காவேரி வழக்கில் மீண்டும் தாமதிக்கப்பட்ட அ (நீதி) – பத்து அதிரடி கேள்விகள் – பதில் சொல்லத்தயாரா ?
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசிற்கு எதிராக தமிழக அரசு மற்றும் பலர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு விசாரனை உச்சநீதிமன்றத்தில் இன்று ஏப்ரல் 09 விசாரனைக்கு வந்தது. புகார் அளித்த அன்றே (ஏப்ரல் 02) விசாரனை செய்வதற்கு ஏற்ற வழக்காக இருந்தாலும் எதற்க்காக உச்சநீதிமன்றம் காலம் கடந்து அவமதிப்பு வழக்கை தள்ளிப்போடுகிறது என விமர்சனங்கள் எழுந்தன. இதற்க்கு காரணம் இது ஒரு தனிமனிதர் அல்லது ஏதோ ஒரு அமைப்பு சார்ந்த பிரச்சனை அல்ல, ஒரு மாநில மக்களின் வாழ்வாதார பிரச்சனை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஏற்கனவே தாங்கள் கொடுத்த தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசிற்கு எதிராக வழக்கு வந்திருக்கும் போது அதனை அடுத்த வாரம் விசாரிக்கிறோம் என சொல்லுவதே தவறல்லவா?
[embedyt] https://www.youtube.com/watch?v=FefDDhcZ2aA[/embedyt]
இன்று நடந்த விசாரனை :
இன்று நடந்த விசாரணையின் போது ஸ்கீம் என்பதற்கு “ஒரு வாரியமோ அல்லது உத்தரவை செய்லபடுத்தும் வகையிலான ஒரு குழுவை அமைப்பதுதானே” என்கிற தமிழக அரசின் கேள்விக்கு “ஆமாம்” என பதில் அளித்துள்ளார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.
அடுத்ததாக, தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்தது நீதிமன்றம். அதற்க்கு அடுத்ததாக ” மே 03 ஆம் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
நமது அச்சமும் கேள்விகளும் :
> நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய அரசிற்கு வெறும் கண்டனம் மட்டுமே போதுமானதா ? சாதாரண மனிதனிடம் நீதிமன்றம் இவ்வாறு நடந்து கொள்ளுமா?
> நீதிமன்ற உத்தரவை செய்லபடுத்தாமல் போன பிறகு தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கு தமிழர்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிந்தும் உடனடியாக விசாரிக்காமல் ஒருவாரம் கழித்து விசாரித்தது ஏன் ?
> ஏற்கனவே தமிழகத்தில் போராட்டம் உச்சநிலையை அடைந்திருக்கும் போது நீதிமன்றம் ஆசுவாசமாக மே 03 ஆம் தேதிவரை அவகாசம் அளித்துள்ளது. மாநில மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிந்தும் இவ்வளவு அவகாசம் கொடுத்தது எப்படி நியாயம்?
> மே 03 ஆம் தேதியும் வரைவு அறிக்கையை மட்டுமே கொடுக்க சொல்லியிருப்பதால் நிச்சயமாக அன்றும் ஆணையம் அமையாது தானே ? அப்படியென்றால் எப்போதுதான் அமையும்? நீங்கள் கொடுத்த 6 வார காலக்கெடுவுக்கும் இந்த நாட்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் என பார்த்தீர்களா ?
> இரண்டொரு நாட்களில் வரைவு அறிக்கையை சமர்ப்பிக்க ஏன் சொல்லவில்லை ? இது மத்திய அரசிற்கு ஆதரவாக செய்லபடுவது ஆகாதா ? தமிழர்களுக்கு அநீதி செய்வது ஆகாதா ?
> சாதாரண மனிதனையும் மத்திய அரசையும் நீதிமன்றம் அணுகும் விதம் வேறு வேறானதா ?
> ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடிய முன்னால் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தின் இந்த தாமதமான செயல்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை?
> உண்மையாலுமே இந்தியாவில் நியாயமும் தர்மமும் இந்த அளவில்தான் இருக்கிறதா ?
> தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதியாகதா ?
> இந்த காலகட்டத்தில் நடக்கும் விவசாய இழப்புகளுக்கும், வறுமையால் வாடும் விவசாயிகளுக்கும் யார் பொறுப்பு ?
என பல கேள்விகளை எழுப்புகிறது உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு.
நீதிமன்ற மாண்பை குறைப்பது என்பது நமது நோக்கமல்ல, மாறாக மாண்பு என்கிற போர்வைக்கு பின்னால் நீதிமன்றத்தை கேள்வி எழுப்புவது குற்றமாகாது என கருதுகிறேன்.
முடிவு தான் என்ன ?
தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதிக்கு சமம் என்பார்கள், அப்படிப்பார்த்தால் தமிழர்களுக்கு வழங்கவேண்டிய நீதியை தாமதப்படுத்தும் மத்திய அரசை நிர்பந்தித்து உடனடியாக வழங்காமல் சேர்ந்துகொண்டு தாமதிப்பது நீதியின் மேல் மக்கள் கொண்ட நம்பிக்கையை தகர்க்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழர்களுக்கு போராடுவதை தவிர வேறு வழியே இல்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. ஆகவே தமிழர்கள் தங்களால் முடிந்த வகையில் பிறருக்கு வன்முறையை ஏற்படுத்தாத வண்ணம் போராட வேண்டும்.
போராடினால் தான் முடிவு கிடைக்குமென்கிற நிலைமைக்கு நம்மை தள்ளிவிட்டார்கள். போராட துணிந்திடு தமிழா!
நன்றி
பாமரன் கருத்து