பழக்கடைக்காரர் கரோனா வைரஸ் பரப்பினாரா? உண்மை என்ன?

தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பழக்கடைக்காரர் பழத்தை அடுக்கிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு பழத்தை அவர் எடுப்பதற்கு முன்னாலும் தனது எச்சிலை அவர் தொட்டு பிறகு பழத்தை அடுக்குகிறார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஒரு முஸ்லீம் எப்படி கரோனா வைரஸை பரப்புகிறார் என பாருங்கள் என பதிவிட்டு வருகிறார்கள் பலர். அதை பகிர்வதற்கு முன்னாள் நீங்கள் படிக்க வேண்டிய பதிவு இது. இந்த வீடியோ ஏப்ரல் 3,2020 அன்று Muslim corona suspect என்ற தலைப்போடு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பேஸ்புக்கில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ்ஆப்பில் கட்டுக்கடங்காமல் பகிரப்பட்டு வருகிறது



முஸ்லீம் பழக்கடைக்காரர் கரோனா வைரஸ்

இந்த வீடியோ உண்மையானதா?

ஆமாம், இந்த வீடியோ உண்மையானது தான். ஆனால் தற்போது நடந்தது அல்ல.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது?

இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பவர் போத்ராஜ். அவரது கூற்றுப்படி இந்த சம்பவம் பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை 5PM க்கு நடந்திருக்கிறது. இவரும் இவரது நண்பரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரைசென் என்ற பகுதியில் இருக்கும் போது ஒரு கடைக்காரர் பழங்களை அடுக்கும் போது தொடர்ச்சியாக தனது எச்சிலை தொடுவதை பார்த்திருக்கிறார்கள். இந்த வீடியோவை எடுத்து அவர்கள் தான் இந்த கடைக்காரர் மீது புகார் அளித்திருக்கிறார்கள்.

கடைக்காரர் யார்?

புகாருக்கு உள்ளான கடைக்காரர் பெயர் செரு மியான் [Sheru Miyan].

இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதா?

ஆமாம், மத்தியபிரதேச காவல்துறை இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. [IPC 269 (Negligent act likely to spread infection of disease danger­ous to life) and 270 (Malignant act likely to spread infection of disease dangerous to life)] வழக்கு பதியப்பட்ட நாள் ஏப்ரல் 03, 2020.

ஏன் இவர் அப்படி செய்தார்?

ஏன் இப்படி செய்தீர்கள் என அவரிடம் விசாரித்தபோது “எனக்கு அப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை, நாம் எப்போதும் போல பழங்களை அடுக்கிக்கொண்டு இருந்தேன்” என்று கூறியிருக்கிறார். அவரது மகள் இந்த பிரச்சனை குறித்து பேசும் போது “எனது அப்பா எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் இந்த தவறை செய்துவிட்டார். அவர் பணம் எண்ணும் பழக்கத்தினால் இப்படி நடந்துகொண்டிருக்கலாம். மேலும் 2 மாதம் கழித்து பழைய வீடியோ ஒன்றினை தற்போதைய சூழலில் தேவையில்லாமல் பரப்பிவிடுகிறார்கள்.” என பேசினார்.

நாம் செய்ய வேண்டியது என்ன?

அவர் ஒரு கொரோனா வைரஸ் தொற்று கொண்டவர் அல்ல. ஆகவே அவர் கொரோனா வைரஸ் பரப்பும் எண்ணத்தோடு இதனை செய்திருக்க வாய்ப்பில்லை. காவல்துறையினர் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். அவர் இப்படி செய்தது தவறுதான் என்றாலும் கூட ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் முஸ்லீம் மக்கள் குறித்தும் இணைத்து பேசப்படுகிற இந்த சூழலில் நாம் இந்த வீடியோவை பரப்புவது சரியல்ல.

குறைந்தபட்சம் நேர்மையோடு உண்மையை உணர்ந்து செயல்படுங்கள்.


Get updates via WhatsApp





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *