ஜிமெயில் (gmail) மின்னஞ்சல் முகவரி ஆரம்பிப்பது எப்படி ?

மின்னஞ்சல் முகவரி என்றால் என்ன?

உங்கள் வீட்டு முகவரியை குறிப்பிட்டு யாரேனும் கடிதம் அனுப்பினால் உங்கள் வீடுதேடி வருகிறதல்லவா அதனை போன்ற உங்களுக்கான தனித்துவமான முகவரிதான் மின்னஞ்சல் முகவரி என்பதும் .

இன்றைய இணைய உலகில் பல நிறுவனங்கள் இலவசமாக மின்னஞ்சலை உருவாக்கிக்கொள்ள வாய்ப்புகளை வழங்குகின்றன . அவற்றுள் முதன்மையானதாக இருப்பது கூகுள் (google ) நிறுவனத்தின் ஜிமெயில் தான் .

இந்த இணைய மின்னஞ்சல் முகவரியை நீங்களே ஆரம்பித்திட வேண்டும் . அதற்கு நீங்கள் கடவுச்சொல் (password ) வைத்து கொள்ளலாம் .

இதற்கு தேவையானது இணைய இணைப்பு , செல்போன் எண் .

ஜிமெயில் (gmail ) அக்கௌன்ட் ஆரம்பிப்பது எப்படி ?

Gmail.com என்று உங்கள் மொபைல் பிரௌசரில் போடுங்கள் .

ஏற்கனவே உங்களுக்கு முகவரி இருப்பின் email or Phone என்று இருக்கிற இடத்தில் அதனை இட்டு உள்ளே நுழையலாம் .

புதிதாக ஆரம்பிக்க இருப்பவர்கள் “More Options ” ஐ கிளிக் செய்யவும் .

பிறகு “Create account ” ஐ கிளிக் செய்யவும் .

உங்கள் பெயரை “First ” என்ற இடத்திலும் உங்களது இன்ஷியல் அல்லது அப்பா பெயரினை “last ” என்ற இடத்திலும் இடவும் .

@gmail.com இந்த இடத்தில் உங்களுக்கு எவ்வாறு முகவரி இருக்கவேண்டுமோ அதனை எழுதுங்கள் .

create a password என்ற இடத்தில் உங்கள் கடவுச்சொல்லை இடுங்கள் .

confirm a password என்ற இடத்தில் மீண்டும் ஒருமுறை கடவுச்சொல்லை  இடுங்கள்

Birthday என்ற இடத்தில்  உங்களது பிறந்த தினத்தை குறித்து கொள்ளுங்கள் .

Gender என்ற இடத்தில் ஆண் என்றால் “Male ” எனவும் பெண் என்றால் “Female ” எனவும் தேர்ந்தெடுங்கள் .

Mobile Phone என்ற இடத்தில் உங்களது போன் எண்ணினை கொடுங்கள் .

நீங்கள் ஏற்கனவே மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பின் அதனை “Your current email address ” என்ற இடத்தில் கொடுக்கவும் , இல்லையென்றால் எதுவும் கொடுக்காமல் “Continue ” வை கிளிக் செய்யுங்கள் .

அதன்பிறகு terms and conditions வரும் . அதனை கீழிறக்கினால் “I Agree” இருக்கும்  . அதனை கிளிக் செய்யுங்கள் .

தற்போது உங்களுக்கான மின்னஞ்சல் முகவரி பதிவு செய்யப்பட்டு இருக்கும் .

நீங்கள் கொடுத்த கடவுச்சொல் (password) மற்றும் மின்னஞ்சலை நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் .

யாரேனும் உங்களுக்கு எதாவது அனுப்ப வெண்டுமென்றால் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து அனுப்ப சொல்லுங்கள் .

உங்களுக்கு கேள்விகள் இருப்பின் கமெண்டில் எழுதுங்கள் .

நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பகிருங்கள் .

நன்றி

பாமரன் கருத்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *