கலைஞர் என்னத்த கிழிச்சுட்டார் – இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி திட்டம்

கலைஞர் கருணாநிதி அப்படி என்னத்த கிழிச்சுட்டார் என கேட்கும் தமிழர்களில் சிலருக்காக “கலைஞரின் வண்ண தொலைக்காட்சி செய்த சமூக மாற்றம் குறித்து தான் என்னுடைய கருத்தினை உங்களோடு பகிர விரும்புகின்றேன் “. அவருடைய திட்டங்கள் செய்த மாற்றங்களை உங்களுக்காக  பதிவிடுகிறேன்.

 

உங்களது கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள் . மாற்றுக்கருத்து அவசியம்.

 

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த திரு கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வண்ண தொலைக்காட்சி பெட்டியினை வழங்கிடும் திட்டத்தை கொண்டு வந்தார் . அதன்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது .

 

Kalaingar karunanithi distribute free TV to Tamilnadu People
Kalaingar karunanithi distribute free TV to Tamilnadu People

 

அப்போதெல்லாம் தொலைக்காட்சி என்பது அரிதாக பணக்காரர்களின் வீடுகளில் மட்டுமே இருக்கக்கூடிய ஒன்று . அக்கபக்கத்தில் இருப்பவர்கள் தொலைக்காட்சியை காணவேண்டுமெனில் பணக்காரர்களின் வீடுகளின் முன்னால் காத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலை .
அப்போது யார் பணக்காரர்களாக இருந்திருப்பார்கள் ? பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் , பணக்காரர்கள் , உயர்சாதியினர்  என ஏதேனும் ஒரு பிரிவினர் தான் . வீடுகளுக்கு வெளியேயும் ஜன்னல்களிலும் தொலைகாட்சியை காண காத்துக்கிடப்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள் .

 

மேலும் தொலைக்காட்சியின் மூலமாக ஒரு சமூகத்தினர் மட்டுமே அதிக விவரங்களை அறிந்தவர்களாக இருந்தனர் . அவர்கள் சொல்வதை கேட்டும் நம்பியும் வாழும் நிலைமையில் இருந்தனர் ஏழை எளிய மக்கள் .

 
கலைஞரின் வண்ண தொலைக்காட்சிப்பெட்டி

 

கலைஞர் அவர்களின் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டியின் மூலமாக ஏழை பணக்காரன் என்கிற பாகுபாட்டை உடைத்து அனைத்து மக்களும் தொலைக்காட்சியினை கண்டு ரசித்தனர் , யார் வீடுகளின் முன்னாலும் காத்துக்கிடக்கமால் .

 

 

கலைஞர் அவர்கள் தன்னுடய சொந்தப்பணத்தில இதனை செய்யவில்லை , முதல்வராக இருக்கும் எவரும் அவ்வாறு செய்யவும் முடியாது . அது மக்களின் பணம் தான் , மறுப்பில்லை . ஆனால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்திய வண்ண தொலைக்காட்சி திட்டம் என்பது கலைஞர் ஒருவரால் கொண்டுவரப்பட்ட  மாபெரும் திட்டம் . ஏழை எளிய மக்களுக்கான கலைஞரின் மகத்தான திட்டம் .

 

வெறுப்பவர்கள் ஊழல் , தொலைக்காட்சி கிடைக்கவில்லை , வீண் செலவு என்றெல்லாம் பேசுவார்கள் .

 

தொலைக்காட்சி பார்க்க அடுத்த வீடுகளில் காத்துக்கிடந்த ஏழை மக்களிடம் கேட்டுப்பாருங்கள் , அவர்கள் சொல்லுவார்கள் இலவச வண்ண தொலைக்காட்சி
வீட்டிற்கு வந்தவுடன் அடைந்த சந்தோசத்தை …..

 

கலைஞருக்கு சொம்பு தூக்க வேண்டிய அவசியமில்லை . அவர் ஏற்கனவே பல உயரங்களை அடைந்துவிட்டார் . இந்த பதிவு புரிந்துகொள்வதற்கு மட்டுமே

 

பாமரன் கருத்து

 

2 thoughts on “கலைஞர் என்னத்த கிழிச்சுட்டார் – இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி திட்டம்

  • July 28, 2018 at 4:05 pm
    Permalink

    முற்றிலும் உண்மை. கலைஞர் ஆட்சியில் தவறுகள் நடந்திருக்கின்றன. ஆனால் சமூகத்திற்கு அவர் எதுவுமே செய்யவில்லை என்பது ஒத்துக்கொள்ள முடியாதது. பிற்படுத்தப்பட்ட இன மக்களுக்கு அளப்பரிய முன்னேற்றத்தைக் கொடுத்தவர் என்பதை யாரும் மறுக்க இயலாது.

    Reply
    • July 28, 2018 at 8:42 pm
      Permalink

      நிச்சயமான உண்மை

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *