Facebook Feature : Real Eye Opener | போட்டோவில் கண்களை மூடினால் facebook சரி செய்யபோகிறதாம்

பல நண்பர்கள் இணைந்து ஒரு குரூப் போட்டோ எடுக்கிறோம் , அதனை facebook இல் அப்லோட் செய்யும்போதுதான் ஒரு நண்பர் மட்டும் கண்களை மூடிக்கொண்டிருப்பது தெரிகின்றது . அந்த நண்பர் மட்டும் கண்களை திறந்து இருந்தால் அற்புதமான போட்டோவாக அது இருந்திருக்கும் . அதற்காக மீண்டும் அந்த இடத்திற்கு அத்தனை நண்பர்களையும் அழைத்துக்கொண்டா சென்று மீண்டும் எடுக்க முடியும் .

நிச்சயம் முடியாது , வேண்டுமானால் போட்டோஷாப்பில் சிறு வேலை செய்து அவர் கண்களை வேறொரு இடத்திலிருந்து கட் செய்து பேஸ்ட் செய்யலாம் அதுவும் அவ்வளவு சரியானதாக இருக்காது .

உங்களது பிரச்சனைகளை மிக எளிமையாக சரி செய்ய facebook புது AI (Artificial intelligence ) சிஸ்டம் ஒன்றினை வடிவமைத்துள்ளனர் .

facebook ஆய்வாளர்கள் கொடுத்துள்ள GAN (Generative Adversarial Network) இல் இரண்டு பகுதிகள் இருக்கின்றன . ஒரு பகுதி போட்டோவில் இருக்கக்கூடிய முகங்களை அறிந்துகொள்ளும் , அதற்கு அடுத்த பகுதி தொடர்ச்சியாக பல புகைப்படங்களை Recognition part இல் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கிக்கொண்டே வரும் .

facebook இல் நீங்கள் ஏற்கனவே பதிவேற்றி இருக்கக்கூடிய பல புகைப்படங்களை ஆராய்ந்து சேகரித்து அந்த தகவல்கள் அனைத்தும் exempler இல் சேமித்து வைக்கப்படும் . இதில் இருந்து பெறப்படும் தகவல்களை (குறிப்பாக எவ்வாறு கண்கள் திறந்துள்ளன , கண்களுக்கு அருகிலே உள்ள கலர் என்ன இன்னும் பல …..) போன்றவற்றினை கொண்டு முடிந்தவரையில் கண்களை திறந்தவண்ணம் இருக்கக்கூடிய புகைப்படங்களை உருவாக்குகிறதாம் .

சோதனைக்காக இந்த முறைப்படி சரிசெய்யப்பட்ட படங்களை 50 விழுக்காடு நேரங்களில் உண்மையான படங்களில் இருந்து வேறுபடுத்தி காண முடியவில்லையாம் .

Normal photo | closed eyes | Photoshop change | Facebook change

ஏற்கனவே போட்டோஷாப் போன்றவற்றில் இல்லாத கலரினை அருகில் இருக்கக்கூடிய கலரினை ஒப்பிட்டு பூர்த்தி செய்யக்கூடிய வசதிகள் இருந்தாலும் facebook அதனை விட பல மடங்கு எளிமையாக மற்றும் துல்லியமாக கண்களை திறந்திருக்கும் போட்டோக்களை வழங்கிட இருப்பது வரவேற்புக்கு உரியது .

தற்போது சோதிக்கப்பட்டதில் முடியினால் பாதி கண்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ அல்லது சில சமயங்களிலோ சரியாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது .

இருந்தாலும் இவ்வளவு பெரிய விசயத்தை மிக எளிமையாக பயனாளர்களுக்கு வழங்குவது என்பது மிக சிறப்பு வாய்ந்த ஒன்று .

Thank you : TechCrunch

Pamaran Karuthu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *