What is Indian Law 49P? | 49P explained in Tamil | Sarkar 49P

 


 

சர்கார் திரைப்படத்தில் 49P என்ற அரசியலமைப்பு சட்டவிதி குறித்து விளக்கப்பட்டுள்ளது . அதாவது ஒருவர் வாக்களிக்கும் முன்பாக அவரது வாக்கினை வெறொரு நபர் செலுத்திவிடும் பட்சத்தில் உண்மையான நபர் 49P என்ற சட்டத்தினை பயன்படுத்தி தன்னுடைய வாக்கினை செலுத்திட முடியும் . அந்த 49P விதி குறித்து தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம் .

 


49P Indian Law

 

 

 

49P. Tendered Votes.(1)

If a person representing himself to be a particular elector seeks to vote after another person has already voted as such elector, he shall, on satisfactorily
answering such questions relating to his identity as the presiding officer may ask, be instead of being allowed to vote through the balloting unit supplied with a tendered ballot paper which shall be of such design, and the particulars of which shall be in such language or languages as
the Election Commission may specify.

(2) Every such elector shall before being supplied with a tendered ballot paper write his name
against the entry relating to him in Form-17B.

(3) On receiving the ballot paper he shall forthwith

(a) proceed to the voting compartment;

(b) record there his vote on the ballot paper by placing a cross mark ‘X’ with the
instrument or article supplied for the purpose on or near the symbol of the candidate
for whom he intends to vote.

(c) fold the ballot paper so as to conceal his vote.

(d) show to the presiding officer, if required, the distinguishing mark on the ballot
paper;

(e) give it to the presiding officer who shall place it in a cover specially kept for the
purpose; and

(f) leave the polling station.

 


49P Law in Tamil 

 

வாக்குச்சாவடிக்கு ஒரு நபர் வாக்களிக்க வரும்போது உங்களுடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு இருந்தால் இந்த 49P என்ற விதிமுறைப்படி உங்களது வாக்கினை பதிவு செய்ய முடியும் . முன்னதாக தேர்தல் அதிகாரி கேட்கின்ற கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கின்ற பதிலை பொருத்தும் ஆதாரங்களை பொருத்தும் அவர் அனுமதியளித்த பின்னர் புதிய வாக்குசீட்டினை வழங்குவார் .

 

FORM 17B, need to enter the name of person who is going to enter a vote by 49P
FORM 17B, need to enter the name of person who is going to enter a vote by 49P

 

49P சட்டவிதியை பின்பற்றி இரண்டாவது முறையாக வாக்களிக்கும் நபர் தன்னுடைய பெயர் கையெழுத்து போன்றவற்றினை படிவம் 17B இல் பதிவிட வேண்டும்

பின்னர் அந்த நபருக்கு புதிய வாக்குசீட்டு வழங்கப்படும்

அந்த வாக்குசீட்டில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்

தேர்தல் அதிகாரி அந்த வாக்குசீட்டினை தனியாக வாங்கி வைத்துக்கொள்வார்.


 

FORM 17C 

 

FORM 17 C , here the Election officer should include the count of votes entered by law 49P
FORM 17 C , here the Election officer should include the count of votes entered by law 49P

 

வாக்குப்பதிவு நிறைவடைந்தபிறகு வாக்குச்சாவடியில் இருக்கின்ற தேர்தல் அதிகாரி பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க FORM 17C என்ற படிவத்தினை பயன்படுத்துவார் .

அந்த படிவத்தில் 49P விதியினை பயன்படுத்தி வாக்களித்த நபர்களின் எண்ணிகையை குறிப்பிட வேண்டும்.

 


இயல்பான சந்தேகங்கள்

வாக்குசீட்டு , அடையாள அட்டை , அரசியல்கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் அனைத்தையும் கடந்துதான் ஒவ்வொருவரும் வாக்கினை பதிவு செய்திருக்க முடியும் . அப்படியெனில் அதனை எப்படி பொய்யானது என்றும் இப்போது வந்திருப்பவரை உண்மையானதுமென்றும் கருதிட முடியும் ?

வெற்றி பெற்றவருக்கும் இரண்டாவது இடம் பிடித்தவருக்கும் இடைப்பட்ட வித்தியாசம் விதியினை பயன்படுத்தி வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் இதனை கண்டுகொள்ள மாட்டார்களா ?

 

இன்னும் பல சந்தேகங்கள் இருக்கின்றன , விரிவாக நடைமுறை தெரிந்தவர்கள் கமெண்டில் பதிவிடலாம் .

 


சர்க்கார் படத்திற்கு பாராட்டுக்கள்

 

அடுத்தவர்கள் தங்களின் வாக்கினை பதிவு செய்துவிட்டால் , போடா சிவாஜி ஓட்டையே எவனோ போட்டுட்டு போயிட்டான் என புலம்பிக்கொண்டு வந்துவிடுவோம் . காரணம் என்ற Indian Law 49P விதி இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை . தற்போது இந்த 49P விதியினை மக்கள் தெரிந்துகொண்டு இருக்கிறார்கள் . இனி இப்படியொரு நிலை ஏற்பட்டால் மக்கள் தேர்தல் அதிகாரியிடம் 49P விதி பற்றி கேள்வி கேட்பார்கள் , தங்களுடைய வாக்கினை பதிவு செய்வார்கள் . விழிப்புணர்வு ஏற்படுத்திய சர்கார் திரைப்பட குழுவினருக்கு பாராட்டுக்கள் .

 


 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *