teriflix – புது தியேட்டர் பத்தி தெரியுமா உங்களுக்கு ?

teriflix – தியேட்டர் தற்போது பெங்களூரூவில் நடந்துவருகிறது . தியேட்டர் என்றவுடன் திரைக்குவரும் படங்களை பார்க்கலாம் என்று நினைத்துவிடாதீர்கள் .

 

teriflix முற்றிலும் மாறுபட்டது. ஆம் , நீங்கள் இங்கு அவர்கள் திரையிடும் படத்தை காணவேண்டிய அவசியம் இருக்காது . மாறாக நீங்கள் Netflix , amazon prime video பயன்படுத்துவராக இருந்தால் இதுவரை உங்கள் வீட்டில் சிறிய டீவியில் கண்டுகளித்த வீடியோ அல்லது படங்களை மிக பெரிய 135 இன்ச் டிவியில் 7 .2 .4 டால்பி அடோம்ஸ் (Dolby Atoms) வசதியுடன் பார்க்கலாம் .

அதோடு மட்டுமில்லாமல் மிக சிறந்த இருக்கைகளும் நீங்கள் வீட்டில் இருந்து பார்ப்பதைப்போன்ற நினைவை கொண்டுவரும் அளவிற்கு வடிவமைப்புகள் செய்யபட்டு இருக்கும் .

கட்டணம் எவ்வளவு ?

இதற்கு கட்டணமாக ஒருமணி நேரத்திற்கு ரூ 1299 செலுத்திட வேண்டும் . 18 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் . தற்போது பெங்களூருக்கு அருகிலே உள்ள கிரிநகரில் அமைந்துள்ளது .

மிகபெரிய திரை , சிறந்த ஒலி அமைப்பு ஆகியவற்றை நண்பர்களுடன் அனுபவிக்க விரும்புபவர்கள் இங்கு செல்லலாம் . மேலும் குறும்படங்களை திரையிட விரும்புபவர்களுக்கும் அனுமதி உண்டு .

பிரசாந்த் ,பிரவீன் என்கிற சகோதரர்களால் இது 2017 இல் தொடங்கப்பட்டு செயல்படுகிறது .

ஒருமுறை சென்று பாருங்களேன் !

 

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *