How a photo that can change the world? | உலகினை மாற்றிய ஒற்றை போட்டோ | World Photographers Day

இன்று (ஆகஸ்ட் 19 , 2018 ) புகைப்படக்காரர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது . நண்பர் ஒருவரை எடுப்பதும் புகைப்படம்தான் , காடுகளில் அலைந்து திரிந்து அழகிய அபூர்வமான விலங்குகளையும் பறவைகளையும் படம் எடுப்பதும் புகைப்படம்தான் ,வரலாற்றினை மாற்றிடும்படியான நிகழ்வுகளை எடுப்பதும் புகைப்படம் தான், அதனை எடுப்பவர்கள் அனைவருமே புகைப்படக்காரர்கள் என்கிற ஒற்றை வார்த்தைக்குள் அடங்கிவிடுகிறார்கள் .

 

ஆனால் உண்மையான சிறந்த புகைப்படம் என்பது என்ன தெரியுமா ?

 

புகைப்படத்தை பார்ப்பவரிடத்தில் ஏதோ ஒரு செய்தியினை சொல்ல வேண்டும் , ஏதோ ஒரு தாக்கத்தை மாற்றத்தை அது கொண்டுவர வேண்டும் . அந்த புகைப்படம் தான் சிறந்த புகைப்படம் , அதனை எடுப்பவரே சிறந்த புகைப்படக்காரர் .  

 

உலக வரலாற்றில் அப்படி பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன . அவற்றால் ஒட்டுமொத்த உலக நாடுகளின் மத்தியிலும் மக்களின் மத்தியிலும் மிகப்பெரிய மாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன . அப்படிப்பட்ட ஒரு புகைப்படத்தை பற்றித்தான் புகைப்படக்காரர்கள் தினத்தில் பார்க்க இருக்கின்றோம் .

 

உலகினை உலுக்கிய அயலான் குர்தி யின் புகைப்படம்

 

கடற்கரை  மணலில் இறந்து கிடக்கும் அயலான் குர்தி
கடற்கரை  மணலில் இறந்து கிடக்கும் அயலான் குர்தி

 

அயலான் இறந்து கிடந்ததை புகைப்படம் எடுத்த நிலுபர் டேமிர்
அயலான் இறந்து கிடந்ததை புகைப்படம் எடுத்த நிலுபர் டேமிர்

 

இந்த இளம் பெண் எடுத்த அயலான் என்கிற சிறுவனின் புகைப்படம் தான் குடியேறிகளின்  மீதான உலகநாடுகளின் கவனத்தையும் மக்களின் ஆதரவையும் பெற்றுத்தந்தன .

 

2015 செப்டம்பர் மாதம் துருக்கிக்கு சிரிய அகதிகள் கடல்மார்க்கமாக பயணம் செய்தனர் . அந்த காலகட்டத்தில் துருக்கி மட்டுமல்லாது பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு , செலவினம் உள்ளிட்ட காரணங்களை கூறி அகதிகளுக்கு புகலிடம் கொடுக்க மறுத்துவந்தன . இதனால் கடலிலேயே காத்துக்கிடக்கும் நிகழ்வுகளும் திரும்பி போர் நடக்கும் தங்களது இடங்களுக்கே வந்துவிடும் நிகழ்வுகளும் நடந்துவந்தன. பல சமயங்களில் கடலிலேயே அகதிகள் மாய்ந்துபோன நிகழ்வுகளும் நடந்துவந்தன .

 

மக்களின் மத்தியிலும் அகதிகள் குறித்த கவனம் அவ்வளவாக இல்லை . இதனால் அகதிகளுக்கு உதவி செய்திடும் தொண்டு நிறுவனங்களும் பணமின்றி தவித்து வந்தன .இந்த சூழலில் தான் அகதிகளாக வந்த சிறுவன் கடற்கரை மணலில் முகம் புதைந்து கிடக்கின்ற புகைப்படத்தினை எடுத்தார் நிலுபர் டேமிர்.

 

முன்னனி பத்திரிக்கைகளிலும் செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் வெளியான இந்த புகைப்படத்தினை கண்டு அதுவரை அகதிகளுக்கு அனுமதி மறுத்த நாடுகளை அனுமதி கொடுக்கச்செய்தது , அரசு அகதிகளுக்கு அனுமதி கொடுக்காத பட்சத்தில் அனுமதி கொடு என அந்நாட்டு மக்களையே போராட தூண்டியது .

 

இந்த புகைப்படம் வெளியான பிறகு ஏற்பட்ட தாக்கம் குறித்த ஆய்வின் முடிவில் …..

 

தொண்டு நிறுவனங்களுக்கு மக்களிடம் இருந்து வந்த உதவித்தொகை 3850 அமெரிக்க டாலரிலிருந்து 214300 டாலராக அதிகரித்தது (55 மடங்கு அதிகம்)

 

அடுத்த ஆறு வாரத்திற்கு பிறகு வந்த உதவித்தொகை 6500 டாலர் (குறைந்தது )

 

தற்போது நாமும் உலகமும் சிரியா போன்ற நாடுகள் குறித்து பேசுவதற்கும் அகதிகள் மீதான பார்வையை உலக நாடுகள் மாற்றிக்கொண்டதற்கும் இந்த புகைப்படம் மிகப்பெரிய காரணம் .

 

நாம் ஏன் மாற்றம் தரக்கூடிய புகைப்படத்தினை எடுக்க கூடாது ?

 

அப்பொதெல்லாம் கேமெராக்களை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியிருந்தன.      இப்போது மொபைல் போனிலேயே மிகச்சிறந்த போட்டோக்களை எடுக்கும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது .

 

நமது பகுதிகளிலும் பல பிரச்சனைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன . நாம் ஏன் விழிப்புணர்வினை ஏற்படுத்திடக்கூடிய புகைப்படத்தினை எடுக்க கூடாது ? முயல்வோம் !

 

பாமரன் கருத்து
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *