மிகச்சிறப்பாக செயல்படுகிற மாநிலம் – தமிழ்நாடு “இந்தியா டுடே” – State of the States 2019

இந்தியாவின் முன்னனி நாளிதழான இந்தியா டுடே ஆய்வில் ஒட்டுமொத்தமாக மிகச்சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலம் மற்றும் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக செயல்படும் மாநிலம் ஆகியற்றிற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மிகச்சிறப்பாக செயல்படுகிற மாநிலம் - தமிழ்நாடு "இந்தியா டுடே" - State of the States 2019

Get updates via WhatsApp

“இந்தியா டுடே” – State of the States 2019

இந்தியா டுடே ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு ஒட்டுமொத்தமாகவும் தனித்தனி துறையிலும் சிறப்பாக செயல்படுகின்ற மாநிலங்களை கவுரவித்து வருகிறது. இதில் மாநிலங்கள் பெரியவை மற்றும் சிறியவை என பிரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் இதில் பெரிய மாநிலங்களில் பட்டியலில் வருகிறது. இப்படி கவுரவிப்பதன் நோக்கம், குறிப்பிட்ட அந்த மாநிலங்களை ஊக்குவிப்பதற்காக மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களை பின்பற்ற வேண்டும், ஆரோக்கியமாக போட்டி போட்டி போட வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் கொடுக்கப்படுகிறது என இந்தியா டுடே கூறியுள்ளது.

சிறப்பாக செயல்படுகிற மாநிலம் : தமிழகம்

மிகச்சிறப்பாக செயல்படுகிற மாநிலம் - தமிழ்நாடு "இந்தியா டுடே" - State of the States 2019

டெல்லியில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் மாநிலங்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். பெரிய மாநிலங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழகம் ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள மாநிலம் [Best performing big state Overall] என்ற விருதினை பெற்றது. அதேபோல சட்டம் ஒழுங்கில் மிகச்சிறப்பாக செயல்படுகிற மாநிலம் [Best performing and Most improved Big state in law and order] என்ற விருதினையும் பெற்றது. தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் திரு ஜெயக்குமார் விருதுகளை பெற்றுக்கொண்டார்.

தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்

கோட் சூட்டில் முதல்வர்

இந்தியா டுடே போன்ற முன்னனி நாளிதழ் “மிகச்சிறப்பாக செயல்படுகிற மாநிலம்” என்ற விருதினை கொடுத்திருக்கிறது என்றால் அதற்க்கு நம் ஆட்சியாளர்களை நாம் பாராட்டியே தீர வேண்டும். பாமரன் கருத்து சார்பாக நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். வருகிற ஆண்டுகளிலும் இவ்விருதுகளை தக்க வைத்துக்கொள்ளும் விதமாகவும் விருதுகளை தவறவிட்ட துறையில் விருதுகளை பெரும் விதமாகவும் சிறப்பாக செயல்படவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.


Get updates via WhatsApp





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *