19 நாள் 5 தங்கம் | யார் இந்த ஹிமா தாஸ்? | Success story of Hima Das

“சரியான ஷூ இல்லாவிட்டாலும் அவள் காற்றைப்போல ஓடினாள்” – பயிற்சியாளர் 

தடகள வீராங்கனை ஹிமா தாஸ் வாழ்க்கை வரலாறு

இப்போது இந்தியா முழுக்க இவரைப் பற்றிய பேச்சுதான், வெறும் 19 நாட்களில் 5 தங்கப்பதக்கங்களை 19 வயதுப்பெண் பெற்றால் பேசாமல் இருக்க முடியுமா என்ன?

 

ஜூலை 02,2019 முதல் ஜூலை 20,2019 வரையிலான 19 நாட்களுக்குள் 5 தங்கப்பதக்கங்களை வென்று தன் மாநிலமான அசாம் க்கும் இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்துவிட்டார் தங்கமங்கை ஹிமா தாஸ். இளம் வயதில் ஹிமா தாஸ் ஓடியதை பார்த்த ஒரு பயிற்சியாளர் “அவள் காற்றைப்போல ஓடினாள்” என நினைவு கூறுகிறார். மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து எப்படி இவ்வளவு பெரிய சாதனையாளராக உயர்ந்தார் ஹிமா தாஸ் என்பதனைதான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். ஹிமா தாஸ் வாழ்க்கை பயணம் உங்களுக்காக… 

ஹிமாதாஸ் இளமை பருவம்

தடகள வீராங்கனை ஹிமா தாஸ் வாழ்க்கை வரலாறு

 

அசாம் மாநிலத்தில் திங் எனும் ஒரு சிறிய ஊரில் ஜனவரி 09, 2000 நாள் ஹிமா தாஸ் பிறந்தார். ஏழை பெற்றோரான ரஞ்சித் தாஸ் மற்றும் ஜோனலி தாஸ் ஆகிய இருவருக்கும் 6 வது பிள்ளையாக ஹிமா தாஸ் பிறந்தார். மிகப்பெரிய சாதனையாளர்கள் என சொல்லிடும் அளவிற்கு எவரையும் அனுப்பாத அந்த ஏழை தேசத்திலிருந்து ஹிமா தாஸ் வருவார், தங்கங்களை வாங்கி குவிப்பார் என எவருமே நினைத்தது கிடையாது. 

 

ஓடுவதற்கு வசதியில்லாத கிராமத்தில் ஆங்காங்கே ஆண் பிள்ளைகளோடு கால்பந்து ஆட்டம் ஆடுவது ஹிமா தாஸ் வழக்கம். திங் அரசுப்பள்ளியில் பயின்றபோதும் ஆண் மாணவர்களோடு கால்பந்தாட்டம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார் ஹிமா தாஸ். அவர் கால்பந்தாட்டத்தில் மிக விரைவாக ஓடுவதனை பார்த்த சாம்ஸுல் செயிக் எனும் ஆசிரியர் தான் அவரது திறனை முதலில் கண்டறிந்து கூறியிருக்கிறார். 

 

ஹிமா தாஸ் அவர்களினுடைய திறமையை, வேகத்தை 2016 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் நடந்த போட்டியில் தான் பார்க்க முடிந்தது என நினைவு கூறுகிறார் அவருடைய ஆரம்பகால பயிற்சியாளர் நிப்பான் தாஸ். ” விலை மலிவான ஷூவினை பயன்படுத்திதான் அந்த போட்டியில் அவள் கலந்துகொண்டாள், அதில் 100 மீ , 200 மீ போட்டியில் தங்கம் வென்றாள் என்றும் அவள் ஓடியதை பார்த்தால் காற்று கிழித்துக்கொண்டு பாய்வதைப்போல இருந்தது என நினைவு கூறுகிறார்” நிப்பான் தாஸ்.

தங்க வேட்டையில் ஹிமா தாஸ்

Golden girl #HimaDas
5th gold medal in 20days🎖️🎖️🎖️🎖️🎖️
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/UzfWTjgORr

— Arjun Yadav (@ArjunYa36087730) July 22, 2019

 

ஹிமா தாஸ் பல்வேறு தங்கப்பதக்கங்களை அதற்க்கு முன்னர் பெற்றிருந்தாலும் பின்லாந்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான IAAF உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீடியோவை பார்த்தால் இன்றும் நமக்கு புல்லரிக்கும். 400 மீட்டர் போட்டியில், மெதுவாக ஓடத்துவங்கிய ஹிமா கடைசி 100 மீட்டர் தூரத்தில் முன்னர் சென்ற 3 பேரை முந்திக்கொண்டு தங்கம் வென்றார். அதுதான்  IAAF உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தடகள பிரிவில் இந்தியா பெற்ற முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்ச்சியாக 5 தங்க பதக்கங்கள் 

 

ஜூலை 02,2019 – போலந்து நாட்டில் நடந்த Gold in Poznan Athletics Grand Prix இல் 200 மீட்டர் தூரத்தை 23.65 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். 

 

ஜூலை 07,2019 – போலந்து நாட்டில் நடந்த Kutno Athletics Meet இல் 200 மீட்டர் தூரத்தை 23.97 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். 

 

ஜூலை 13,2019 – செக் குடியரசு நாட்டில் நடந்த Kladno Athletics Meet இல் 200 மீட்டர் தூரத்தை 23.43 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். 

 

ஜூலை 17,2019 – செக் குடியரசு நாட்டில் நடந்த Tabor Athletics Meet இல் 200 மீட்டர் தூரத்தை 23.25 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். 

 

ஜூலை 17,2019 – செக் குடியரசு நாட்டில் நடந்த போட்டியில் இல் 400 மீட்டர் தூரத்தை 52.09 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.

பெண்களுக்கு உத்வேகம் ஹிமா தாஸ்

எவ்வளவு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் கடுமையான பயிற்சி மற்றும் முயற்சி இருந்தால் நிச்சயமாக ஒருநாள் வெற்றி நம்மை தேடிவரும் என்பதற்கு ஹிமா தாஸ் ஒரு மிகசிறந்த உதாரணம். வருகிற ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இந்தியாவிற்கு ஒலிம்பிக் போட்டியிலும் தங்க பதக்கத்தை பெற்றுத்தருவார் ஹிமா தாஸ் என நம்புவோம். 

 

வாழ்த்துக்கள் ஹிமா தாஸ்!






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “19 நாள் 5 தங்கம் | யார் இந்த ஹிமா தாஸ்? | Success story of Hima Das

  • July 23, 2019 at 10:35 am
    Permalink

    அவளது திறனை அறிந்து ஊக்குவிக்கும் ஆசிரியர் மற்றும் அவளது விடா முயற்சியால் வெற்றி பெற்றுள்ளார்.. இன்னும் நிறைய பதக்கங்களை வெல்ல வாழ்த்துக்கள்…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *