மாதவிடாய் சுகாதார பொருட்களை இலவசமாக வழங்க சட்டமியற்றிய முதல் நாடு ஸ்காட்லாந்து

வறுமையினால் தகுதியான மாதவிடாய் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது பெரும்பான்மையான பெண்களுக்கு சாத்தியமற்ற ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாக அவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.

சில காலமாகத்தான் மாதவிடாய் என்ற சொல்லை பயன்படுத்த தயக்கம் காட்டுவது இல்லை. அது பெண்கள் வாழ்வியலின் ஒரு அங்கம் என்பதை இப்போதுதான் இந்த சமூகம் உணர்ந்திருக்கிறது. இன்றளவும் வறுமை காரணமாக மாதவிடாய் நேரங்களில் தகுதியான பொருள்களை வாங்க இயலாமல் பாத்ரூமில் பயன்படுத்தப்படும் பேப்பர், பழைய துணி உள்ளிட்ட பொருள்களை பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்களும் ஏற்படுகின்றன.

வெளியிலேயே சொல்லத்தயங்கும் வார்த்தையாக மாதவிடாய் மாறிபோனதன் விளைவோ அல்லது ஆண்களுக்கு அப்படியொரு பிரச்சனை எழுவது இல்லை என்பதனாலோ குடும்ப அளவிலும் கூட அதற்காக பணம் ஒதுக்கி பெண்களுக்கு சரியான மாதவிடாய் பொருள்களை வாங்கிக்கொடுக்கும் போக்கு பெரும்பான்மையான குடும்பங்களில் இல்லை. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் சில சமயங்களில் அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சுகாதாரமான மாதவிடாய் பொருள்களை இலவசமாக பெண்களுக்கு அவ்வப்போது வழங்கி வருகின்றன. 

Thank you to everyone who has campaigned for period dignity and to my MSP colleagues for backing the Bill tonight.

A proud day for Scotland and a signal to the world that free universal access to period products can be achieved. #freeperiodproducts 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 https://t.co/NC3e97jPuQ

— Monica Lennon (@MonicaLennon7) November 24, 2020

ஆனால் உலகிலேயே முதல் முறையாக ஸ்காட்லாந்து நாடு தான் ‘சுகாதாரமான மாதவிடாய் பொருள்களை’ அனைத்து பெண்களுக்கும் இலவசமாக கொடுக்க சட்டமியற்றி உள்ளது [ Period Products (Free Provision) (Scotland) Bill ] . இது நிச்சயமாக பெருமைக்குரிய விசயமாக பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்து நாட்டை தொடர்ந்து பல நாடுகள் இந்தப்பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்காட்லாந்து தொழிலாளர் கட்சியை சேர்ந்த உறுப்பினர் மோனிகா லெனோன் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதனை ஒரு உறுப்பினர் மட்டுமே எதிர்க்க மற்ற அனைவரின் ஆதரவோடு இம்மசோதா நிறைவேறியது. இந்த சட்டத்தின்படி, நாடு முழுமைக்கும் ஸ்காட்லாந்து அரசாங்கம் யாருக்கு இலவசமாக மாதவிடாய் பொருள்கள் தேவைப்படுகிறதோ அவற்றை கொடுக்க திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் தூய்மையான மாதவிடாய் பொருள்களை வழங்கிட நடவெடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் 60 கோடிக்கும் அதிகமான பெண்கள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த திட்டம் சாத்தியமா என கேட்டால் நிச்சயமாக சாத்தியம் தான். எத்தனையோ கோடிகளை மானியங்களிலும் தள்ளுபடிகளிலும் வீணடிக்கும் போது உருப்படியான இந்த திட்டத்தை இங்கே கொண்டு வந்து நடைமுறைப்படுத்துவது சாத்தியமான ஒன்று தான். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் சிந்தனைக்கு இவ்விசயம் எட்டினால் இது சாத்தியம் தான்.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *