வந்துருச்சு Chrome 64 : தொந்தரவு செய்யும் விளம்பரம் ,வீடியோவுக்கு (ads) BYE சொல்லுங்க
கூகிள் குரோம் popup மற்றும் தானாக ஓடும் வீடியோ உள்ளிட்ட தொந்தரவு செய்யும் விளம்பரங்களுக்கு எதிராக மேம்படுத்தப்பட்ட (ad blocker)ஐ Chrome 64 இல் இணைத்துள்ளது.
இணைய உலகில் முன்னணி இணைய தேடுபொறி குரோம் (Chrome) தற்போது Chrome 64 என்கிற மேம்படுத்தப்பட்ட தேடுபொறியை அறிமுகப்படுத்தியுள்ளது . இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இணையப்பக்கங்களில் தேவையில்லாமல் தோன்றும் விளம்பரங்கள் , தானாக ஓடக்கூடிய Pop Up விளம்பரங்களை பிளாக் செய்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது .
குரோம் எந்த மாதிரியான விளம்பரங்களை பிளாக் செய்யும் :
குரோம் மொத்தமாக அனைத்து விளம்பரங்களையும் பிளாக் செய்யாது.
கூகுள் ஒவ்வொரு விளம்பரத்தையும் பிளாக் செய்வதற்கு முன்பாகவும் தனது டூலில் விதிகளுக்கு உட்படாத அந்த விளம்பரம் குறித்த தகவல்களை காட்டும் . தொடர்ந்து 30 நாட்களுக்கு விளம்பரம் அதில் வரும் பட்சத்தில் அந்த விளம்பரம் நிரந்தரமாக ப்ளாக் செய்யப்படும் . இது கூகிள் நிறுவனம் மூலமாக வரும் விளம்பரங்களுக்கும் பொருந்தும்.
கூகுள் டூல் : https://www.google.com/webmasters/tools/ad-experience-unverified?pli=1
பயனாளர்களுக்கு நன்மை :
நாம் அவசர அவசரமாக நமக்கு வேண்டிய தகவல்களை தேடிக்கொண்டிருக்கும்போது தீடிரென பாப் ஆப் தோன்றுவதும் விளம்பரம் தோன்றுவதும் வீடியோ ஓடுவதும் சங்கடத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் . நமது கணினியை தாக்கும் வைரஸ்கள் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது .
தனது பயனாளர்களை இதுபோன்ற தொல்லைகளில் இருந்து காப்பாற்றிட கூகுள் நிறுவனத்தின் chrome முடிவினை எடுத்துள்ளது . இதன்முலமாக சிறப்பான popup ப்ளாக்கரை கொண்டிருக்கிறது Chrome 64 .
HDR வீடியோ :
பாதிக்கப்பட போகும் Publishers :
பாமரன் கருத்து