அறம் – வல்லரசு இந்தியாவின் முகத்திரையை கிழித்தெறிந்தது

அறம் – வல்லரசு இந்தியாவின் முகத்திரையை கிழித்தெறிந்தது

அறம்
அறம்

அறம் திரைப்படம் இந்தியாவின் வல்லரசு பயணத்தில் ஏழைகள் எவ்வாறு கழட்டிவிடப்பட்டு பணக்கார வர்க்கம் மட்டும் மேல்நோக்கி
பயணிக்கிறது என்பதை மிக துணிவோடு சொல்லியிருக்கிறார்கள் .

ஒருபக்கம் செவ்வாய்க்கு குறைந்த செலவில் செயற்கைகோள்களை ஏவினோம் , பல நாட்டு செயற்கைகோள்களை நம் நாட்டு ராக்கெட்டில் வைத்து விண்வெளியில் விடும் அளவிற்கு உயர்ந்தோம் .

மறுபக்கம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்றிட ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பு நம்மிடம் இல்லை . இன்னும் கயிறுகளையும் , பக்கத்தில் குழிதோண்டி குழந்தையை காப்பாற்றும் முயற்சியையுமே நம் அவசர கால பேரிடர் குழுக்கள் பயன்படுத்துகின்றன .

யார் குழிக்குள் விழுவார் ? ஏழைகளோ நடுத்தர வர்க்கத்தினரோ தானே ? அவர்களுக்கு கண்டுபிடித்தால் பயன் இல்லை என அறிந்தே கிடப்பில் போடப்பட்டுள்ளது .

சில தன்னார்வலர்களும் மாணவர்களும் முயன்று கண்டுபிடித்தால் அதனையும் கண்டுகொள்ளாமல் தவிர்த்துவிடுவது

இவை அத்தனையையும் மிக தெளிவாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் படக்குழுவினர் .

ஒரு பக்கம் தண்ணிருக்கே கஷ்டப்பட்டாலும் மறுபக்கம் இந்தியாவின் ராக்கெட் ஏவ படும் நாட்களில் நாங்கள் கோவிலுக்கு செல்வோம் , பட்டாசு வெடித்து கொண்டாடுவோம் என அந்த பெண் சொல்லும்போது நாட்டுப்பற்று மிளிர்கிறது .

நயன்தாராவின் நடிப்பு இந்த கதைக்களத்திற்கு மிகத்தெளிவாக பொருந்துகிறது .

நாட்டிற்கு நல்லது செய்யவேண்டுமெனில் முடிவை எடுக்கும் அதிகார பீடத்தில் நாம் இருக்க வேண்டும் . அது ஆட்சி அதிகாரமே என சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை .

நல்ல திரைப்படம் , நல்ல கருத்து .

ஏதோ ஒரு பொறியாளரோ சமூக அறிவியலாளரோ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுபவர்களை காப்பாற்றும் கருவி கண்டுபிடித்தால் சிறப்பாக இருக்கும் .

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *