How Facebook Dating App will work? | Facebook Dating சர்வீஸ் எப்படி வேலை செய்யும் தெரியுமா ?

 

Facebook நிறுவனத்தின் வருடாந்திர F8 டெவலப்பர்கள் பங்கேற்ற அரங்கினில்  Facebook நிறுவனர் மார்க் “Facebook டேட்டிங் சர்வீஸ் வழங்க இருக்கிறது” என அறிவித்தார். ஏற்கனவே பல இணையதளங்களால் டேட்டிங் சேவை வழங்கப்பட்டு வந்தாலும் Facebook சேவை வழங்க இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யம் தரக்கூடியதே.

 

Protecting users privacy will be a top priority

 

ஏற்கனவே தகவல் திருட்டினால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்துள்ள Facebook, இழந்த நம்பிக்கையை மீட்க முடிந்த அளவிற்க்கு முயன்று வருகிறது. அதற்க்கான செயல்பாடுகளை Facebook செய்துவருவதாக ஏற்கனவே மார்க் அறிவித்திருந்தார். Facebook ஆப்பில் இருப்பதை போலவே பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அதி முக்கியத்துவத்துடன் பாதுகாக்கப்படும் என தெரிகிறது.

 

Facebook டேட்டிங் சேவையில் இணைவது எப்படி | How to Join on Facebook Dating Service? 

 

 

ஏற்கனவே நீங்கள் Facebook ஆப் பயன்படுத்துபவராக இருந்தால் அந்த கணக்கினை வைத்தே Facebook டேட்டிங் சேவையினை பெறலாம். இதற்க்கு உங்கள் புரொபைல் க்குள் நுழைந்து உங்களது DP க்கு மேலே இருக்க கூடிய ஹார்ட் பட்டனை அழுத்திட வேண்டும். அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் Facebook டேட்டிங் சேவைக்காக புதிய ப்ரொபைலை ஏற்படுத்த வேண்டும்.

 

Facebook டேட்டிங் சேவையில் சாட் (Chat) செய்வது எப்படி | How to Start Chat on Dating App?

 

ஒத்த கருத்துடைய ஒத்த விருப்பமுடையவர்களை இணைப்பதே இதன் முக்கிய நோக்கம்

 

தற்போது இருக்கக்கூடிய facebook ஆப்பில் நீங்கள் நண்பர்களாக இணைந்தவுடன் மெசஞ்சர் மூலமாக சாட் செய்ய முடியும். ஆனால் Facebook டேட்டிங் சேவை முற்றிலும் மாறுபட்டது. உங்களது விருப்பம்,இருப்பிடம்  மற்றும் சில தகவல்களை அடிப்படையாக கொண்டு அதுவே உங்களுக்கு சில குரூப் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களை அளிக்கும்.

 

உதாரணமாக உங்கள் ஊரில் ஒரு பொருள்காட்சி நடக்கிறது என வைத்துக்கொண்டால் அதற்க்கு செல்ல விருப்பம் என நீங்கள் கொடுப்பீர்கள். அதே பொருள்காட்சிக்கு செல்ல வேறு சிலரும் செல்ல விருப்பம் தெரிவித்து இருந்தால் அவர்கள் குறித்த தகவல்கள் உங்களுக்கு தெரியும். அவர்களுடன் நீங்கள் சாட் செய்ய முடியும்.
ஆனால் உங்களால் ஒரே ஒரு முறை மட்டுமே அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியும். அவர்கள் பதில் அளித்தால் உங்களது பேச்சினை தொடரலாம். இதனால் தொந்தரவு செய்வது தடுக்கப்படும். மேலும் இந்த சாட் வசதியில் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்ப முடியும், புகைப்படமோ வீடியோவோ அனுப்பிட முடியாது.

 

ஏற்கனவே facebook சேவையினால் தெரியாதவர்களுடன் பழகி பலர் ஏமாறும் தொடர் கதைகளை நாம் கேட்டுக்கொண்டு வரும் சூழ்நிலையில் இந்த புதிய டேட்டிங் வசதி என்ன மாதிரியான மாற்றங்களை பாதிப்புகளை ஏற்படுத்த போகிறது என தெரியவில்லை.

 

தொழில்நுட்பங்கள் எப்போதுமே குறைபாடுகளை கொண்டவையாகத்தான் இருக்க முடியும். மனிதர்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *