ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்டது ஏன்?

இந்த உலகம் கண்ட சிறந்த தலைவர்களை வரிசைப்படுத்தினால் அதிலே நிச்சயமாக முதல் வரிசையில் இடம்பெறுவார் அமெரிக்க முன்னால் அதிபர் ஆபிரகாம் லிங்கன். “மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி” என்ற மாபெரும் தத்துவத்தை விதைத்த ஆபிரகாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். வாருங்கள் விரிவாக பேசுவோம்.

அமெரிக்க உள்நாட்டுப்போர் முடிவடைந்து ஐந்து நாட்களே நிறைவடைந்திருந்த சூழலில், ஏப்ரல் 14, 1865 – புனித வெள்ளியன்று தன் மனைவியுடன் நாடகம் காண சென்றிருந்த ஆபிரகாம் லிங்கன் அவர்கள் ஜான் வில்ஸ் பூத் என்ற புகழ் பெற்ற நடிகரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கறுப்பின மக்களுக்கு விடுதலை கொடுத்தது பொறுக்காமல் தென் மாநிலங்களின் ஆதரவாளரான பூத் ஆபிரகாம் லிங்கன் அவர்களை சுட்டுக்கொன்றார். மாபெரும் கொடுமைகளை அனுபவித்துவந்த கறுப்பின மக்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மாபெரும் தலைவர் என்ற காரணத்திற்காகவே ஆபிரகாம் லிங்கன் இந்த பூமி உள்ளவரைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார்.

ஆபிரகாம் லிங்கன் அவர்களுக்கு கறுப்பின மக்கள் அடிமைத்துவத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது? அமெரிக்க உள்நாட்டுப்போர் ஏன் நடந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான விசயங்களை விரிவாகப் பேசுவோம்.

புத்தக காதலர்

ஆபிரகாம் லிங்கன் அவர்கள் ஒரு சாதாரண குடும்பத்தில் பிப்ரவரி 12, 1809 அன்று பிறந்தார். ஆபிரகாம் லிங்கனின் தந்தை பெயர் தாமஸ் லிங்கன், தாயார் பெயர் நான்சி ஹாங்க்ஸ். ஏழை குடும்பமாக இருந்தாலும் பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் நான்சி இடத்தில் இருந்தது. லிங்கனுக்கு சிறுவயதிலேயே பைபிள் படிக்க கற்றுக்கொடுத்தார் நான்சி. லிங்கன் சிறுவயது பருவத்தில் அந்தப்பகுதியில் படித்தவர்களை காண்பது அரிது. அப்போதைய காலகட்டங்களில், பைபிளை மிகவும் சத்தமாக படிக்கும் வழக்கம் கொண்டிருந்தார் லிங்கன். அப்போது அவருக்கு வயது 4 அல்லது 5 தான் இருக்கும் என்கிறார்கள்.

லிங்கனுக்கு 9 வயது இருக்கும் போது தாயார் இறந்துபோனார். இதனால் சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். பள்ளிக்கு நெடுந்தொலைவு சென்று பயின்றார். இளம் வயதிலேயே இயல்பாகவே பல நல்ல பண்புகள் லிங்கனிடத்தில் தென்பட்டன. அதேபோல, லிங்கனுக்கு புத்தகம் வாசிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். புதிய புத்தகம் நண்பர்களிடத்தில் இருப்பது தெரிந்தால் அங்கே சென்று அதனை படித்து முடித்தால் தான் அமைதி அடைவாராம் லிங்கன்.

கறுப்பின மக்கள் அடிமை முறை

நல்ல பண்புகள், நல்ல உயரம், நல்ல உடல் வலிமை என வயதைவிடவும் அனைத்திலும் சிறந்து விளங்கினார் ஆபிரகாம் லிங்கன். அவருக்கு 16 வயது இருக்கும் போது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெறுவதை காணும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. அங்கே வழக்காடியவர்களை கண்டவுடன் தானும் படித்து ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டார் லிங்கன். எதிர்காலத்தில் ஒரு நல்ல வழக்கறிஞராகவும் லிங்கன் இருந்தார் என்பது தான் உண்மை. ஆனால், காலம் அவருக்கு இன்னொரு வேலையை செய்வதற்கான கட்டளையை இட்டிருந்தது.

ஆமாம், தான் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த அப்போதைய லிங்கனின் பொழுதுகள் கூலி வேலை பார்த்துத்தான் நகர்ந்துகொண்டு இருந்தது. அப்படி ஒரு சமயம் வேலை விசயமாக நியூ ஆர்லியன்ஸ் நகருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் முதல் முறையாக அடிமை சந்தையை அவர் கண்டார். அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் குறைவாகவும் தெற்கு மாகாணங்களில் மிகவும் அதிகமாகவும் கறுப்பின மக்களை விற்கும் அடிமை முறை இருந்து வந்தது. அப்படி சந்தையில் வாங்கிச்செல்லப்படும் அடிமைகள் முதலாளிகளுக்கு வேலை செய்ய வேண்டும், சரியாக சொல்லவேண்டும் என்றால் அவர்கள் சொல்லும் அனைத்தையும் செய்திட வேண்டும். விலைக்கு வாங்கிச்செல்லப்படும் அடிமைகளுக்கு உரிமையோ, உணர்வோ, சம்பளமோ எதுவும் கிடையாது. ஒரு மாட்டினை நாம் வாங்கிகொண்டுவந்து எப்படி நடத்துகிறோமோ அப்படித்தான் கறுப்பின மக்களை அடிமையாக்கி நடத்தினார்கள். மாட்டை விடவும் மோசமாக என்பதே சரியாக இருக்கும்.

நாம் தற்போது மாடுகளை பள்ளைப்பார்த்து, உடலைப்பார்த்து எப்படி வாங்குகிறோமோ அப்படித்தான் கறுப்பின மக்களையும் சந்தையில் வாங்கினார்கள். கறுப்பின பெண்களின் நிலமையோ மிகவும் மோசம். மார்பகங்களை பிடித்துப்பார்ப்பது உள்ளிட்ட சொல்ல முடியாத விசயங்களை செய்துபார்த்து அவர்களை வாங்கிச்செல்லுவார்கள். அவர்களை வாங்கிச்செல்கிறவர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள்.

இந்தக்கொடுமையை நேரிலே கண்டபோது நொந்துபோனார் லிங்கன். நிற வேற்றுமையால் ஒரு இனமே இப்படி அடிமையாகி துன்பப்படுவதைக் கண்ட லிங்கன் அன்று ஓர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். “இந்த அடிமை முறையை ஒழிப்பதற்கு எனக்கு ஓர் வாய்ப்பு கிடைத்தால், அதனை நிச்சயம் செய்வேன்” என்பதே அது. அவர் இறப்பதற்கு முன்னர் இந்த உறுதிமொழியை நிறைவேற்றிக்காட்டினார் என்பதே வரலாற்று உண்மை. 

அமெரிக்க அதிபர் பதவி

இளமைக்காலத்தில் நல்ல வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்து வந்தார் லிங்கன். புத்தக வாசிப்பில் சிறந்து விளங்கியபடியால் பொதுக்கூட்டங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மக்களை ஈர்க்கும் விதத்தில் பேசிவந்தார். இவரது பேச்சை கேட்பதற்காகவே மக்கள் கூட்டம் கூடியது. உங்களுடைய பேச்சைக் கேட்பதற்கு இப்படி கூட்டம் கூடுகிறதே நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என அருகே இருந்தவர்கள் வற்புறுத்த தேர்தலில் களம் கண்டார். அந்தத்தேர்தலில் அவர் தோற்றுப்போனார். அதன் பிறகு சில வேலைகளை செய்துவந்தவர் முதல் முதலாக 1834 இல் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் வென்றார். பின்னனர் 1836, 1838, 1840 என தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்தார்.

