அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு சென்றால் உரிமம் இல்லாமலே கூட எண்ணற்ற துப்பாக்கிகளை துப்பாக்கிகளை வாங்கமுடியும் என்கிறார்கள் அங்கிருப்பவர்கள் .
டிரம்ப் சொன்ன யோசனை :
அப்போது பேசிய அவர் பள்ளிகளில் துப்பாக்கிசூட்டை தடுக்க 20 சதவிகித ஆசிரியர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியளித்து நியமித்தால் சரி செய்துவிடலாம் என்கிற யோசனையை தெரிவித்துள்ளார் .
இது எப்படி சரியான யோசனையாக இருக்க முடியும் . பள்ளிக்குள் துப்பாக்கியே இருக்க கூடாது என எதிர்பார்த்தால் 20 சதவிகித ஆசிரியர்களின் கைகளில் துப்பாக்கியை கொடுப்பது எவ்வகையில் சரியானது . அந்த ஆசிரியர்களே மன அழுத்தத்தில் துப்பாக்கி சூட்டை நிகழ்த்தினால் என்ன செய்வது ?
துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிப்பதே சிறந்த வழி :
துப்பாக்கி சூட்டை ஒழிக்க துப்பாக்கியை பொதுமக்களிடம் கொடுப்பது முட்டாள்தனமான யோசனை . துப்பாக்கி எல்லையை காப்பவர்களிடம் , காவலர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் . அதனைவிட்டு நாட்டிற்குள் இருக்கும் குடிமக்களிடம் இருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க எவராலும் முடியாது .
இதனை செய்வாரா டிரம்ப் ?
நன்றி