CobraPost : Dinanalar “Hindutuva” Support Exposed | கோப்ராபோஸ்ட் தினமலர் “இந்துத்துவா” முகத்திரை கிழிப்பு

பல நாளிதழ்களின் முக்கியஸ்தர்களுடன் ஸ்டிங் ஆபரேஷனை மேற்கோண்டுள்ளது . இதில் பல நாளிதழ்கள் ஹிந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக வேலைசெய்வதற்கு ஒப்புக்கொள்வதை வீடியோவாக வெளிப்படுத்தியுள்ளனர் . இதனை தற்போது இருக்கக்கூடிய எந்தவொரு தொலைக்காட்சியும் வெளிப்படுத்தாத சூழ்நிலையில் உங்களுக்காக தமிழாக்கம் செய்திருக்கின்றோம் . படியுங்கள் மீடியாக்களின் முகத்திரையை கிழித்தெறியுங்கள் .
[embedyt]https://www.youtube.com/watch?v=sxU6ASJaP7k[/embedyt]

தமிழகத்தின் முன்னனி பத்திரிகைகளில் ஒன்றான “தினமலர்” பத்திரிக்கை தற்போது “இந்துதுவா”  கொள்கைகளை பரப்புவதற்கும் மத்திய அரசிற்கு ஆதரவாக செய்திகளை பரப்புவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளது என்பது கோப்ராபோஸ்ட் நடத்தியுள்ள ஸ்டிங் ஆப்ரேசனில் தெரியவந்துள்ளது .

ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கும் அந்த வீடியோவின் தமிழாக்கம் இங்கே .

கோப்ராபோஸ்ட் நிறுவனத்தை சேர்ந்த புஸ்ப் சர்மா என்பவர் தினமலர் அலுவலகத்தின் சென்னை பிரிவிற்கு வருகை தருகின்றார் . அவர் சென்னையில் இருக்கும் நிர்வாகி மார்ட்டின் அவருடன் சில ஊழியர்கள் சந்திக்கின்றனர் .

வந்திருப்பவர் மார்டின் அவர்களிடம் மூன்று விசயங்களை முக்கியத்துவம் கொடுத்து செய்ய வேண்டும் என்கிறார் .

முதலாவது ஹிந்துத்துவா கொள்கைகளை பரப்புவது , அதிலும் பகவத் கீதா மற்றும் கிருஷ்ணாவின் போதனைகள் மூலமாக பரப்புவது .

இரண்டாவது ராகுல் காந்தியை பப்பு என பரப்பி அதன் மூலமாக கேரக்டர் அசாசினேஷன் செய்வது .

மூன்றாவது மாயாவதியை “Bua ” என அழைப்பது , அகிலேஷ்  யாதவ் அவர்க்ளை “Bapua” என அழைப்பது போன்றவை
இதன் மூலமாக அவர்களின் மதிப்பினை குறைப்பது . அவர்கள் பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் அளித்தால் நிறுத்திக்கொள்வோம் . இல்லையென்றால் தொடர்வோம் .
அடுத்ததாக தினமலர் நாளிதழின் முதலாளி லட்சுமிபதி ஆதிமூலம் அவர்களை சந்திக்கிறார் கோப்ராபோஸ்ட் நிரூபர் சர்மா . இப்போது தான் சர்மா அவர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு பல உண்மைகளை கொட்டுகிறார் லட்சுமிபதி ஆதிமூலம்.

லட்சுமிபதி ஆதிமூலம் : மார்ட்டின் ஏற்கனவே உங்களுடைய வருகைக்கான நோக்கத்தினை கூறினார் . உங்களுக்கு அதிக இடம் ஒதுக்க வேண்டும் . அது ஒன்றும் பிரச்சனையில்லை . நிறையவே இருக்கின்றது . நாங்களும் பாஜகவின் பாதையிலேயே  பயணிக்கின்றோம் .

