அட்சய திரிதியை ஏன் வந்தது? தங்கத்திற்கும் அதற்கும் தொடர்பு உண்டா? வியாபார தந்திரம்| Akshaya Tritiya – Gold Business Tactics

பெரும்பாலான நேரங்களில் விஞ்ஞானிகளை விடவும் அதிகமாக சிந்திக்கும் நம் நாட்டு மக்கள் முக்கியமான சில விசயங்களில் மட்டும் கோட்டை விட்டு விடுகிறார்கள். அதில் மிக முக்கியமான ஒன்று அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கினால் வீட்டிற்கு தங்கம் வந்து சேரும் என்பது.

 

நாத்தனாளுக்கு பச்சை சேலை , ஆடி தள்ளுபடி போன்ற வியாபார தந்திரவரிசையில் முன்நிலை வகிக்கின்றது அட்சய திரிதியை .

 

செய்தித்தாள்களை புரட்டினால் முதல் பக்கத்தில் அட்சய திருதியை வர இருகின்றது என செய்தி வருகின்றது . மூன்றாம் பக்கத்தில் தங்கத்தின் விலை உயர்வு என செய்தி வருகின்றது . நமது மக்களில் பெரும்பாலானவர்களுக்கு இது பொய்யென தெரிந்திருந்தும் கடைகளில் ஒரு குமட்டுமணி தங்கத்தையாவது வாங்கிவிட வேண்டும் என வரிசையில் நிற்கிறார்கள். ஒருவேளை அவர்கள் சொல்வது உண்மையாக இருந்து வரவேண்டிய தங்கம் வராமல் போய்விடுமோ எதற்கும் நாமும் கொஞ்சம் வாங்கி வைத்துவிடுவோம் என்கிற மனநிலையில் இருப்போரும் உண்டு.

 

அட்சய திரிதியை வியாபார தந்திரம்

 

எதையும் கண்டுகொள்ளாமல் மக்கள் கூட்டம் அட்சய திரிதியை நாளன்று தங்கம் வாங்கும் முனைப்பில் நகைக்கடைகளில் அலைமோதுகிறது . காரணம் என்னவென்று கேட்டால் , அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்கினால் அடுத்தடுத்து செல்வம் பெருகும் என்கிறார்கள் .

 


அட்சய திரிதியை உருவான கதை :

 

 

மகா விஷ்ணு தரிசனம் அளித்த தினம் “திருதியை” . அன்று செய்யும் தான தர்மங்கள் அளவில்லாத பலனை கொடுக்கும் என்பதால் அந்த திரிதியை “அட்சய திரிதியை” என அழைக்கப்படுகிறதாம் .

 

வியாபாரமாக மாற்றப்பட்ட கதை :

 

தான தர்மம் செய்தால் அளவற்ற பயனை கொடுக்கும் என சொல்லப்பட்ட அட்சய திரிதியை நாளை தங்கம் வாங்க உகந்த நாள் என மாற்றியது வியாபார தந்திரமன்றி வேரொன்றும் இல்லை .

தங்கம் வாங்குவது தவறில்லை , ஆனால் அட்சய திரிதியை நாளன்று வாங்கியே ஆகவேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் கடைகளில் குவிவதால் தங்கம் விலை உயர்கிறது . அந்த அதிக விலையிலான தங்கத்தை தான் மக்களும் விரும்பி வாங்கி செல்கிறார்கள் .

 

தங்கத்தை வாங்கி வீட்டில் வைப்பதனால் எவ்வாறு புண்ணியம் சேரும் என்கிற அடிப்படை அறிவு மக்களுக்கு இருக்க வேண்டாமா ?
 
கடன்வாங்கியாவது இன்று வாங்கியே ஆகவேண்டும் என்கிற அளவிற்கு மக்களின் மனநிலையை மாற்றிவைத்திருக்கும் நகைக்கடை விளம்பரங்களின் வெற்றிதானே இது ?
 

ஒருபக்கம் நகைகளை வாங்குங்கள் என விளம்பரம் செய்கிறார்கள் மறுபுறம் அதனை அதிக விலைக்கு அடமானம் வையுங்கள் என்கிறார்கள் . இதில் இருக்கும் வியாபார யுக்திகளை அறிந்த படித்த வர்க்கத்தினர் கூட அட்சய திரிதியை நாளன்று தங்க நகை கடைகளில் குவிவது என்பது வேதனையான விசயம் .
 
அறிவார்ந்த படித்த மக்கள் ஒரு கருத்தை ஏற்று நடந்திடும் போது படிக்காத பாமர மக்களும் அதனை உண்மையென நம்பி விடுகிறார்கள் .
 
தங்கம் நல்ல முதலீடு தான் , அதற்காக அதிக விலை கொடுத்தாவது அட்சய திரிதியை அன்றே வாங்கியாக வேண்டும் என கூட்டமாக அலைமோதுவதுதான் தவறு .
 
வியாபார தந்திரங்களை உணர்ந்து செயல்படுங்கள் மக்களே !
 

 
Subscribe :
 

 

பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “அட்சய திரிதியை ஏன் வந்தது? தங்கத்திற்கும் அதற்கும் தொடர்பு உண்டா? வியாபார தந்திரம்| Akshaya Tritiya – Gold Business Tactics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *