Pro BJP, Anti BJP யார், கண்காணிக்கப்படுகிறோமா?

The Wire இணையதளத்தில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது .

 

சுருக்கம் : நாடு முழுவதும் இருக்கின்ற பத்திரிக்கைகள் , தொலைக்காட்சிகள் , எழுத்தாளர்கள் , செய்தியாளர்கள் , விவாதங்களில் பேசுபவர்கள்,சமூக வலைதளங்களில் செயல்படுவோர் என அனைவரின் செயல்பாடுகளை கண்காணித்து பிஜேபி ஆதரவாளர் , பிஜேபி எதிர்ப்பாளர் யார் என பட்டியல் தயாரிக்கப்படுகிறதாம் . இதற்காக தினமும் 200 கும் மேற்பட்டவர்கள் தினம் 12 மணிநேர பணியில் ஈடுபடுகின்றார்கள் .

 

 முக்கிய கேள்வி : எதற்க்காக கண்காணிக்கப்படுகிறார்கள் ?  அப்படி கண்காணிக்கப்படும் தகவலைக்கொண்டு என்ன செய்யப்போகிறார்கள் ?

 

Read in The wire :https://thewire.in/politics/narendra-modi-amit-shah-bjp-india-media/amp/?__twitter_impression=true

 

கண்காணிக்கும் பிஜேபி இன் செயல்பாடு ?

 

விவாதிக்கும் மோடி மற்றும் அமித்ஷா
விவாதிக்கும் மோடி மற்றும் அமித்ஷா

 

சில வாரங்களுக்கு முன்புதான் தமிழகத்தின் செய்தியாளர்கள் சந்திப்பை பிரதமர் நடத்தியதாக சில போட்டோக்கள் கசிந்தன  . ஆனால் அது பற்றிய செய்திகள் எங்குமே கிடைக்கவில்லை .இந்த தருணத்தில் தான் The Wire இணையதளத்தில் இந்த செய்திகள் வந்தன .

அதன்படி டில்லி பிஜேபி இன் பழைய அலுவலகத்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கிறார்கள் . தினம் 12 மணி நேரம் , வாரம் 6 நாட்கள் என தொடர்ச்சியாக பார்க்கிறார்கள்

 

அவர்களுடைய அன்றாட பணி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளிதழ்களை வாசிப்பது , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் , விவாதங்களை பார்ப்பது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கண்காணிப்பது . பிறகு யார் பிஜேபி க்கு ஆதரவாளர் , யார் பிஜேபி க்கு எதிர்ப்பாளர் என்பதனை குறிப்பெடுத்துக்கொள்வது . மாலையில் வரும் மூத்த அதிகாரியிடம் தான் சேகரித்த விவரங்களை கொடுத்து அவர் கேட்கும் சந்தேகங்களை களைவது .

 

விரிவாக பதிவிடப்பட்டிருக்கும் தகவல்கள்
விரிவாக பதிவிடப்பட்டிருக்கும் தகவல்கள்
இதற்க்கான பட்டியல் Google Spreadsheet இல் மிகதெளிவாக பதிவிடப்படுகிறது .

 

BJP கண்காணிப்பது தவறா ?

 

கடந்த காலங்களில் கூட எந்த பத்திரிக்கை , பத்திரிகையாளர் , எழுத்தாளர் தங்களுக்கு ஆதரவானவர்  என்பதை அரசியல் கட்சிகள் தெரிந்துவைத்திருக்கும் , மக்களுக்கும் கூட அது மிகத்தெளிவாகவே தெரியும் .

அதனைதானே பிஜேபி யும் ஆட்களை பணிக்கு அமர்த்தி கண்காணித்து வருகின்றது என கேட்கலாம் ? சரியான கேள்வியும் கூட . கடந்த காலங்களில் பிடிக்காத பத்திரிக்கைகளை எழுத்தாளர்களை எதுவும் செய்ததாக தெரியவில்லை . ஆனால் அண்மைய கால பாதுகாப்பற்ற சூழல் கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தவே செய்கின்றது .

 

இதற்கு மிக முக்கிய காரணம் “கண்காணிக்கும் வேலையை செய்வபர்களிடம் , எதற்காக இதனை செய்கிறீர்கள் ? எதிர்ப்பாளர்களை என்ன செய்யபோகிறீர்கள் ? என்பது போன்ற கேள்விகளை எழுப்பியபோது அவர்களுக்கு அது குறித்தெல்லாம் தெரியவில்லை . “செய்ய சொன்னார்கள் செய்கின்றோம்” என்பது தான் பதிலே

 

பிஜேபி யிடம் எதிர்பார்ப்பது என்ன ?

நீங்கள் மக்களையும் , பத்திரிகைகளையும் , நிருபர்களையும் கண்காணிக்க துவங்கியிருக்கும் வேலை மக்களிடத்திலே பெரும் அச்சைத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன .

[sg_popup id=”3271″ event=”inherit”]மோடி மற்றும் அமித்ஷா [/sg_popup]

 

BJP மட்டுமே இப்படி  கண்காணிக்கும் வேலையை செய்கின்றது என சொல்ல மாட்டேன் . ஒவ்வொரு கட்சியும் அதனால் முடித்தவரையில் முடிந்த வகையில் கண்காணிப்பு வேலைகளை செய்துகொண்டுதான் இருக்கின்றன .

எங்கு பிரச்சனை வருகிறதென்றால் , ஆளும்கட்சியான BJP அந்த தகவல்களை வைத்து  என்ன செய்யப்போகிறது என்பதுதான் . இந்த தகவல்களை சேகரிப்பது தெரிந்துகொள்வதற்கு மட்டுமேதான் என்றால் பிரச்சனை இல்லை . ஆனால் வேறு ஏதாவது (நிர்பந்திப்பது , மிரட்டுவது , ஆபத்துகளை ஏற்படுத்துவது ) செய்தால் தான் தவறு .

 

இதனை தெளிவாக மக்களுக்கு சொல்லிட வேண்டிய பொறுப்பு ஆளுகின்ற பாஜகவுக்கு இருக்கின்றது .

 

செய்தி நிறுவனங்களும் சமூக செயற்பாட்டார்களும் செய்யவேண்டியது என்ன ?

 
ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தலில் தங்களது அதிகார பலத்தை காட்டுவது புதிதல்ல . அதற்காக ஜனநாயகத்தின் முக்கியமான தூணாக விளங்கக்கூடிய பத்திரிக்கைகளும் செய்தி நிறுவனங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அஞ்சிவிட கூடாது . 

எதற்காக இந்த பணிக்கு வந்திர்களோ அதனை எவருக்கும் அஞ்சாமல் செய்து கொண்டே இருங்கள் . 

பொதுமக்களும் கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டும் . சமூகவலைதளங்களில் வருவதை மட்டுமே உண்மையென நினைத்து செயல்பட கூடாது , முடிவெடுக்க கூடாது . 

பாமரன் கருத்து
பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *