கர்ப்பிணிக்கு HIV ரத்தம் | தண்டணை கடுமையாக்கப்பட வேண்டும்

 


 

எச்ஐவி பாதித்தவரின் ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டுள்ளது



சாத்தூரில் எச்ஐவி பாதித்தவரின் ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டுள்ளது. இதை செய்தியாக நாம் கடந்து சென்றுகொண்டு இருக்கின்றோம் . 

 

எய்ட்ஸ் நோய்க்கிருமிக்கு இதுவரை முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் அந்த பெண்ணுக்கு எவ்வளவு சிகிக்சை அளித்தாலும் குணப்படுத்திட இயலாது என்பதே உண்மை .  முறையான சிகிக்சை அளித்தால் பிறக்கப்போகும் குழந்தையை எய்ட்ஸ் தொற்று பாதிப்பிலிருந்தது மீட்கலாம் .

 

 

அந்த பெண்ணுக்கு நடந்த அநீதிக்கு எதிராக அரசாங்கம் இழப்பீடு , அரசு வேலை முதலியவற்றினை கொடுக்கலாம் . ஆனால் அது போதுமா ?

 

ஒரு மனிதரின் வாழ்வினை அலட்சியத்தால்  கெடுத்தவர்களுக்கு என்ன தண்டணை கொடுக்க போகிறோம் ?

 

வெறும் இடைநீக்கமோ அல்லது இடமாற்றலோ தானா ?


குற்றம் நடந்துவிட்டது . இனி இதுபோன்ற குற்றம் நடைபெறாது என்பதற்கு 100 சதவிகிதம் உறுதித்தன்மையை பெறுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் செய்துவிட்டதா? இதுவரையில் அப்படியேதும் தென்படவில்லை .

 

 

 

இப்படிப்பட்ட அலட்சியத்தால் இன்னும் எத்தனைபேருக்கு இந்த கொடுமை நடக்கபோகிறதோ என்ற அச்சம் நிலவுகின்றது . நாளை ஒரு மருத்துவமனைக்கோ ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ சென்று ஊசி எப்படி நிம்மதியாக போட இயலும் .

 

தமிழகத்தில் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் , அரசு மருத்துவமனைகளிலும் நம்பிக்கையோடு சிகிக்சை பெற்றுவரக்கூடிய சூழலில் இதுபோன்ற குற்றங்கள் ஏழை மக்களின் உயிரை பறிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருவித அச்சத்தை உண்டாக்கிவிடும் .

 


தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்

 


கொலையை விட பெருங்குற்றம் இப்போது நடந்திருப்பது . ஆனால் இன்னமும் துறை ரீதியிலான விசாரணையே நடைபெற்றுவருகிறது . இனி குற்றவாளிகளுக்கு சிறை தண்டணை அளிக்கப்படுமா அல்லது வழக்கம்போல இடைநீக்கம் செய்வதோடு முடிந்துவிடுமா என தெரியவில்லை .

மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக பெற்றுக்கொண்டு இவர்கள் மட்டுமல்ல அரசுத்துறையில் எவர் தவறு செய்தாலும் சிறை தண்டணை அளித்து அவர்களை பணி நீக்கம் செய்துவிட வேண்டும் .

தண்டனைகள் கடுமையானால் ஒழிய குற்றங்களை தடுக்க இயலாது .


பாமரன் கருத்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *