Google’s New “Android Messages” App | How it Works | Like WhatsApp

தற்போது பல சாட் ஆப்கள் (Chat Applications) இருக்கின்றன , What’sApp, Hike, WeChat என நீண்ட பட்டியலே இருக்கின்றது. ஆனாலும் தற்போது இணைய உலகின் முன்னனி ஜாம்பவனாக இருக்க கூடிய கூகுள் (Google) நிறுவனமும் தனது சாட் ஆப்பினை (Android Messages App) வெளியிட்டுள்ளது .

Google’s new Chat App : Android Messages

தற்போது கூகுள் playstore இல் Android Messages App கிடைக்கின்றது. இந்த ஆப்பில் text message , emoji ,Images, Stickers என அனைத்தையும்  அனுப்பலாம் .

Android Messages App – Desktop Chat :

இந்த ஆப்பை பயன்படுத்தி ஆப் மூலமாக நண்பர்களுடன் சாட் செய்ய முடியும் . கூடுதலாக உங்களது கணிணியில் இருந்தும் நண்பர்களுக்கு சாட் செய்ய முடியும் . இதற்கு உங்களது மொபைலில் இந்த ஆப்பினை இன்ஸ்டால் செய்து கணக்கினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் .

உங்களது கணிணி பிரவுசர் , மொபைல் பிரவுசர் , ஆப்பிள் மொபைல் மற்றும் ஐபாட் பிரௌசர் (safari browser) ஆகியவற்றில் இயங்கும் .

பிறகு உங்களது கணிணி பிரவுசரில் இந்த இணையதள முகவரிக்கு http://messages.android.com/ சென்று உங்களது ஆப்பின் மூலமாக பிரவுசரில் காட்டுகின்ற QR Code ஐ ஸ்கேன் செய்தால் போதும் , உங்களால் கணிணியில் இருந்தே சாட் செய்ய முடியும் .

இந்த Desktop Chat வசதி ஏற்கனவே What’sApp இல் இருப்பது குறிபிடத்தக்கது .

ஏற்கனவே இதேபோன்று பல சாட் ஆப்கள் இருந்தாலும் கூகுள் கொண்டுவந்திருக்கிறது என்றால் ஏதாவது காரணம் நிச்சயமாக இருந்தே தீரும் . அந்த வசதிகளை பிற்காலங்களில் கொண்டுவரும் என நம்பலாம் .

Android Messages App சில சிறப்பம்சங்கள் :

உங்களது வீட்டுக்கணினியில் பயன்படுத்திடும்போது “Remember this computer ” ஆப்சனை பயன்படுத்திக்கொள்ளலாம் . அது மீண்டும் மீண்டும் QR Code ஸ்கேன் செய்வதை குறைக்கும் .

உங்களது மொபைல் ஆப்பில் இருந்தே கணிணியில் logout செய்திடலாம் .

எப்படி WhatsApp ஐ கணிணியில் பயன்படுத்தும்போது மொபைலிலும் இண்டெர்நெட் இணைப்பு இருக்க வேண்டுமோ அதேபோலவே தான் இந்த Android Messages ஆப்பிற்க்கும் .

Pamaran Karuthu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *