வெற்றி பெற்றவர்கள் புரிந்துகொண்ட 10 உண்மைகள், மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை

இங்கே அனைவரும் வெற்றிக்காகத்தான் போராடுகிறோம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றவர்களை நீங்கள் பட்டியலிட்டு அவர்களது கடந்த காலத்தை கவனித்துப் பார்த்தால் அதிலே அவர்கள் பல தோல்விகளை சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதே தோல்வியை சந்தித்த பலர் காணாமல் போயிருக்கும் போது சிலர் மட்டும் எப்படி வெற்றியாளர்களாக மாறினார்கள் என யோசித்தால் ‘அவர்கள் உண்மைகளை புரிந்துகொண்டவர்கள்’ என்பது புலப்படும். நீங்களும் வெற்றிக்காக போராடுகிறவர் எனில் பின்வரும் உண்மைகளை புரிந்துகொள்ளுங்கள்.

1. தோற்றால் உங்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்

நீங்கள் ஒரு விசயத்தில் தோற்றுப்போனால் உங்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் நீங்கள் தோல்வி அடைந்ததை அவர்கள் கவனித்துக்கொண்டு தான் இருந்திருப்பார்கள். அவர்கள் கண்டுகொள்ளாமல் விடுவதும் ஒருவிதத்தில் நல்லது தான் என நினைத்துக்கொள்ளுங்கள். அதைவிட்டு, நம்மை யாரும் கண்டுகொள்ளவில்லையே, ஆறுதல் கூறவில்லையே என ஏங்காதீர்கள். முயற்சி செய்திடுங்கள், தோற்றால் அதனை அனுபவமாக எடுத்துக்கொண்டு மீண்டும் முயற்சி செய்திடுங்கள். செய்த தவறையே மீண்டும் செய்திடாதீர்கள்.

2. குடும்பத்தை தேர்ந்தெடுங்கள்

எந்தவொரு சாதனையாளருக்கும் பின்னால் அவருக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஒரு குடும்பம் இருக்கவே செய்யும். ஆகவே, அப்படிப்பட்ட ஒரு குடும்பம் உங்களுக்கு வாய்த்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்களுக்கு அப்படியொரு குடும்பம் இல்லையெனில் உங்களுக்கு உறுதுணையாகவும் ஊக்குவிக்கவும் சில நபர்களை தேடிக்கொள்ளுங்கள். அவர்களையே உங்களது குடும்பமாக மாற்றிக்கொள்ளுங்கள். 

3. நிதானத்தை மாற்றாதீர்கள்

பணம், நேரம், பழக்க வழக்கங்கள் இவை மூன்றுக்கும் அதீத தொடர்பு உண்டு. நீங்கள் வெற்றி அடையும் சமயத்திலோ அல்லது தோல்வி அடையும் சமயத்திலோ இந்த மூன்றில் நீங்கள் செய்திடக்கூடிய எந்தவொரு பெரிய மாற்றமும் உங்களது பாதையை முற்றிலுமாக மாற்றிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எது நடந்தாலும் எதுவுமே நடக்காதது போல நடந்துகொள்ளுங்கள்.

4. பிறரை மரியாதையோடு நடத்துங்கள்

ஒவ்வொரு மனிதரும் தன்னை ஒருவர் எப்படி நடத்தினார் என்பதை மனதில் நியாபகம் வைத்திருப்பார். இது மனித இயல்பு. ஆகவே, நீங்கள் கடந்துபோகும் ஒவ்வொருவரையும் மரியாதையோடு நடத்திடுங்கள். வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர் உங்களது பெயரை நியாபகம் வைத்திருக்காவிட்டாலும் நீங்கள் நடந்துகொண்ட விதத்தை நியாபகம் வைத்திருப்பார்.

5. பயம் அனைவருக்கும் உண்டு

உங்களது பயம் என்பது இருக்கிறதா அதனை நினைத்து கவலைப்படாதீர்கள். உங்களுக்கு உள்ளதைப்போலவே தான் பிறருக்கும் ஏற்படும் என புரிந்துகொள்ளுங்கள். ஆனால் சிலர் அதனை மறைக்க கற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள், வெளிகாட்டிகொள்ளாதவர்களாக இருப்பார்கள். ஆனால் பயம் உங்களை ஆட்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

6. உழைப்பை அதிகரித்துக்கொண்டே செல்லுங்கள்

தோற்றுப்போன பலரை நீங்கள் கவனித்துப்பார்த்தால் ஒரு விசயத்தை உங்களால் தெரிந்துகொள்ள முடியும். அவர்கள் வெற்றிக்காக கொடுக்கும் உழைப்பை குறைத்துக்கொண்டே சென்றிருப்பார்கள். நீங்களும் அந்தத்தவறை செய்யாதீர்கள். வெற்றி கிடைக்கும்வரை உங்களது உழைப்பை அதிகரித்துக்கொண்டே செல்லுங்கள். வெற்றி ஒருநாள் கிட்டியே தீரும். 

7. வெற்றிக்கு அருகே சென்று திரும்பியவர்கள் பலர்

பயமே முதல் எதிரி - விரட்டி விடுங்கள்

தோற்றவர்களில் பலர் முழுமையாக முயற்சி செய்யாதவர்களாகத் தான் இருப்பார்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால் அவர்கள் கிட்டத்தட்ட 80% முதல் 90% வரைக்கும் வெற்றிக்கு அருகே வந்திருப்பார்கள். ஆனால் நாம் வெற்றிக்கு அருகே வருகிறோம் என்பதனை உணராமலேயே அவர்கள் தங்களது முயற்சியை நிறுத்திக்கொண்டவர்களாக இருப்பார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்காதீர்கள். 

8. கணிதம் முக்கியம்

கணிதம் என்றால் ஏதோ மிகப்பெரிய பார்முலாக்கள் அல்ல. அந்தகணிதம் உங்களுக்கு ஓரளவிற்கு தெரிந்தால் போதும். ஆனால், நீங்கள் செல்லும் பாதை, எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கணிப்பு, இப்படி செய்தால் என்ன நடக்கும், அப்படி நடந்தால் நாம் என்ன செய்திட வேண்டும், நாம் நினைத்தது மாதிரி நடக்காது போனால் நாம் எப்படி நடக்க வேண்டும் என பல கணிதங்களை மனதிற்குள்ளே போட்டு விடை தேடிக்கொள்ளும் வித்தகராக நீங்கள் இருக்க வேண்டும். இந்தக் கணிதம் மிகவும் முக்கியம். 

9. உடனடி வெற்றி நிரந்தரம் அல்ல

சோம்பேறித்தனத்திற்கு முடிவு கட்டுங்கள்

முக்கால்வாசி பேர் இந்த ஒரு விதியில் தான் காணாமல் போய்விடுகிறார்கள். பலருக்கு வெற்றி உடனடியாக கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி வெற்றி கிடைக்கவில்லை எனில் தாங்கள் ஏதோ தவறான முயற்சியில் ஈடுபட்டுவிட்டதாகவோ அல்லது தங்களுக்கு தகுதி இல்லை எனவோ நினைத்துக்கொள்கிறார்கள் . நீண்ட காலம் போராடினால் தான் நிரந்தர வெற்றியை பெற முடியும் என்பது பலரது வாழ்க்கை வரலாறுகளில் இருந்து நம்மால் உணர முடிகிறது. தள்ளுவண்டிக்காரர் மிகப்பெரிய உணவகம் ஒன்றினை ஒரே ஆண்டில் கட்டிவிட முடியாது. 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் ஏன் முடியாமலே கூட போகலாம். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்தால் ஏதோ ஒரு ஆண்டில் அவர் சாதித்து இருக்கலாம். 

10. தேவையான ஓய்வு எடுத்திடுங்கள்

 

தொடர்ந்து உழைத்தால் தான் வெற்றி கிடைக்கும். இது உண்மை தான். ஆனால் ஒரு இயந்திரத்திற்கு கூட போதிய ஓய்வு கொடுக்கவில்லையெனில் அது ஒருநாள் நின்றுவிடும். மனித உடம்பிற்கு சொல்லவா வேண்டும். ஆகவே, அயராத உழைப்பிற்கு இடையில் உங்களது உடலுக்கும் மூளைக்கும் மனதிற்கும் ஓய்வு கொடுங்கள். ஒவ்வொரு ஓய்விற்கு பிறகும் நீங்கள் புதிய உத்வேகத்தோடு உழைக்க முடியும்.
நான் மேலே கூறிய 10 உண்மைகளை நீங்கள் உணர்ந்து பின்பற்றினால் புரிந்துகொண்டால் நிச்சயம் ஒருநாள் வெற்றியாளராக மாறுவீர்கள்.






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *