யூடுயூப் (youtube) மூலமாகவே பரப்பப்படுகின்றன. யூடுயூப் (youtube) என்பது கூகிள் நிறுவனத்தின் இலவச சேவை. கூகிள் அக்கவுண்ட் கொண்ட எவரும் எவ்வளவு வீடீயோவையும் யூடுயூப் (youtube) இல் அப்லோட் செய்து பகிர முடியும்.
இதோடு சேர்த்து யூடுயூப் (youtube) ஒரு நன்மையையும் கொண்டிருக்கிறது. ஆம் யூடுயூப் (youtube) மூலமாக உங்களால் சம்பாதிக்க முடியும். உங்களால் சிறந்த யூடுயூப் (youtube) வீடீயோவை தொடர்ச்சியாக வழங்க முடிந்து அதனை அதிகப்படியான நபர்கள் பார்த்தால் உங்களுக்கு வருமானம் வரும் வசதியும் இதில் உண்டு.
அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

கூகிள் கணக்கு தேவை :

https://www.google.com என்கிற இணையதளத்திற்கு சென்று உங்களுக்கென கணக்கினை தொடங்க வேண்டும். இது முற்றிலும் இலவசமான ஒன்று. இந்த கணக்கை தொடங்குவதன் மூலமாக நீங்கள் இலவசமாக கூகிளின் பிற வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அவை கூகிள் பிளஸ், மெயில் சேவை, கூகிள் டிரைவ் (Google Drive) இன்னும் பல சேவைகள்.
 

சேனல் (Channel) தொடங்க வேண்டும் :

யூடுயூப் (youtube.com) இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட user name, password கொண்டு உள்நுழையுங்கள். பிறகு பின்வரும் படத்தில் காட்டியுள்ளபடி உங்கள் போட்டோ வை கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு வரும் வாய்ப்புகளில் (Options) “My Channel” ஐ கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் பின்வரும் பக்கத்தை உங்களால் காண முடியும்.
நீங்கள் ஏற்கனவே சேனல் வைத்திருப்பின் உங்களால் அதனை இங்கு காண முடியும்.

புதிய சேனல் தொடங்க :

இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் “https://www.youtube.com/account
பிறகு கீழேயுள்ள “See all my channels or create a new channel” கிளிக் செய்யுங்கள் .
அதில் நீங்கள் ஏற்கனவே சேனல் வைத்திருந்தால் அது தெரியும். மேலும் “create a new channel” என்றொரு option இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள்.
 “Brand Account name” இல் உங்கள் சேனலின் பெயரினை இடுங்கள். “Create ” ஐ கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கான சேனல் தயாராகிவிட்டது.
நீங்கள் இனி உங்களது வீடீயோவை அப்லோட் செய்யலாம்.

இப்போது நீங்கள் செய்யவிருப்பதுதான் மிக முக்கியமான பகுதி “Monetization”

“Monetization” க்கு விண்ணப்பிப்பது எப்படி ?

“Monetization” என்பது நமது சேனலை யூடுயூப் (youtube) நிறுவனத்தார் ஆய்வு செய்து நமது சேனலை அங்கீகரிப்பது எனலாம்.

இந்த ஆப்ஷனை தேர்தெடுத்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்களுடைய சேனலின் view எண்ணிக்கை 10000 த்தை கடந்தவுடன் உங்கள் சேனல் review செய்யப்படும்.

“Monetization” செய்வது குறித்தும் சிறப்பாக youtube இல் செயல்படுவது குறித்தும் விளக்கமாக அடுத்த பதிவில் காணலாம்.

 

பிற பதிவுகள் :

இணையத்தின் மூலமாக சம்பாதிப்பது எப்படி ?

இணையதளம் என்றால் என்ன ?

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *