ஐஸ்கிரீம் ஜூஸ் சாப்பிடுகிறீர்களா? அலர்ட் ஆகிக்கோங்க | Low Food Quality
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது . இதனை காரணமாகக்கொண்டு சாலை ஓரங்களில் புதிய ஜூஸ் கடைகள் திடீரென முளைத்திருக்கின்றன . அதேபோல ஐஸ்கிரீம் விற்பனையாளர்களும் ஐஸ்கிரீம் தயாரிக்கும் கம்பெனிகளும் திறக்கப்பட்டு இருக்கின்றன .
ஏற்கனவே ஜூஸ் கடைகளில் தரமற்ற பழங்கள் மற்றும் ஐஸ் கட்டிகள் பயன்படுத்தப்படுவதாக குற்றசாட்டு எழுந்திருந்த நிலையில் நாகை மாவட்டத்தில் வானகிரி கிராமத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகள் பெரியவர்கள் என 125 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது .
இதனை தொடர்ந்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வின் முடிவில் இரண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் 4 ஆயிரம் ஐஸ்கிரீம் பார்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
பொதுமக்களே உஷார்
திருவிழாக்கள் மற்றும் சாலையில் பயணிப்பவர்கள் இவற்றை குறிவைத்தே குறைந்த விலையில் தரமற்ற ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனையகங்கள் உருவாகியிருக்கின்றன . பொதுவெளியில் உணவினை விற்கவேண்டும் எனில் உணவுப்பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டியது அவசியம் . ஆனால் பெரும்பாலானவர்கள் அனுமதி பெறுவதில்லை , அவர்களை உணவுப்பாதுகாப்புதுறை அதிகாரிகள் கண்டறிந்து தடுப்பதும் இல்லை .
அனைத்தும் நடந்தபிறகே அதிகாரிகள் நடவெடிக்கை எடுக்கிறார்கள் . ஆகவே பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாம்தான் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டி இருக்கின்றது . ஆகவே தரமற்ற கடைகளில் ஜூஸ் குடிப்பதை தவிர்த்துவிட்டு வீடுகளிலேயே பழச்சாறு அருந்தும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள் .
கோடைகாலங்களில் குழந்தைகள் அடிக்கடி ஐஸ்கிரீம் கேட்கத்தான் செய்வார்கள் . கிராமங்களை குறிவைத்துதான் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன . ஆகவே கிராமங்களில் இருப்பவர்கள் தரமற்ற ஐஸ்கிரீம்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள் .