புலிட்சர் பரிசு உருவான வரலாறு | ஜோசேப் புலிட்சர் | மஞ்சள் பத்திரிகையின் தந்தை
பத்திரிக்கை மற்றும் இலக்கிய, இசைத்துறையில் மிக உயர்ந்த விருதாக ‘புலிட்சர் பரிசு அல்லது புலிட்சர் பரிசு’ கருதப்படுகிறது. நியூயார்க்கில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவ்விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. முதல் முறையாக புலிட்சர் பரிசு 1917 ஆம் ஆண்டுதான் வழங்கப்பட்டது.
இன்று ஊடகவியல், இலக்கியம், இசை உள்ளிட்டத் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுகிற உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் புலிட்சர் பரிசு என்பது ஜோசேப் புலிட்சர் என்பவர் கொலம்பியா பல்கலைக்கழகத்திடம் விட்டுச்சென்ற நிதியின் மூலமாகவே வழங்கபடுகிறது. இப்படியொரு விருதினை வழங்க வேண்டும் என அவர் விரும்பியே குறிப்பிட்ட தொகையை பல்கலைக்கழகத்திடம் விட்டுசென்றார். அவர் விட்டுச்சென்ற தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் (School of Journalism) தொடங்கப்பட்டது. முதலாவது புலிட்சர் பரிசு 1917 இல் வழங்கப்பட்டது. தற்போது ஆண்டு தோறும் இவ்விருது ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.
புலிட்சர் பரிசில் ஒரு ஆச்சர்யமான விசயம் ஒன்று அடங்கி இருக்கிறது. ஒருவரின் பெயரால் ஒரு விருது வழங்கப்படுமாயின் அந்த நபர் குறிப்பிட்ட துறையில் மாபெரும் சாதையொன்றினை நிகழ்த்தி இருக்கவேண்டும் என்று தானே அனைவரும் எண்ணுவோம். ஆனால் புலிட்சர் பரிசின் நாயகரான ஜோசேப் புலிட்சர் பெரும்பாலானவர்களால் தவறான அணுகுமுறை என அறியப்பட்ட ‘yellow journalism’ என்பதனை அறிமுகப்படுத்தியவர். yellow journalism என்பது ஒரு விசயத்தை ஆராய்ந்து அதன் அடைப்படையில் செய்திகளை பிரசுரிப்பதை விட்டுவிட்டு கண்களைக் கவரும் தலைப்புகளை போட்டு மக்களிடம் செய்தித்தாள்களை விற்பது என பொருள்படும். இன்று பல தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்கள் இத்தகைய வழிமுறையைத்தான் பின்பற்றி மக்களை பார்க்கும்படி செய்கின்றன. பார்த்தால் தான் தெரியும் அதில் ஒன்றுமே இல்லை என்பது.
Yellow Journalism அல்லது மஞ்சள் பத்திரிகை என்பது ஒரு நிகழ்வைப் பற்றி முழுமையாக ஆராய்ந்திடாமலோ அல்லது கிடைத்த செய்தியின் ஒரு பகுதியை மட்டுமோ வைத்துக்கொண்டு, கண்கவர் தலைப்புச்செய்திகளை பயன்படுத்தி,மிகைப்படுத்தி மக்களை பார்க்கும் படி செய்கின்ற பத்திரிகைகள் மஞ்சள் பத்திரிக்கை என அழைக்கப்படும்.
ஜோசேப் புலிட்சர் என்பவர் ஹங்கேரி நாட்டில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். New York World எனும் பத்திரிக்கை நிறுவனத்தை இவர் நடத்தி வந்தார். 1890 களில் இவரது பத்திரிக்கை விற்பனையில் பல சாதனைகளை படைத்தது. கண்கவர் தலைப்புகளை இட்டு இவரது பத்திரிக்கை விற்பனையை பல மடங்கு கூட்டியிருந்தார் புலிட்சர். நியூயார்க்கில் செயல்பட்டு வரும் New York World பத்திரிக்கையை பின்பற்றி வில்லியம் ஆர் ஹியர்ஸ்ட் என்பவர் சான்பிரான்சிஸ்க்கோவில் San Francisco Examiner எனும் பத்திரிக்கையை நடத்தி வந்தார். இவர் New York Journal எனும் பத்திரிகையை விலைக்கு வாங்கிய பிறகு நியூயார்க் பத்திரிக்கை துறையில் ஜோசேப் புலிட்சர் மற்றும் ஹியர்ஸ்ட் இருவருக்கும் போட்டி அதிகமானது. ஹியர்ஸ்ட் ஏற்கனவே புலிட்சர் அவர்களின் முறையை பின்பற்றியே முந்தைய பத்திரிகையை நடத்தி வந்ததால் New York Journal பத்திரிக்கையிலும் அதே முறையை பயன்படுத்தினார்.