பின்னர் அரசியலுக்கு இடைவெளி விட்ட அவர் தன்னுடைய இளமைக்கால கனவை நிறைவேற்ற வழக்கறிஞர் தொழில் செய்ய ஆரம்பித்தார். மிகக்குறைந்த செலவில் மக்கள் சட்ட உதவியை பெற இவர் உதவி செய்தார். பணம் இல்லாதோருக்கு கட்டணம் இல்லாமலும் வழக்காடினார். மீண்டும் அரசியல் பக்கம் திரும்பினார் லிங்கன். 1858 ஆம் ஆண்டு குடியரசுக்கட்சி சார்பாக செனட்டர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத்தழுவினார் லிங்கன். ஆனால் 1859 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட லிங்கன் அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் வெற்றி பெற்றார். அப்போது நிலவிய நான்குமுனைப் போட்டி லிங்கன் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

அமெரிக்க உள்நாட்டுப்போர்

அண்ணா தமிழில் உரை ஆற்றினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்பார்கள். நேர்த்தியான கருத்துக்களை அளவான சொற்களை பயன்படுத்தி எளிய மக்களுக்கும் புரியும் விதமாக பேசுவதில் வல்லவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவரது அடுக்குமொழி அழகுதமிழுக்கு தமிழகம் அடிபணிந்து தான் ஆட்சிக்கட்டிலில் அவரை அமர வைத்து அழகுபார்த்தது.  தமிழில் மட்டும் அண்ணா மிகப்பெரிய புலமை பெற்றவர் அல்ல, அவர் ஆங்கிலத்திலும் மிகப்பெரிய அளவில் புலமை பெற்றவராக விளங்கினார். உலகை வெல்ல ஆங்கில அறிவு வேண்டும் என அண்ணா அப்போதே கருத்தியதாலோ என்னவோ தான் இருமொழிக்கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். அண்ணா அவர்களின் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை காண்போம்.

சுட்டுக்கொல்லப்பட்டார் லிங்கன்

லிங்கனின் முதல் அதிபர் பதவிக்காலம் முழுமையும் உள்நாட்டுப் போரிலேயே முடிந்துபோனது. ஆனால், நினைத்ததை வெற்றிகரமாக செய்துமுடித்திருந்தார் லிங்கன். 1863 இல் பிரிந்துபோன மாநிலங்கள் இணைந்ததும் நடைபெற்ற தேர்தலிலும் லிங்கன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராக இரண்டாம் முறை பதவி ஏற்றுக்கொண்டார். உள்நாட்டுப்போர் முடிவடைந்து இருந்தாலும் அடிமை முறையை ஒழித்தபடியால் பலன்களை இழந்தவர்கள் அவர் மீது வெறுப்பு கொண்டிருந்தனர். அதனை அவரும் அறிந்தே இருந்தார். ஏப்ரல் 14, 1865 – புனித வெள்ளியன்று தன் மனைவியுடன் நாடகம் காண சென்றிருந்த ஆபிரகாம் லிங்கன் அவர்கள் ஜான் வில்ஸ் பூத் என்ற புகழ் பெற்ற நடிகரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கறுப்பின மக்களுக்கு விடுதலை கொடுத்தது பொறுக்காமல் தென் மாநிலங்களின் ஆதரவாளரான பூத் ஆபிரகாம் லிங்கன் அவர்களை சுட்டுக்கொன்றார். தலையில் சுடப்பட்ட காரணத்தால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை. சில நாட்கள் கோமாவில் இருந்த லிங்கன் ஏப்ரல் 15, 1865 அன்று மறைந்தார். 

ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

அண்ணாவின் ஆங்கிலப்புலமை

நாம் செய்யும் ஒரு விசயத்தை சிறந்ததாக்க நம்மால் முடிந்த அளவு உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதை கடைசிவரை கொடுக்க வேண்டும்.

இன்று இல்லாவிட்டாலும் நாளை உங்கள் கடமையை நீங்கள் செய்தே தீர வேண்டும். அதில் இருந்து தப்பிக்க

அனைவரையும் நம்புவது ஆபத்தான விஷயம் ஆகும். ஆனால் ஒருவரையும் நம்பாமல் இருப்பது மிகவும் ஆபத்தான விஷயம் ஆகும்.

