கூகுள் : உங்கள் தகவல்களை பாதுகாப்பானதாக ஆக்கிவிட்டீர்களா ?

இணைய உலகில் முன்னனி நிறுவனமான கூகுள் தனது பயனாளர்களின் தகவல்களை ஹேக்கர்கள் , மலிசியஸ் ஆப் களிடம் இருந்து பாதுகாக்கவும் , சுய தகவல்களை இழப்பதை தவிர்க்கவும் பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தியுள்ளது (Google Security Check ). அதனையும் நாமே செய்யும் அளவிற்கு எளிமையாக்கியுள்ளது கூகிள் .

எப்படி செய்வது (Google Security Check)  :

மிகவும் எளிமை இதனை செய்வது . நீங்கள் உங்கள் அக்கவுன்டிற்குள் login செய்து “g.co/securitycheckup ” என்ற லிங்கை கிளிக் செய்யவும் . அவ்வளவுதான் உங்கள் அக்கவுண்டில் இருக்ககூடிய பிரச்சனைகளை கூகிள் (Google) சொல்லிவிடும் .

Issues என்பதனை கிளிக் செய்தால் என்ன பிரச்சனை என்ற தகவலும் அதனை சரி செய்வதற்கான ஆப்சன்களும் அங்கேயே இருக்கும் .
நீங்கள் அந்த பிரச்சனைகளை சரி செய்தவுடன் உங்கள் அக்கவுண்டில் பச்சை நிற டிக் (Green Tick mark) வந்துவிடும் . அவ்வாறு பச்சை நிற டிக் வந்துவிட்டால் உங்களது அக்கௌன்ட் பாதுகாப்பாக இருக்கின்றது என்பது பொருள் .
Google Security Check
Google Security Check

ஆண்ட்ராய்டு(Android Phone) போன்களை பாதுகாப்பாக இயக்கிட (Google Security Check) :

பெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் போன்களில் ஆண்ட்ராய்டு முன்னிலை வகிக்கின்றது . அதன் எளிமையான செயல்பாடுகளினால் பலரும் பல இடங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்கின்றனர் . இது முற்றிலும் தவறானது என்கிறது கூகுள்  .

ஆகவே பயனாளர்கள் கண்டிப்பாக ஆப்களை  Google playstore இல் இருந்து டவுண்லோடு செய்யவேண்டும் என்கிறது கூகிள் . 2017 இல் மட்டும் சுமார் 7 லட்சம் ஆப்கள் கூகுள் விதிமுறைகளை மீறியிருப்பதாக தெரிவித்துள்ளது .

எங்கிருந்தும் இயக்கலாம் :

இந்த முகவரியில் android.com/find login செய்து காணாமல் போன உங்களது device ஐ இயக்க முடியும் ..லாக் செய்ய முடியும் .

ஏற்கனவே பாதுகாப்பானதாக மாற்றப்பட்ட ஜிமெயில் :

ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஜிமெயில் (Gmail )

இரண்டடுக்கு பாதுகாப்பை கொண்டுள்ளது . முதல்கட்டமாக password கேட்கும் இரண்டாவதாக மொபைல் எண்ணிற்கு குறுந்தகவலை அனுப்பிடும் அதன் மூலமாக பாதுகாப்பனதாக செயல்படுகிறது .

தற்போது இந்த பாதுகாப்பை விரிவுபடுத்தி இருக்கின்றது கூகுள் . பயன்படுத்தி பாதுகாப்பனதாக உங்கள் அக்கவுண்டை மாற்றிடுங்கள் .

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “கூகுள் : உங்கள் தகவல்களை பாதுகாப்பானதாக ஆக்கிவிட்டீர்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *