துப்பாக்கிசூட்டை தடுக்க டிரம்ப் சொன்ன முட்டாள்தனமான யோசனை

சில நாட்களுக்கு முன்பாக புளோரிடா மாகாண பள்ளியில் நடந்த முன்னால் மாணவர் ஒருவரின் துப்பாக்கிசூட்டில் 17 மாணவர்கள் துயர மரணம் அடைந்தனர் . அதில் இருந்து தப்பி பிழைத்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் “துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர் “.
அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் : அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை விட அந்நாட்டு குடிமக்களே நடத்திடும் துப்பாக்கி சூடுகள் தான் அதிகம் . விரக்தி அல்லது ஏமாற்றம் உள்ளிட்டவற்றை சந்திக்கும் அவர்களின் முடிவாக இருப்பது யாரையேனும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்வது தான் .

அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு சென்றால் உரிமம் இல்லாமலே கூட எண்ணற்ற துப்பாக்கிகளை துப்பாக்கிகளை வாங்கமுடியும் என்கிறார்கள் அங்கிருப்பவர்கள் .

டிரம்ப் சொன்ன யோசனை :

தூப்பாக்கிசூட்டில் தப்பிப்பிழைத்தவர்களுடன் அமெரிக்க அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார் .

அப்போது பேசிய அவர் பள்ளிகளில் துப்பாக்கிசூட்டை தடுக்க 20 சதவிகித ஆசிரியர்களுக்கு துப்பாக்கி சுடும்  பயிற்சியளித்து நியமித்தால் சரி செய்துவிடலாம் என்கிற யோசனையை தெரிவித்துள்ளார் .

இது எப்படி சரியான யோசனையாக  இருக்க முடியும் . பள்ளிக்குள் துப்பாக்கியே இருக்க கூடாது என எதிர்பார்த்தால் 20 சதவிகித ஆசிரியர்களின் கைகளில் துப்பாக்கியை கொடுப்பது எவ்வகையில் சரியானது . அந்த ஆசிரியர்களே மன அழுத்தத்தில் துப்பாக்கி சூட்டை நிகழ்த்தினால் என்ன செய்வது ?

துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிப்பதே சிறந்த வழி :

துப்பாக்கி சூட்டை ஒழிக்க துப்பாக்கியை பொதுமக்களிடம்  கொடுப்பது முட்டாள்தனமான யோசனை . துப்பாக்கி எல்லையை காப்பவர்களிடம் , காவலர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் . அதனைவிட்டு நாட்டிற்குள் இருக்கும் குடிமக்களிடம் இருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க எவராலும் முடியாது .

துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழித்துவிட்ட நாடாக அமெரிக்கா உயர்ந்தால் அந்நாட்டு மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் .

இதனை செய்வாரா டிரம்ப் ?

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *