Site icon பாமரன் கருத்து

ஐஸ்கிரீம் ஜூஸ் சாப்பிடுகிறீர்களா? அலர்ட் ஆகிக்கோங்க | Low Food Quality

 


 

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது . இதனை காரணமாகக்கொண்டு சாலை ஓரங்களில் புதிய ஜூஸ் கடைகள் திடீரென முளைத்திருக்கின்றன . அதேபோல ஐஸ்கிரீம் விற்பனையாளர்களும் ஐஸ்கிரீம் தயாரிக்கும் கம்பெனிகளும் திறக்கப்பட்டு இருக்கின்றன .

 

Ice shop

 

ஏற்கனவே ஜூஸ் கடைகளில் தரமற்ற பழங்கள் மற்றும் ஐஸ் கட்டிகள் பயன்படுத்தப்படுவதாக குற்றசாட்டு எழுந்திருந்த நிலையில் நாகை மாவட்டத்தில் வானகிரி கிராமத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகள் பெரியவர்கள் என 125 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது .


இதனை தொடர்ந்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வின் முடிவில் இரண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் 4 ஆயிரம் ஐஸ்கிரீம் பார்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

 


பொதுமக்களே உஷார்

திருவிழாக்கள் மற்றும் சாலையில் பயணிப்பவர்கள் இவற்றை குறிவைத்தே குறைந்த விலையில் தரமற்ற ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனையகங்கள் உருவாகியிருக்கின்றன . பொதுவெளியில் உணவினை விற்கவேண்டும் எனில் உணவுப்பாதுகாப்பு  துறையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டியது அவசியம் . ஆனால் பெரும்பாலானவர்கள் அனுமதி பெறுவதில்லை , அவர்களை உணவுப்பாதுகாப்புதுறை அதிகாரிகள் கண்டறிந்து தடுப்பதும் இல்லை .

 

Road side juice shop

 

அனைத்தும் நடந்தபிறகே அதிகாரிகள் நடவெடிக்கை எடுக்கிறார்கள் . ஆகவே பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாம்தான் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டி இருக்கின்றது . ஆகவே தரமற்ற கடைகளில் ஜூஸ் குடிப்பதை தவிர்த்துவிட்டு வீடுகளிலேயே பழச்சாறு அருந்தும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள் .

கோடைகாலங்களில் குழந்தைகள் அடிக்கடி ஐஸ்கிரீம் கேட்கத்தான் செய்வார்கள் . கிராமங்களை குறிவைத்துதான் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன . ஆகவே கிராமங்களில் இருப்பவர்கள் தரமற்ற ஐஸ்கிரீம்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள் .


பாமரன் கருத்து

 

Share with your friends !
Exit mobile version