2019 இல் இவ்வளவு தற்கொலைகளா? : கவனம் தேவை

2019 இல் மட்டும் 1,39,123 பேரும், 2018 இல் 1,34,516 பேரும் 2017 இல் 1,29,887 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். கூர்ந்து இந்தத் தகவலை கவனித்தால் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

அண்மையில் தற்கொலைகள் குறித்த செய்திகளை அதிகம் காண முடிகிறது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 381 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தேசிய குற்ற பதிவு பணியகம் [National Crime Records Bureau] வெளியிட்டுள்ள தகவலில் இருக்கிறது. 2019 இல் மட்டும் 1,39,123 பேரும், 2018 இல் 1,34,516 பேரும் 2017 இல் 1,29,887 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். கூர்ந்து இந்தத் தகவலை கவனித்தால் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

இந்த எண்ணிக்கைகள் வழக்காக பதிவு செய்யப்பட்டவையே. ஆகவே உண்மையான எண்ணிக்கை என்பது சற்று அதிகமாகவே இருக்கலாம். அதிலும் குறிப்பாக இளம் வயதினர் தான் அதிகமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். சமூகத்தில் ஆண்கள் மிகவும் பலமுடையவர்கள் என்றும் பெண்கள் பலவீனமானவர்கள் என்றும் சொல்லப்படுவது உண்டு. ஆனால் தற்கொலை செய்துகொண்ட பட்டியலை ஆராய்ந்தால் 100 இல் 70 முதல் 71 பேர் ஆண்கள், 29 – 30 பேர் பெண்கள்.

எதற்காக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது திருமணம் தவிர்த்த குடும்பப்பிரச்னைகளால் 32.4% பேரும் திருமண உறவின் காரணமாக 5.5% பேரும் உடல்நலன் சரியில்லாத காரணத்தால் 17.1% பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மற்றவர்கள் பிற காரணங்களுக்காக தற்கொலை முடிவை மேற்கொண்டுள்ளனர்.

தற்கொலைகள் அதிகமாக நடந்த மாநிலங்களின் பட்டியலில் முதலாவதாக மகாராஷ்டிரா [18,916] இருக்கிறது. இரண்டாவதாக நமது தமிழ்நாடு [13,493] இருக்கிறது. கூட்டாக தற்கொலை செய்துகொண்டதில் 16 வழக்குகள் தமிழகத்தில் இருந்தே பதிவாகி இருக்கின்றன. தற்கொலைகள் பட்டியல் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டு இருப்பது வருத்தத்தை உண்டாக்குகிறது.

தற்கொலைகள் கோழைகளுக்கானது

பிரச்சனைகள், தோல்விகள், இழப்புகள் அனைவருக்குமே உரித்தானவை. அவை ஏற்படும் போது மிகவும் வலி தரக்கூடியவை தான். ஆனால் அந்த வலியினை காலத்திடம் கொடுத்துவிட்டால் காலம் அந்தக் காயத்திற்கான மருந்தை போட்டுவிடும். நாம் செய்திட வேண்டியது ஒன்றே ஒன்று தான், பொறுத்துக்கொண்டு காலத்திற்கு அந்த வாய்ப்பினை வழங்குவது தான். தேர்வில் தோல்வி அடைந்தால் என்ன? கணவர் விட்டுச்சென்றால் என்ன? விரும்பியவர் இறந்துவிட்டால் என்ன? இந்தப் பிரச்சனைகள் ஏதோ நமக்கு மட்டுமே நடப்பவை இல்லையே. அனைவருக்குமே இந்தப்பிரச்சனைகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

நாம் இறந்துவிட்டால் பலருக்கு தண்டனையாக அது அமையும் என பலர் நினைத்துக்கொள்கிறார்கள். ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கு எப்படிப்பட்ட அன்பானவராக இருப்பினும் நீங்கள் இறந்துவிட்டால் உங்களது நியாபகம் ஒரு வாரமோ மாதமோ தான். பிறகு வாழ்க்கை இயல்புக்கு திரும்பி விடும். அதுவே இயற்கை. நாம் இங்கே பிறந்திருப்பது வாழ்வதற்காக மட்டுமே. ஆகவே எக்காரணத்தை முன்னிட்டும் தற்கொலை செய்துகொள்ள எண்ணாதீர்கள்.

நாம எதுக்கு பாஸ் சாகனும்? வேணும்னா அவன் சாகட்டும்!

சுய முன்னேற்ற கட்டுரைகள் இங்கே படிக்கலாம்
ஏன் நீங்கள் எப்போதும் பெரிதாக சிந்திக்க வேண்டும்?






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *