நம்பிக்கையளித்த கருஞ்சட்டை மாநாடு | பெரியார் நினைவுதின பகிர்வு

 


 

சாதியை எதிர்ப்பவராக , அநீதியை எதிர்ப்பவராக , பெண்களுக்காக போராடுபவராக  இன்று எவரேனும் இருந்தால் அவர்கள் பெரியாரின் சிந்தனையால் உந்தப்பட்டவர்களாகவே இருப்பார்கள் .

 

 

பெரியார் ஒரு நூற்றாண்டின் தலைவராக உயர்ந்து நிற்கின்றார் . தமிழகமெங்கும் அவர் புகழ் வெளிச்சம் இன்றும் மங்காமல் வீசிக்கொண்டு இருக்கின்றது . இதற்கு மிக முக்கிய காரணம் அவரின் நெருப்பினை போன்ற கருத்துக்கள்.

 

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகம் , சமூக அறநெறியில் , பெண்கள் முன்னேற்றத்தில் , மத சார்பின்மையில் முன்னேறிய மாநிலமாக திகழ்வதற்கு மிக முக்கிய காரணம் பெரியார் என்றால் மிகையாகாது .

 

 

உடைக்கப்பட்ட பெரியார் சிலை
உடைக்கப்பட்ட பெரியார் சிலை



இன்று ஒரு சிலர் அவருக்கு எதிராகவே கருத்துக்களை பதிவிடுகின்றனர் . அவர்களுக்கு அத்தகைய தைரியத்தையும் கருத்து சொல்லும் உரிமையும் அனைவருக்கும் இருக்கின்றது என்பதனை உணர வைத்தவரும்  பெரியாரே .

 


 

கருஞ்சட்டை மாநாடு

 



பெரியார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் 160 க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்ற கருஞ்சட்டை மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது .



கெட்டவனிடம் இருக்கும் ஒற்றுமை நல்லவனிடம் இருக்காது


உலகில் பொதுவாக ஓர் கருத்து உண்டு . கெட்டவர்களிடம்  இருக்கின்ற ஒற்றுமை நல்லவர்களிடம் இருக்காது . ஆகையினால் தான் அவர்கள் பெரும்பாலான நேரங்களில் வெற்றி பெறுகிறவர்களாகவும் ஆதிக்க சக்தி அதிகமுடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தான் அது .



தற்போது இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்தாக இருப்பது ஒரு பண்பாடு , ஒரு கலாச்சாரம் , ஒரு மதம் , ஒரு நாடு என்ற ஒற்றை குடையின் கீழ் இந்தியர்களை கொண்டுபோவதற்கான செயல்பாடுகளே . ஆனால் இந்தியாவின் உண்மையான அடையாளம் என்னவென்றால் அதன் பன்முகத்தன்மை தான் .

 

கருஞ்சட்டைப்பேரணி



அதற்கு ஒரு ஆபத்து வருகின்ற நேரத்தில் தனித்தனியே பிரிந்து கிடப்பவர்கள் ஒன்றுபட்டு போராடுவது அவசியமான ஒன்று .

அநீதிக்கு எதிராக மக்கள் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கையினை திருச்சியில் 160 க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்ற கருஞ்சட்டை மாநாடு ஏற்படுத்தியிருக்கின்றது .

 



சாதிய சிந்தனை , மத பாகுபாடு , சாதி ஆணவ படுகொலைகள் , பசுபாதுகாப்பு போர்வையில் நடக்கும் மனித கொலைகள் போன்றவை அதிகரித்து வரக்கூடிய சூழலில் இதுபோன்ற ஒற்றுமையும்  , மாநாடுகளும் நடப்பது அவசியமான ஒன்று .

 

திருமுருகன் காந்தியின் பயணம் தொடரட்டும்

 


பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *