WhatsApp files might be deleted on Nov 12 Release, Save Immediately | WhatsApp பழைய தரவுகள் அழிவதற்கான வாய்ப்பு
WhatsApp files like text messages, image, video or any document that modified later than one year going to be deleted after November 12 2018 release.
[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
முன்னனி சாட் ஆப் ஆக இருக்கக்கூடிய WhatsApp தொடர்ச்சியாக பல அப்டேட்களை விட்டுக்கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே . இதுவரை இல்லாத மிகப்பெரிய நன்மையும் அதே சமயம் கொஞ்சம் கவனிக்கவேண்டிய அப்டேட் ஒன்றினை WhatsApp நவம்பர் 12 ஆம் தேதி வெளியிட இருக்கின்றது . அந்த அப்டேட் இல் உங்களுடைய பழைய whatsapp பைல்கள் ( Chat , Media files) அழிந்துபோகும் வாய்ப்பு இருப்பதனால் பயனாளர்கள் தங்களுக்கு தேவையான பைல்களை Backup செய்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது whatsapp நிறுவனம்.
WhatsApp Vs Google Drive Agreement
நாம் தற்போது WhatsApp பயன்படுத்திடும் போது சேகரிக்கக்கூடிய backup பைல்கள் ( Chat , Media Files etc) Google Drive இல் தான் சேமித்துவைக்கப்படும் .
ஒருநபருக்கு கூகுள் நிறுவனம் அளித்திருக்கக்கூடிய இலவச storage Space 15 GB தான் . WhatsApp இன் backup file சேமித்து வைக்கும் போது அந்த குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்பட்டுள்ள 15 GB இல் தான் அதுவும் இடம் ஒதுக்கிக்கொள்ளும் .
இதனால் 15 GB தீர்ந்துவிடுவதற்கான வாய்ப்பும் , Backup எடுப்பதில் சில இடையூறுகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றன.
அதில்தான் தற்போது மிகப்பெரிய மாற்றத்தினை கொண்டுவந்துள்ளது WhatsApp . அதன்படி WhatsApp google நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளது . அதன்படி இனி WhatsApp Backup பைல்களை சேமிக்கும்போது அது பயனாளர்களின் தனிபட்ட 15 GB இடத்திற்குள் இனி வராது .
WhatsApp backup files will be save into our Google drive but Google won’t count this Space in user account
இந்த அப்டேட்டினை செய்யும்போது தான் தானாகவே பழைய பைல்களை அழித்திடபோகிறது WhatsApp (One year older chats and media files). அனைத்து தகவல்களும் அழிக்கப்படுமா என்றால் ? இல்லை ஓராண்டிற்கு பிறகான தகவல்களை அழிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது WhatsApp .ஆகையால் பெரும்பாலானவர்களை இந்த அப்டேட் பாதிக்காது .
ஆகவே அண்மைய காலத்தில் எடுக்கப்பட்ட Backup file களுக்கு பாதிப்பு ஏதுமில்லை . அவசியம் இருப்பின் எடுத்துவைத்துக்கொள்வது நல்லது .
ஆகவே WhatsApp இல் முக்கியமான Chat , Image , Video என எதையாவது சேமித்துவைத்திருப்பின் அது தேவையென்று கருதினால் Backup செய்து வைத்துக்கொள்ளுங்கள் . நவம்பர் 12 க்கு பிறகு அழிக்கப்பட்டுவிட்டால் உங்களால் திருப்பி பெறவே இயலாது .
How to take What’sApp backup manually?
வலது மேற்புறத்தில் இருக்கக்கூடிய மூன்று புள்ளிகளை அழுத்திடுங்கள் .
Settings ஐ அழுத்திடுங்கள்
Chat ஐ அழுத்திடுங்கள்
Chat Backup ஐ அழுத்திடுங்கள்
வேண்டும் ஆப்சன்களை தேர்ந்தெடுத்து Backup பட்டனை அழுத்திடுங்கள்
அதிக அளவிலான file ஆக இருப்பின் Wifi மூலமாக டவுன்லோடு செய்திடுங்கள் .
WhatsApp :
Facebook நிறுவனத்தின் கீழ் இயங்கக்கூடிய WhatsApp நிறுவனமானது facebook ஐ விட அதிக பயனாளர்களை கொண்டிருக்கிறது . எளிமையாக செய்யும் வசதி இருப்பதினால் மக்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது WhatsApp.
Google Drive
Google Drive இலவசமாக மின்னஞ்சல் சேவையினை வழங்கி வந்த கூகுள் நிறுவனம் பயனாளர்கள் தங்களின் தகவல்களை மின்னஞ்சல் , போட்டோ , வீடியோ , டாக்குமெண்ட் என அனைத்தையும் இலவசமாக இணையத்தில் சேமித்து வைக்கவும் வாய்ப்பினை வழங்குகின்றது . அதிகபட்சமாக 15 GB வரை ஒவ்வொருவரும் டேட்டாவை இலவசமாக சேமித்து வைக்கலாம் . அதனைவிட அதிகமாக இடம் தேவையென்றால் பணம் செலுத்தி வாங்கவேண்டி இருக்கும் .
தொடர்ந்து இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை தெரிந்துகொள்ள Subscribe செய்திடுங்கள் .
பாமரன் கருத்து