டூம்ஸ்டே கடிகாரம் என்றால் என்ன? | Doomsday Clock Meaning In Tamil
பெரும்பாலனவர்களுக்கு இந்த பெயர் புதியதாக இருக்கலாம், ஒரு சிலருக்கு தெரிந்தும் இருக்கலாம். உலக அழிவு உறுதி என்று நம்புவர்கள் “வேர்ல்ட் எண்ட் பிலிவர்ஸ் (World End Belivers)” என்றும், டூம்ஸ்டே எனப்படும் உலக இருப்பின் கடைசி நாள் என்பதை நம்புபவர்கள் டூம்ஸ்டே பிலிவர்ஸ் (Doomsday Belivers) என்றும் குறிப்பிடப்படுவார்கள்.
உலக இறுதி நாளினை கணக்கிட்டு காட்டும் இந்த கடிகாரம் 1947ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுபினர்களின் பங்களிப்புடன் நிறுவப்பட்டது. இந்த கோட்பாட்டின்படி நள்ளிரவு தான் ஒரு பேரழிவு நடைபெறும் என்பது நம்பிக்கை.
2016ம் ஆண்டு இந்த கடிகாரம் 12 மணிக்கு 3 நிமிடம் முன்பாக செட் செய்யப்பட்டுள்ளது. அதாவது உலக பேரழிவு நடக்க இன்னும் 3 நிமிடங்களே உள்ளன என்பதே இதன் பொருள். அப்படி என்றால் இன்னும் மூன்று நிமிடங்களில் உலக பேரழிவு நடைபெற்றுவிடுமா என்றால், இல்லை என்றே கூறலாம்.
இந்த ‘டூம்ஸ்டே’ உலக நிகழ்வுகளையும் பருவநிலை மாற்றங்களையும் கூர்ந்து ஆராய்ந்து நமக்கு அளிக்கும் ஒருவித எச்சரிக்கையே இந்த கடிகாரம். 2012-ஆம் ஆண்டில், கடிகாரம் நள்ளிரவிற்க்கு மிக நெருக்கமாக (அதாவது நள்ளிரவிற்கு 5 நிமிடங்கள் ) சென்றது, ஏனெனில் அணு படைக்கலங்கள் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய அச்சுறுத்தல்கள் அந்த ஆண்டில் அதிகமாக இருந்தது.
இப்பொழுது இந்த இடைவெளி 3 நிமிடங்களாக குறைக்ப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த உலகம் 2012ஐ விட மிகுந்த அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கிறது என்பதே இதன் பொருள். அமெரிக்க ரஷ்ய சீனா, வடகொரியா போன்ற நாடுகளின் அணு ஆயுத பரவல், பருவநிலை மாற்றம், சுற்றுசூழல் மாசபாடு போன்றவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பூமியின் ஆயுள் குறைந்து வருவதையே இந்த கடிகாரத்தின் 3 நிமிட இடைவெளி நமக்கு உணர்த்துகின்றது.
இந்த கடிகாரத்தின் நிமிடங்கள் குறைந்து கொண்டே வருவது இந்த உலகிற்கு நல்லதல்ல. அனைத்து நாடுகளும் மக்களும் இதை உணர்ந்து செயல்படவே இந்த டூம்ஸ்டே கடிகாரம்.
பாமரன் கருத்து