தமிழ் மொழியை ஏற்றது கூகுள் ஆட்சென்ஸ் (Google Adsense) – தமிழ் இணையதளத்தின் மூலமாக இனி சம்பாதிப்பது எப்படி ?

இணையத்தின் அடிப்படை இணையத்தளங்களும் தரவுகளும் தான் . சிலர் இணையதளங்களை இலவசமாக தொடங்கி தகவல்களை பகிரலாம் . சிலர் வருவாயை எதிர்பார்த்து தகவல்களை பகிரலாம் .
அவ்வாறு தொடங்கப்படும் இணையதளங்களின் முக்கிய வருவாய் என்பது அதில் பிரசுரிக்கப்படும் விளம்பரத்தின் மூலமாகவோ , சப்கிரிப்சன் மூலமாகவோ கிடைக்கும் .
இணையதளங்களைபதிவு செய்ய தரவுகளை சேமித்து வைக்க இடம் வாங்க நாம் குறிபிட்ட தொகையை செலவு செய்ய வேண்டி இருக்கும் .
நம் இணையதளத்தில் விளம்பரங்களை காண்பிக்க வேண்டுமெனில் “Publisher” என அழைக்கப்படும் நிறுவனத்தில் நம் இணையதளத்தை பதிவிட்டு அவர்கள் கொடுக்கும் Tag Code ஐ நம் இணையத்தில் போட்டால் விளம்பரங்கள் நம் இணையதளத்தில் காண்பிக்கப்படும் . எத்தனை முறை காண்பிக்கப்படுகிறதோ  அதற்கேற்றவாறு உங்களுக்கு பணம் கொடுக்கப்படும் .
இணைய உலகில் முன்னனி Publisher நிறுவனமாக இருப்பது கூகுள் , அதுவே தற்போது கூகுள் ஆட்சென்ஸ் மற்றும் ஆட்வார்டஸ் என இரண்டு அப்ளிகேஷன்களை வைத்திருக்கிறது.
அதில் உங்களுடைய இணையதளத்தை பதிவு செய்யவேண்டுமெனில் உங்களது இணையதளத்தில் பயன்படுத்தி இருக்கக்கூடிய மொழி கூகுள் ஏற்றுக்கொண்ட மொழியாக இருக்க வேண்டும் . உலகின் பல மொழிகள் அந்த வரிசையில் இருந்தபோதும் தமிழ் மொழி இல்லாததால் தமிழ் இணையத்தளங்கள் விளம்பரங்களுக்காக பிறரை நாடி செல்ல வேண்டி இருந்தது .

இது சிரமத்தையும் இணையதளம் மூலமாக வரும் வருமானத்தையும் குறைத்துவந்தது .

 

தமிழை அங்கீகரித்த கூகுள் ஆட்சென்ஸ் :

 

அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இருந்து ஆங்கிலம் அல்லாமல் மாநில மொழிகளில் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்களில் 42 சதவிகிதம் தமிழ் மொழி , அதற்கு அடுத்ததாக 39 சதவிகிதம் இந்தி என கண்டறியப்பட்டுள்ளது .

அதிக பயன்பாட்டாளர்களை கொண்டிருந்தும் தமிழை அங்கீகரிக்காமல் இருந்த கூகுளிடமும் அதன் முதன்மை அதிகாரியான தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சையிடமும் வலியுறுத்தப்பட்டது .

ஆகையால் தமிழை கூகுள் நிறுவனம் அங்கீகரித்துள்ளது . இதன் காரணமாக இனி தமிழில் இணையத்தை வைத்திருப்பவர்கள் இனி பணம் சம்பாதிக்கலாம் . இதன் காரணமாக அதிக அளவில் தகவல்கள் தமிழில் இணையத்தில் பகிரப்படலாம்  .

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *