அழிவின் விளிம்பில் பூமி | CO2 வை வெளியேற்றுவது எவ்வளவு முக்கியமானது ? எப்படி செய்வது ?

ஒவ்வொரு நாடும் வளரவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் எந்த விதிகளையும் பின்பற்றாமல் கண்டபடி தொழிற்சாலைகளில் இருந்தும் அன்றாட பயன்பாடுகளில் இருந்தும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை காற்றில் வெளியிடுகின்றன .

Carbon emission from factory
Carbon emission from factory

பெரும்பாலும் இவ்வாறு அதிகபடியான கார்பனை வெளியிடும் நாடுகள் என்று பார்த்தால் அவை வளரும் நாடுகளாகவும் வளர்ந்த நாடுகளாகவுமே இருக்கின்றன . அந்த வரிசையில் அமெரிக்கா , சீனா , இந்தியா போன்ற நாடுகளுக்கு அதிகமான பங்கு இருக்கின்றது .

 

 புகை வெளியிடும் நாடுகள் சுற்றுசூழலை காக்க போதுமான நடவடிக்கைளை எடுப்பதில்லை

சுற்றுசூழல்  மாசுப்பாட்டை குறைக்கவும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தி வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த உலக நாடுகள் பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன .

All countries together for Paris Agreement
All countries together for Paris Agreement
Read about Paris Agreement
ஆனால் அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி இனி வெளியிடப்படும் கார்பனின் அளவினை குறைத்தால் மட்டும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்திட முடியாது , ஏற்கனவே காற்றில் கலந்திருக்கும் கார்பன் (CO2 ) அளவினை குறைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் .
ஏற்கனவே நாம் அளவினை கடந்து மாசினை ஏற்படுத்திவிட்டோம்
தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 41 பில்லியன் டன்னுக்கும் அதிகமான அளவில் கார்பன் டை ஆக்ஸைடை ஆண்டுக்கு காற்றில் வெளியிடுகிறோம் . ஆகையால் வெறுமனே கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுவதை குறைப்பது மட்டும் போதாது, ஏற்கனவே இருப்பதையும் அகற்றுவது முக்கியம் .
ஆனால் பாரீஸ் ஒப்பந்தத்தில் இதற்கான வழிமுறைகள் சொல்லப்படவில்லை என்கிறார்கள் .
நாம் காற்றில் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை முற்றிலும் குறைப்பது என்பது நிச்சயமாக சாத்தியமற்ற ஒன்று . ஏதேனும் ஒரு முறையில் கார்பன் டை ஆக்சைடு காற்றில் கலந்துகொண்டுதான் இருக்கும் . ஆகவே தான் காற்றில் இருக்கக்கூடிய கார்பன் டை ஆக்ஸைடை அகற்றிட வேண்டியது அவசியம் .

கார்பன் டை ஆக்ஸைடை அகற்றுவது எப்படி ?

ஒருநாள்  கார்பன் டை ஆக்ஸைடை காற்றில் இருந்து வெளியேற்றுவதன் முக்கியதுவத்தை நாம் அறிந்துகொள்ளத்தான் போகின்றோம் ,அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது .
சில முறைகளில் காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை பிரித்தெடுக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள் .

Direct Air Capture

Direct air capture method to remove co2
Direct air capture method to remove co2
இந்த முறைப்படி அதிக சக்தி வாய்ந்த மின்விசிறி ஒன்று காற்றினை சவ்வு போன்ற பகுதிக்குள் இழுக்கும் . அப்போது காற்றில் இருக்கக்கூடிய  கார்பன் டை ஆக்ஸைடை ஈர்க்கும் வேதிப்பொருள்களுடன் இணைந்து கார்பனேட் நீர்மமாக மாறுகிறது , இதிலிருந்து கார்பன் பிரித்தெடுக்கப் படுகிறது .
இந்த முறையை Carbon Engineering நிறுவனம் பயன்படுத்துகின்றது .

Afforestation

கார்பன் டை ஆக்சைடை அதிகம் வெளியிடும் பகுதிகளில் கார்பன் டை ஆக்சைடை அதிகம் உறிஞ்சக்குடிய மரங்களை நடுவதன் மூலமாக காற்றினில் கலக்கப்படும் கார்பன் டை ஆக்சைடை குறைக்க முடியும் .
அண்மையில் TED Talks எனப்படும்  புகழ்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆய்வாளர் ஒருவர் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து பிரித்தெடுப்பதன் முக்கியத்துவதையும் , அதற்கு ஆகின்ற செலவுகள் குறித்தும் , லாபம் பார்க்க நினைக்காமல் பூமியை காப்பாற்றிட நாம் இதனை செய்தே ஆகவேண்டும் எனவும் வலியுறுத்தி பேசியிருந்தார் .
Video :

 

அதிகப்படியான செலவு

 

தற்போதுள்ள முறைகளின்படி ஒரு டன் அளவுள்ள கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து நீக்குவதற்கு கிட்டதட்ட 100 டாலர்களுக்கும்  அதிகமாக இருக்கின்றது . இது மிகவும் அதிகமானது தான் . இந்த செலவினத்தை குறைத்து ஒரு டன் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து நீக்குவதற்கு ஆகும் செலவினை 40 டாலருக்குள் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன .

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் முன்வர வேண்டும்

பாரீஸ் ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பினை தெரிவித்து அமெரிக்க நாட்டினை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றிக்கொண்டார் .

பொறுப்பற்று ஒதுங்கிய அமெரிக்கா

உலகின் பெரிய பொருளாதார நாடு அமெரிக்கா ஒன்றுமட்டும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி இருப்பது மிகவும் கவலை அடையக்கூடியது .

காற்றிற்கு  எல்லைகள் கிடையாது , ஒரு நாடு அளவுக்கு அதிகமாக கார்பனை வெளியிட்டாலும் மற்ற நாடுகளிலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும் . ஆகையால் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே பாதிப்பிலிருந்து பூமியை காப்பற்றிட முடியும் .

 

பொதுமக்களுக்கும் இதில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது . அனைவரும் இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் .

 

காற்று மாசு இந்தியாவின் நிலை

இந்தியாவில் காற்று மாசு காரணமாக அதிகரிக்கும் மரணங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றது . தலைநகர் டெல்லி காற்று மாசின் காரணமாக பாதிப்படைந்திருப்பதை நாம் அனைவரும் கண்கூடாக பார்க்கின்றோம் . உச்சநீதிமன்றமும் கூட பலமுறை கண்டங்களை தெரிவித்து இருக்கின்றது .

Air pollution in india
Air pollution in india

ஆனால் இவற்றினை தடுக்க அரசு ஏதெனும் முயற்சிகளை எடுக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே தெரியவருகின்றது.

 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *