முத்தலாக் : தடை செய்யப்பட வேண்டும் (Ban Tri Talak)

இந்தியா பண்முக தேசம் அதில் பல மதத்தவரும் தங்களுக்கென பல பழக்கவழக்கங்களை கடைபிடிக்கவும் அடுத்த தலைமுறைக்கு அதனை கடத்திடவும் உரிமை உண்டு . அதற்காகத்தான் இந்துக்களுக்கு என்று தனி சட்டம் முஸ்லீம் மக்களுக்கு என்று தனி சட்டமும் பிற மதத்தினருக்கு சிறப்பு விலக்குகளும் நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டன . இதன் ஒட்டுமொத்த நோக்கமும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவே .

இந்துக்களின் சட்டப்படி ஒரு பெண்ணினை விவகாரத்து செய்யவேண்டுமெனில் ஏதோ ஒரு அம்மன் கோவிலுக்கோ சிவன் கொவிலுக்கோ கூட்டி சென்று ஒரு வார்த்தையை மூன்றுமுறை கூறி விவகாரத்து செய்துவிட முடியாது . நிச்சயமாக நீதிமன்ற நடவெடிக்கைகளுக்கு பிறகே ஒரு இந்துவால் விவகாரத்து பெற முடியும் . இதனால் இந்து பெண்களுக்கு பாதுகாப்பு என்பது உண்டு.
 
 
 
ஆனால் முசுலீம் மதத்தில் தலாக் என்ற வார்த்தையை மூன்றுமுறை கூறினால் போதும் . விவகாரத்து முடிந்துவிடும் . விவகாரத்திற்க்கான காரணம் தெரியாது, மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாது . ஆலோசனை கிடையாது . தற்காலத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் தலாக் சொல்லி விவகாரத்து கொடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண்களே கூறியுள்ளனர் .

ஒரு இந்து பெண்ணிணை விவகாரத்து செய்யும் போது அதற்கான கால அவகாசமும் அவளது கருத்துக்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன . ஆனால் முஸ்லீம் பெண் என்பதாலேயே சில ஆண்கள்  தலாக் முறையினை கொண்டு கேள்விகள் வாய்ப்புகள் கருத்துக்கள் என எதற்கும் வாய்பளிக்காமல் விவாகரத்து செய்துவிடுகின்றனர்.  வேறு மதத்தில் பிறந்துவிட்டதை மட்டுமே அடிப்படையாக கொண்டு முஸ்லீம் பெண்ணுக்கு ஒரு நீதியும் இந்து பெண்ணுக்கு ஒரு நீதியும் கொடுப்பதென்பது நியாயமாகாது.நாம் சுதந்திரம் அடைந்தபோது முசுலீம் மக்களை நம்மோடு வைத்திருக்க வேண்டி அவர்களின் சம்பிரதாயங்களை கேள்விக்கு உட்படுத்தாமல் அப்போதைய ஆட்சியாளர்கள் விட்டுவிட்டனர். அந்த சூழ்நிலையில் அது சரி.. ஆனால் காலம் இன்று கனிந்துவிட்டது . பெரும்பலான முசுலீம் இன மக்களே குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களே இன்று தலாக் முறைக்கு எதிராக நிற்கிறார்கள் . அது தவறு என உணர்ந்திருக்கிறார்கள்.

இந்து, முஸ்லீம் என்பதனை தாண்டி அவள் ஒரு பெண் என்பதனை முக்கிய கருவாக வைத்து தலாக் விவகாரத்து முறையினை அணுகுவது காலத்தின் கட்டாயம் .முசுலீம் பெண்களுக்கும் சமூக பாதுகாப்பு உரிமை அளிக்கப்படுவதை இந்திய அரசு உறுதி செய்தவேண்டியது அவசியம் . 

இதனை ஒரு சமூக மாற்றமாக எண்ணி அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். இதையே அடிப்படையாக கொண்டு முஸ்லீம் மதத்தின் பிற கூறுகளில் ஆதிக்கம் செலுத்திட முயலக்கூடாது. அது நமது சமூக ஒற்றுமையை குலைத்துவிடும்..

முஸ்லீம் நண்பர்கள் இதனை முற்போக்கு எண்ணத்துடன் ஒப்புக்கொண்டு வரவேற்க வேண்டும்.

நன்றி 
பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *