விழித்திரு! – குட்டி கதையோடு விழிப்புணர்வு

 

விழித்திரு என்ற தலைப்பை பார்த்தவுடன் தூங்காமல் விழித்திருக்க சொல்கிறேன் என எண்ணியிருந்தால் நீங்கள் இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என அர்த்தம் . உண்மையான விழித்திருத்தல் என்பதற்கு அர்த்தம் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வோடு நாம் இருக்கிறோமா என்பதே . 

உதாரணத்திற்கு இன்று பலருக்கு தங்கள் துறையில் என்னவிதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன , அதில் நாம் என்ன மாற்றம் செய்யலாம் , பிற்காலத்தில் என்ன நடக்கும் என எந்தவித கவலையும் இன்றி நாட்களை நகர்த்தி வருகின்றோம் . இது அலுவலகத்தில் வேலை பார்ப்போருக்கு மட்டுமல்ல ரோட்டில் இட்லி கடை வைத்திருப்பவர் முதல் அம்பானி அளவிற்கு உள்ளவர்களுக்கும் பொருந்தும் . 

விழிப்புணர்வுடன் இருப்பவர்கள் வாய்ப்புகளை அறிந்து பயன்படுத்தி வெல்கிறார்கள் , விழிக்காமல் இருப்பவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டு தோற்கிறார்கள் . 

குட்டி கதை : 

காட்டிற்குள் இருக்கும் கோவிலொன்றில் இளநீர் கடை ஒன்றினை ஒருவர் வைத்திருக்கின்றார் . அந்த பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகமென்பதால் அவற்றினை விரட்டுவதற்காக பெரிய குச்சியொன்றினை கையிலேயே வைத்திருப்பார் . 

ஆனாலும் குரங்குகள் எப்படியாவது இளநீரை எடுத்தே ஆகவேண்டும் என முயற்சித்து அவர் கவனம் எப்போது சிதறும் என வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கும் . அவரும் சளைக்காமல் வாய்ப்பினை கொடுக்காமல் அந்த குரங்குகளை விரட்டிக்கொண்டு இருப்பார் . 

ஆனாலும் அவர் கவனம் சிதறிய அந்த ஒரு நொடியில் ஒரு இளநீரை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டது ஒரு குரங்கு . 

அந்த குரங்கு வெற்றிபெற்றதற்கு காரணம் என்ன நண்பர்களே ?

 

கடைக்காரரை விட அதிக அக்கறையோடு அதன் குறிக்கோளை அடைய, வாய்ப்பு எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்து அதனை பயன்படுத்தி கொண்டதாலேயே அந்த குரங்கு வெற்றி பெற்றது . 

அதுபோலத்தான் நண்பர்களே நாம் வாய்ப்பிற்காக நம்மை தயார் செய்துகொண்டு, அதற்கான சமயத்தை எதிர்பார்த்து , கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி வென்றிட வேண்டும் . 

தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வெல்லும் சமயம் எதிர்பார்த்து வென்றிடுங்கள் நண்பர்களே !

 

விழித்திரு ! 

நன்றி
பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *