மதுரை மக்களே தேவயானிக்கு உதவுங்கள் | 600 க்கு 500 மார்க் எடுத்த குறி சொல்லும் தொழிலாளியின் மகள்

மதுரை ஒரு அற்புதமான ஊர், பல நல்ல உள்ளங்களை கொண்டிருக்கும் ஊர். அப்படிப்பட்ட ஊரில் இருக்கும் நல்லவர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து வரும் ஒரு பெண் பிள்ளைக்கு உதவிட வேண்டியது அவசியமான ஒன்று. இன்று இந்த பெண் பிள்ளைக்கு கல்வி கிடைக்க உதவி செய்து முன்னேற செய்துவிட்டால் ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையே நல்ல நிலைக்கு சென்றுவிடும். அதே சமுதாயத்தில் இருக்கும் பிற பிள்ளைகளுக்கு கல்வி மீது ஒரு பற்றுதலும் கல்வி கற்றால் தங்களது நிலையும் மாறிவிடும் என்ற நம்பிக்கையும் நிச்சயமாக ஏற்பட்டுவிடும்.

Read more

அகில இந்திய இடஒதுக்கீடு என்றால் என்ன? OBC பிரிவுக்கு என்ன பிரச்சனை முழு விவரம்? #Video

மாணவர்கள் மருத்துவக்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது இரண்டு விதமான பங்கீடுகள் அதில் இருக்கும். ஒன்று மாநில பங்கீடு, மற்றொன்று அகில இந்திய பங்கீடு. தற்போதைய பிரச்சனை அகில இந்திய பங்கீட்டில் இருக்கும் மருத்துவ இடங்களுக்கு தான் வருகிறது. மாநில அரசுகள் நிர்வகிக்கும் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15% இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு கொடுக்க வேண்டியது கட்டாயம். உதாரணத்திற்கு, மாநில அரசு நிர்வகிக்கும் மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் இருந்தால் அதில் இருந்து 15 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு கொடுக்க வேண்டியது கட்டாயம்.

Read more

கொரோனா பாதிப்பே இல்லாதது போல நடிப்பது யாருக்காக?

பணம் பணம் என அனைவரும் ஓடிக்கொண்டு இருந்தாலும் கூட பணமா உயிரா எனும் போது உயிரைத்தான் தெரிவு செய்வோம். காரணம், நாம் வாழ்வதும் உழைப்பதும் இந்த உயிரை காத்துக்கொள்வதற்காகத்தான். அப்படிப்பட்ட உயிரை வெளியூருக்கு போனவர்களின் வீட்டில் இருக்கும் நகையை திருடர்கள் திருடுவதைப்போல எளிமையாக திருடிக்கொண்டு போகிறது கொரோனா எனும் கொள்ளை நோய். உலக நாடுகளில் சில கொரோனா நோய் கிருமிக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சொன்னாலும் கூட பரிசோதனைகள் முழுமைடைந்து அவை நம் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம்.

Read more

“ஆன்லைன் வகுப்பு” – தேவையா இப்போது?

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போதைய முடக்கத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் காலவரையறை இன்றி மூடப்பட்டு இருக்கின்றன. கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பில் அக்கறை செலுத்த துவங்கி விட்டன. எனக்குத்தெரிந்த சில குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் ஏப்ரல் மாதமே ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்து விட்டார்கள் [உண்மையான கல்வி ஆண்டு ஜூன் மாதத்தில் தான் துவங்கும்]. தற்போது அரசுப்பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழக அரசு தொலைக்காட்சிகளின் வாயிலாக பாடங்களை ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிகிறது.

Read more

இரண்டாவது வேலை/வருமானம் அவசியமானது

ஏதோ ஒரு சந்தர்பத்தினால் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் முதலாவது வேலை பறிபோனாலும் கூட இரண்டாவது வேலையின் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு உங்களால் வாழ்க்கையை நிம்மதியாக நகர்த்திச்செல்ல முடியும். இரண்டாவது வேலை எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். ஆகவே இரண்டாவது வேலை அவசியமானது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

Read more

எங்கிருந்து வந்தன வெட்டுக்கிளிகள்? |வெட்டுக்கிளிகள் படையெடுப்பு | கொரோனவை விட ஆபத்தானது | locusts swarms

நமது அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இதுவரைக்கும் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெற்றுள்ளன. குறிப்பாக ராஜஸ்தானில் அடிக்கடி வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெறும். இந்த ஆண்டும் கூட 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும் பிற மாநிலங்களை நோக்கியும் அவை நகரத்துவங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Read more

7 நாட்களில் 1200 கிமீ தொலைவை சைக்கிளில் கடந்த 15 வயதான ஜோதிகுமாரி, ஏன் ?

15 வயதான ஜோதிகுமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் பின்பக்கத்தில் அமரவைத்துக்கொண்டு 1200 கிலோமீட்டர் தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார் . இந்த நிகழ்வு இந்தியர்களின் உறுதியான சகிப்புத்தன்மையையும் அன்பையும் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது .

Read more

ஜோதிமணி – கரு.நாகராஜன் – யார் பேசியது தவறு?

எவர் செய்தாலும் தவறு தவறுதான் என்ற மன பக்குவம் ஏற்பட வேண்டும். அதனை வேறொரு தவறுடன் ஒப்பிட்டு எந்த விதத்திலும் அதற்கு ஆதாயம் தேடுதல் என்பது மிகப்பெரிய தவறு. சமூக வலைதளங்களில் கேவலமான வார்த்தைகளால் உயர் பதவிகளில் இருப்பவர்களை விமர்சனம் செய்திடும் போக்கு நடைபெற்று வருகிறது. வெறும் லைக் ஷேர் போன்றவைகளுக்காக பலர் இதனை மீண்டும் மீண்டும் செய்துவருகிறார்கள். அனைத்துமே தவறுதான். சொந்தக்காட்சிக்காரர்களே அவர்களை தடுத்து நேர்மைப்படுத்தினால் ஒழிய இந்த தவறுகளை தடுக்க முடியாது.

Read more

தனியார்மயமாக்கல் நல்லதா கெட்டதா?

இப்படி பொதுமக்களின் நேரடி விசயத்தில் பங்கேற்கும் நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பது என்பது நிச்சயமாக தவறானது. இதற்கு அப்பாற்பட்ட நிறுவனங்களை வேண்டுமானால் தனியாரிடம் ஒப்படைக்கலாம். உதாரணத்திற்கு, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாரிடம் விற்க நடவெடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பிரச்சனையின் போது வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்டுக்கொண்டுவர அதே விமானங்கள் தான் பயன்பட்டன. அதுவும் கட்டணம் ஏதும் இல்லாமல். இதுவே தனியாரிடம் விற்று இருந்தால் அவர்களை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.

Read more

ஊரடங்கை தளர்த்துவது சரியானதா? கரோனா வைரஸ் பரவாதா?

ஊரடங்கை தளர்த்திய பிறகு ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அது யாரிடமிருந்து பரவியது என்பதை கண்டறிவது சாத்தியமற்ற ஒன்றாக மாறிவிடும் அபாயம் இருப்பதாகவே தெரிகிறது. மேலும் தொற்று கண்டறியப்பட்ட நபர் ஏராளமான நபர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் அபாயமுமம் இருக்கிறது. இதுவரைக்கும் சமூகப்பரவல் தமிழகத்தில் ஏற்படாத சூழலில் ஊரடங்கை தளர்த்தினால் அந்த நிலைக்கு நாம் செல்லும் ஆபத்தும் இருப்பதாகவே தெரிகிறது.

Read more