மஞ்சள் பத்திரிக்கை என்பதற்கும் இதழியல் துறைக்கும் புலிட்சர் காலத்துக்கு முன்புவரை சம்பந்தம் எதுவும் இல்லை. பின்வரும் நிகழ்வுதான் இரண்டையும் சம்பந்தப்படுத்தியது.
ரிச்சர்ட் எஃப் அவுட்கால்ட் எனும் கார்ட்டூனிஸ்ட் வரைந்த ஹோகனின் ஆலி எனும் கார்ட்டூன் புலிட்சரின் New York World பத்திரிகையில் பிரசுரமானது. இது நியூயார்க்கின் சேரிகளில் உள்ள வாழ்க்கையைப் பற்றிய பிரபலமான கார்ட்டூன். 1895 ஆம் ஆண்டு தொடங்கி, புலிட்சர் ஒரு மஞ்சள் நைட்ஷர்ட்டில் ஒரு வழுக்கைப் பையனைக் கொண்ட காமிக் துண்டுகளை “மஞ்சள் குழந்தை” என்ற தலைப்பில் அச்சிட்டார். புலிட்சரின் New York World இல் வெளியிடப்பட்ட கார்ட்டூன் மிகவும் பிரபலமடைந்து விற்பனையை பெருமளவில் அதிகரித்தது.
‘
1896 இல் புலிட்சரிடமிருந்து அவுட்கால்ட் எனும் கார்டூனிஸ்ட்டை பிரித்தார் ஹியர்ஸ்ட். புலிட்சர் அவரது பத்திரிகையில் பிரசுரித்தது போலவே கார்ட்டூன்களை தனது New York Journal பத்திரிகையிலும் பிரசுரித்தார். புலிட்சர் இன்னொரு கார்டூனிஸ்ட்டை பணிக்கு அமர்த்தி அவரும் இதே போன்றதொரு கார்ட்டூன்களை தொடர்ந்து பிரசுரித்து வந்தார். இப்படி முன்னனி பத்திரிகைகள் இரண்டும் மஞ்சள் வண்ணத்தில் இருந்த ஒரு சிறுவனின் கார்டூனைக்கொண்டு போட்டிபோட்டுக்கொண்டு இருந்தபடியால் உருவானதே ‘மஞ்சள் பத்திரிக்கை’ எனும் பெயர்.
பத்திரிக்கை துறையில் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை கொலம்பியா பல்கலைக்கழகத்திடம் கொடுத்து பத்திரிக்கை துறைக்கான இருக்கை ஒன்றினையும், இதழியல், இசை, இலக்கியம் இவற்றில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு பரிசு வழங்கும் படியும் கேட்டுக்கொண்டார். புலிட்சர் அக்டோபர் 29,1911 அன்று இறந்தார். அவர் இறக்கும் வரையிலும் இவ்விருது வழங்கப்படவில்லை. அதன் பின்னரே முதல் விருதானது 1917 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
2020 புலிட்சர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்கள்
Congratulations to Channi Anand, Mukhtar Khan and @daryasin of @AP. #Pulitzer pic.twitter.com/SJzGyK3sXq
— The Pulitzer Prizes (@PulitzerPrizes) May 4, 2020
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு இருந்த நிலையில் அங்கு நடந்த காட்சிகளை படமாக்கிய அசோசியேட் பத்திரிக்கையைச் சேர்ந்த முக்தர் கான், யாசின் தர், சன்னி ஆனந்த் ஆகிய மூவர் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த 370 சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது அங்கு நடந்த சம்பவங்களை அசோசியேட் பிரஸ்ஸில் பணி புரிந்து வரும் புகைப்பட பத்திரிக்கையாளர்களான முக்தர் கான், யாசின் தர், சன்னி ஆனந்த் ஆகிய மூவர் புகைப்படங்கள் எடுத்தனர். இவர்களது புகைப்படங்களை சிறந்த புகைப்படங்களாக புலிட்சர் அமைப்பு தேர்வு செய்துள்ளது.
The Pulitzer winning photos from Channi Anand, Dar Yasin and Mukhtar Khan 1/x pic.twitter.com/7AmhzBwch2
— Dushyant (@atti_cus) May 5, 2020
அம்மாவால் எடிசன் என்ற மாபெரும் அறிஞன் உருவான கதை
ஔவை – முருகன் சந்திப்பு நடைபெற்றதா?
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!