சீனாவின் அதிநவீன சாலை எப்படி இருக்கு தெரியுமா ? All about China’s solar highway in Tamil
சீனாவின் அதிநவீன சாலை (Smart Solar Road)
தற்போதைய நிலவரப்படி உலகின் மேம்படுத்தப்பட்ட அதிநவீன சாலையாக இந்த சாலை இருக்கின்றது . சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வசதி , சாலையில் செல்லும் பேட்டரி கார்களுக்கு மின்சாரம் செலுத்தும் வசதி , சாலை நெரிசல் குறித்த தகவல்களை துல்லியமாக அறியக்கூடிய வசதி என பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றது .
Made in China 2025
இந்த சாலையை வடிவமைத்த நிறுவனத்தினர் கூறும்போது ” தற்போதைய நிலவரப்படி 2030 க்கு உள்ளாக தானியங்கி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துவிடும் , ஆகவே அதற்கு ஏற்றவாறு சாலைகளை அமைக்கவேண்டியது இருக்கும் . இயந்திரங்களுக்கு வாகன நெரிசல் குறித்தும் , mapping குறித்தும் , தானே சார்ஜ் செய்து கொள்வதற்கும் வசதிகள் இருக்கின்றன .
சாலை எவ்வாறு செயல்படுகிறது ?
சூரிய ஒளியால் உட்புகுந்த செல்லக்கூடிய தடிமனான பொருளுக்கு அடியில் சூரிய மின்தகடுகள் படிக்கப்பட்டு இருக்கின்றன . இவை சூரிய சக்தியை சேகரிக்கின்றன .
மேற்புறத்தில் இருக்கக்கூடிய பகுதிகளில் சென்சார்களை பொருத்துவதற்கான வசதிகள் இருக்கின்றன . அவற்றின் உதவியினால் வெப்பநிலை , வாகன நெரிசல் , வாகனங்கள் செல்லும்போது ஏற்படுகிற அழுத்தம் என பல தகவல்களை கண்காணித்து அனுப்பிட முடியும் . வருங்கால தானியங்கி கார்கள் இந்த தகவல்களை வைத்துக்கொண்டு முடிவுகளை எடுக்க முடியும் .
அதிநவீன சாலையின் செலவு
வெறும் ஒரு கிலோமீட்டர் அளவுள்ள இந்த அதிநவீன சாலையை வடிவமைக்க 6.5 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது .
நினைவில் கொள்ள வேண்டும் , முதல்முறையாக ஒரு திட்டத்தை நிறைவேற்றுகிறபோது அதற்கான செலவு அதிகமாக இருக்கத்தான் செய்யும் . அதனை சீன அரசும் கட்டமான நிறுவனமும் உணர்ந்தே இருக்கின்றன .
இந்தியாவின் நிலை என்ன ?
உலகப்பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்க கூடிய நாடுகளில் ஒன்றான சீனா 2030 ஆண்டில் கண்டுபிடிக்கப்பட இருக்கின்ற தானியங்கி வாகனங்களுக்கு ஏற்றவாறு சாலைகளை அமைக்க முயற்சி செய்கின்றது . இந்தியாவில் அதற்கான முயற்சிகள் நடப்பதாக தெரியவில்லை .
ஒருவேளை அதற்கான முயற்சிகள் நடக்கவில்லையெனில் இன்றே நமது அரசாங்கம் அதனை செய்திட வேண்டும் . எதனையும் செய்யும் திறன் நம்மிடம் இருக்கின்றது , அதனை பயன்படுத்திக்கொண்டு முயன்றால் நாமும் வளர்ச்சி அடையலாம் .