நாங்களும் RSS ஐ அதிகமாக விரும்புகிறவர்கள்தான் . ஆனால் செய்தித்தாள் என வரும்போது நேர்மையாகவே இருக்கின்றோம் . இரண்டு ஆட்சிக்காலத்திலேயுமே நாங்கள் இடைவெளியை கடைபிடித்தோம் . அதனால் கடந்த 35 ஆண்டுகளாக எங்களுக்கு அரசு விளம்பரங்கள் கொடுக்கப்படுவதில்லை . 6 மாதத்துக்கு முன்னர் தான் வழக்குத்தொடர்ந்து பெற்றோம் .

ஆகையால் நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதனை எழுதுவோம் . ஆட்சியாளர்களை பற்றி கவலைப்படுவதில்லை .

அதனால் தான் மத்திய அரசுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் அதிக நெருக்கம் . எனது அப்பாதான் செய்தித்தாளுக்கு “பதிப்பாளர் ” . அவர் PTI இன் சேர்மன் ஆக இருந்துள்ளார் . தற்போது அவர் ட்ரஸ்டி ஆக இருக்கிறார் .

நானும் INS என்னும் அமைப்பில் உறுப்பினராக இருக்கின்றேன் , அப்பா இரண்டுமுறை  INS அமைப்பிற்கு இரண்டுமுரை சேர்மன் ஆக இருந்துள்ளார் . மத்திய அரசுக்காக பலவற்றை செய்திருக்கிறோம் .

மேலும் அவர் கூறுகையில் , தற்போது தான் தேர்தலுக்காக செயல்படாத ஆட்சி அமைந்திருக்கிறது .
புஸ்ப் சர்மா : சரியாக சொன்னிர்கள்
லட்சுமிபதி ஆதிமூலம் : இந்தியாவை சுத்தப்படுத்துவதற்க்காக இந்த ஆட்சி அமைந்திருக்கிறது . 65 ஆண்டுகாலம் நடந்ததை சரிசெய்ய  குறைந்தது 20 ஆண்டுகளாவது ஆகும் .

அனைவருக்குமே தெரிந்ததுதான் , தேர்தலுக்கு முன்பே நமது பிரதமர் இரண்டுமுறை அழைத்து பேசியிருக்கிறார் . அவர் அழைத்த சில நாளிதல்களில் தினமலரும் ஒன்று .அதேபோல தென்னிந்தியாவில் பிரசாரம் செய்ய வரும்போது இரவில் தங்கிவிட்டு காலையில் செய்தி நிறுவனங்களை ஒருமணி நேரம் சந்தித்தார் அதில் 45 நிமிடங்கள் தினமலருக்காக .

எனது குடும்ப உறுப்பினர்கள் , குழந்தைகள், வரும்காலத்தில் தினமலரை நிர்வகிக்க போகின்ற இவர்களோடு பிரதமரை டெல்லியில் ஒருமுறை சந்தித்து இருக்கின்றோம் .

இவை அனைத்தும் எங்களுடைய சொந்த நலனுக்காக அல்ல . எங்களுடைய ஆதரவு உங்களுக்கு இருக்கின்றது என்பதனை காண்பிக்க . நிதின் கட்காரி ஜி என்னுடைய அப்பாவிற்கு சிறந்த நண்பர் .
புஸ்ப் சர்மா : இதற்காக முதலில் கிருஷ்ணா மற்றும் பகவத் கீதாவின் போதனைகளை முதலில் பரப்பி நம்பிக்கையை பெறுதல் பிறகு அதற்கடுத்த பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல் .
மார்டின் ஜி அனைத்து தகவல்களையும் வங்கி கணக்கு  எண்ணையும் அனுப்பிவையுங்கள் . நாங்கள் பார்துக்கொள்கிறோம் . உங்களுடைய ஆதரவிற்கு நன்றி .
———————————————–

பாமரன் கருத்து

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கக்கூடிய செய்தி நிறுவனங்கள் அதிகாரத்தை வலைப்போருக்கு எதிராக களம்கண்டு மக்களை காப்பற்றிட வேண்டும் . ஆனால் அற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு தங்களது கடமையை உணராமல் இவ்வாறு செயல்படுவது என்பது மிகபெரிய நம்பிக்கை துரோகம் . தவறு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *