வாழ்க்கையை பிடித்ததாக மாற்றுவது எப்படி? உங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஒரு கட்டுரை இது
வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் பல விதிகள் உண்டு. விதிகளை மீறுங்கள் என்று சொல்கிறேன். சட்டங்களை மீறாமல் விதிகளை மீறுங்கள். வாழ்க்கையே பிடித்ததாக மாறிவிடும்.
உங்கள் மனதுக்கு விருப்பமான வேலையை செய்திடும் போது தான் வாழ்க்கை உங்களுக்கு பிடித்தமானதாக மாறுகிறது. தனக்கு பிடித்தமானது இதுதான் என்று தெரிந்தும் பல்வேறு சூழல்களால் வெவ்வேறு வேலைகளில் தங்களை மூழ்கடித்துக்கொண்டவர்கள் இங்கே பலர் உண்டு. ஆனால், தனக்கு எது பிடித்தமானது என்பதை கண்டறிய முடியாமலேயே பலர் பல வேலைகளை செய்வார்கள். அவர்கள் தான் உண்மையிலேயே மிகவும் பரிதாபமானவர்கள். நீங்களும் அத்தகைய சிக்கலில் இருந்தால், உங்களுக்கு எது பிடித்தமானது என்பதை அறிவதிலேயே சிக்கல் இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கு பலன் தரும்.
இங்கே வாழ வேண்டும் என்றால் உங்களுக்கு பணம் நிச்சயமாக அவசியம். அது இன்றி உங்களால் வாழ இயலாது. நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க நீங்கள் வேலை செய்துதான் ஆக வேண்டும். அந்த வேலை உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறதா? இல்லையா? என்பதிலே தான் முழு சூட்சமும் அடங்கி இருக்கிறது. வாகனம் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கக்கூடிய ஒருவருக்கு ஓட்டுனரை விடவும் அதிக சம்பளம் கொடுத்து அறைக்குள் உட்கார வைத்து வேலை தந்தால் அந்த வேலை அவருடைய வாழ்க்கையை கவலைக்கு உரியதாகவே மாற்றும்.
உங்களுக்கு பிடித்தமான வேலையை தெரிந்துகொள்வது எப்படி?
சிறிய வயதில் நம்மிடம் “நீ எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும்? ” என்று கேட்டால் “மருத்துவர் ஆக வேண்டும்” “கலெக்டர் ஆக வேண்டும்” என்று சொல்லியிருப்போம். இது நாம் மட்டும் சொன்னதல்ல, நம் வயதில் உள்ள லட்சோபலட்சம் பேர் சொன்ன பதிலும் அதுவாகத்தான் இருக்கும். உண்மையிலேயே, அது நமக்கு பிடித்தமானது அல்ல, நமக்குத் தெரிந்தது அது என்பது தான். இப்போது நாம் வளர்ந்தவர்கள், இப்போது உலகம் எப்படி இருக்கிறது என்பது தெரியும். ஆகவே, இப்போது நாம் என்ன சொல்கிறோம் என்பது தான் முக்கியம்.
உங்களுக்கு பிடித்தமானது எது என்பதை தெரிந்துகொள்ள ஒரு சிறிய பயிற்சி இருக்கிறது. இது நீங்கள் உங்களுக்காக செய்யப்போகும் பயிற்சி. ஆகவே உண்மையான பதிலையே கொடுத்திடுங்கள்.
1. பணம் ஒரு பிரச்சனை அல்ல என்றால் நீங்கள் எதை செய்திட விரும்புவீர்கள்
2. உங்களுக்கு எது மிகவும் ஆர்வமானதாக இருக்கும்
3. எதற்க்கு முதலிடம் தருவீர்கள்
இந்தப்பட்டியலை ஒருமுறை தயார் செய்தால் போதாது. தொடர்ச்சியாக சில வாரங்கள் நீங்கள் இந்தப்பட்டியலை தயார் செய்திட வேண்டும். அவற்றை மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும். ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.
அனைத்தையும் பணமாக்கும் வழி இங்கே உண்டு
சமையல் மட்டுமே தெரிந்த ஒரு தாத்தாவால் பல லட்சங்களை மாதம் சம்பாதிக்க முடியும் என சில வருடங்களுக்கு முன்னால் நாம் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இன்று அது சாத்தியமாகிறது. தங்களுக்கு தெரிந்ததை youtube, facebook போன்ற சமூகவலைதளங்களில் காண்பித்து பணமாக்க இன்று முடியும். நீங்கள் உருவாக்கும் ஒரு பொருளை உலகின் ஏதோ ஒரு மூளையில் உள்ளவருக்கு உங்களால் விற்பனை செய்திட முடியும்.
ஆகவே, பிடித்ததை செய்தால் எங்கே ஏழையாக மாறிவிடுவோமா என்று நினைக்காதீர்கள். இங்கே வாழ்வதற்காக மட்டுமே பணம் தேவை. பணம் சம்பாதிக்க வாழ்க்கை அல்ல. ஆகவே, போதும் என்ற மனநிலை கொண்டு நீங்கள் விரும்பியதில் உங்களது கவனத்தை கொண்டு செல்லுங்கள்.
பிறர் என்ன நினைப்பார்கள் என நினைப்பவர்கள் இங்கே சிக்கலான வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அப்படி நினைப்பவர்களால் ஒருபோதும் தங்களுக்கு விருப்பமானதை செய்திடவே முடியாது. ஆகவே, நீங்கள் செய்திடும் வேலை நியாயமானதாக இருந்தால் அதனை செய்திட தயங்காதீர்கள்.
ஒரு கோடி சம்பாதித்துவிட்டு படுக்கையில் கிடப்பதை விடவும் சில ஆயிரங்களை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நடக்கும் மனிதராக நீங்கள் இருப்பது தான் சந்தோசமான வாழ்க்கை.
ஆகவே, உங்களுக்கு விருப்பமான ஒன்றை நோக்கி உங்களை நகர்த்தி செல்லுங்கள்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்