நான் யாரை தலைசிறந்த நண்பன் என்று கருதுகிறேன் என்றால் யார் எனக்கு நான் இன்னும் படிக்காத ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி தருகிறானோ அவன் தான்.

நான் பொறுமையாக செல்பவன் தான் ஆனால், நான் ஒருபோதும் ஒரு லட்சத்திலிருந்து பின்வாங்குவதில்லை.

எனக்கென தனி கொள்கைகளை நான் பின்பற்றுவதில்லை. எனக்கு தோன்றுவதை சிறப்பாக செய்வேன் அவ்வளவுதான்.

நமக்காக வாய்ப்பு நம்மைத் தேடிவர வரை நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

வெற்றிக்காக ஏமாற்றுவதை விட தோற்றுப்போவது மரியாதைக்குரியது.

நாம் ஒருவருக்கு ஒருவர் இரண்டு ரூபாயை பகிர்ந்து கொண்டாலும் நம் இருவரிடமும் ஒரு இரண்டு ரூபாய் தான் இருக்கும். ஆனால், நம் இருவரும் நல்ல எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் நம்மிடம் நல்ல எண்ணங்கள் தான் இருக்கும்.

அவசர படுபவர்களுக்கு எந்த விஷயம் தெரிய வராது அவர் விட்டு சொல்லும் விஷயம் மட்டும். ஆனால் பொறுமையாக காத்திருப்பவர்களுக்கு அனைத்து விஷயங்களும் வரக்கூடும்.

உங்களை மற்றவர்கள் மதிக்க வில்லை என்று ஒரு பொழுதும் கலங்காதீர்கள் அவர்கள் உங்களை மதிக்கும் அளவிற்கு நீங்கள் உயர்ந்து காட்டுங்கள்.

புகழை வேண்டினால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நிம்மதியை வேண்டாதீர்கள்.

நாளைக்கு இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இன்று செய்ய வேண்டிய வேலைகளை நாளைக்கு தள்ளிப் போடாதீர்கள்.

என் அம்மாவிடமிருந்து தான் எனக்கு தைரியம் தன்னம்பிக்கை என அனைத்துமே கிடைத்தது.

ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் அழிக்கப்பட்டால் அதில் நான்கு மணிநேரத்தை கோடாரியை கூர்திட்டவே பயன்படுத்துவேன்.

நாம் செய்யும் ஒரு வேலையை நம்மால் முடிந்தவரை சிறப்பாக செய்ய வேண்டும், அதை நீ கண்டிப்பாக இறுதிவரை செய்ய வேண்டும்.

உழைப்பே மிஞ்சும் சக்தி இவ்வுலகத்தில் வேறு எந்த சக்திக்கும் கிடையாது, உழைப்பே உலகத்தின் உன்னதமான சக்தியாகும்.

போகும் வழியில் கிடைத்த 5 ரூபாயை விட நம் கடின உழைப்பினால் கிடைத்த ஒரு ரூபாய்க்கு அந்த ஐந்து ரூபாயை விட மதிப்பு அதிகம்

இவ்வுலகத்தில் அனைவருக்கும் பிடித்த விஷயம் பாராட்டு தான்.

யார் ஒருவர் உதவும் எண்ணம் கொண்டவரும் அவர் தான் உண்மையாக விமர்சித்த தகுதியானவர்.

இன்றைய தவிர் பின் மூலம் உங்களுக்கான நாளைய பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது.

பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

ஊக்கத்தையும், தன்னடக்கத்தையும் மனித சுதந்திரத்தை பறித்து கொண்டு வர முடியாது.

சாதாரணமான உள்ள மனிதர்களை தான் இறைவன் அதிகம் விரும்புகிறார்கள் போல, அதனால்தான் அவர்களை உலகத்தில் அதிகமாக படைக்கிறார்.

அனைத்து மக்களுக்கும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு தான் ஆனால் வயதாகாமல் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *