சாதிக்க என்ன செய்ய வேண்டும் – சுய முன்னேற்ற பதிவு

சாதிக்க பலருக்கு ஆசை இருக்கும் , நல்ல திறமைசாலியாகவும்  கடுமையாக வேலை செய்யும் திறனும்  கூட பெற்று இருப்பார்கள் . ஆனால் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்புடிக்க முடியாமல் வாய்ப்புகளை தேடி அலைந்துகொண்டிருப்பார்கள் அல்லது கிடைத்த வேலையில் மாத சம்பளத்தில் அரை மனதோடு பணியாற்றி கொண்டிருப்பார்கள் .
அந்த நபர் நீங்களாகவோ நானாகவோ கூட இருக்கலாம் .

இப்படிப்பட்ட நாம் சாதிக்க என்ன செய்யவேண்டும் ? இதோ சில வழிமுறைகள் உங்களுக்காக ….

 

உங்கள் திறமையை அறிந்திடுங்கள் :


சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவரும் முதலில் செய்ய வேண்டியது “எதில் நாம் திறமையானவராக இருக்கிறோம் ?” என்ற கேள்விக்கு விடை தெரிந்துகொள்வது தான் . இதை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் சாதிப்பது மிக எளிது .

உங்கள் திறமையை சில நேரங்களில் உங்கள் அருகிலே இருப்பவர்கள் மூலமாக கூட அறிய முடியும் .

 

ஈடுபாடு எதில் அதிகம் :

பல விசயங்களில் திறமை இருக்கலாம் . ஆனால் எந்த விசயத்தில் ஈடுபடும்போது உங்கள் மனதிற்கு பிடித்திருக்கின்றது , தொடர்ச்சியாக செய்ய முடிகின்றது என்று பாருங்கள் .

உதாரணத்திற்கு ஒருவருக்கு பாடவும் ஓவியம் தீட்டவும் தெரியும் . ஆனால் பாடும் போது இருப்பதைவிட சந்தோசமாகவும் ஆர்வமாகவும் ஓவியம் வரையும்போதே இருக்குறீர்கள் என்றால் நீங்கள் ஓவியத்தை தேர்ந்தெடுப்பதே சிறந்தது .

 

துறை சார்ந்து அறிவை மேம்படுத்துதல் :

திறமையை மட்டும் கண்டறிந்துவிட்டு அதை தொடர்ச்சியாக செய்தால் நாமும் ஒன்றோடு ஒன்றாக மாறிவிடுவோம் . ஆகையால் தற்சமயம் நாம் தேர்ந்தெடுத்த துறையில் என்ன மாதிரியான புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள் , பிரபலமானவர்கள் என்ன மாதிரி தனித்துவத்தை பெற்று இருக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும் . அதில் நாமும் சிறப்பானதொரு  அறிவை பெறுதல் வேண்டும் .

தனித்துவம் பெறுதல் :

இன்று ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற திறமையாளர்கள் இருக்கிறார்கள் . ஆனால் சிலர் மட்டுமே ஜெயிப்பதற்கு முக்கிய காரணம் அவர்களிடம் தனித்துவமான ஏதோ ஒன்று இருக்கும் . அந்த தனித்துவத்தை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பானவராக மாறிவிட்டால் நீங்களே சாதனையாளர் .

திறமையை வெளிப்படுத்துதல் :

 

முன்பு பல திறமையாளர்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது . வாய்ப்புகளை தேடி அலைவார்கள் . கிடைத்துவிட்டால் தன் திறமையை காட்டி ஜெயிப்பார்கள் . கிடைக்காவிட்டால் தேடியே வாழ்வை இழந்திருப்பார்கள் .

ஆனால் இன்று அப்படியில்லை , சமூக வலைத்தளமும் இணையமும் உங்களுக்கு உதவ காத்திருக்கின்றன . ஆமாம் நல்ல புகைப்படம் எடுக்கும் திறமை இருப்பின் நீங்கள் வாய்ப்பினை தேடி அலைவதோடு இணையத்தில் உங்கள் சிறந்த புகைப்படங்களை பதிவிடலாம் . அதனை காணுவோர் உங்களுக்கு வாய்ப்பினை கொடுக்கலாம் . ஆகவே தொடர்ச்சியாக உங்களது திறமையை வெளிப்படுத்திக்கொண்டே இருங்கள் .

சிறந்த சாதனையாளராக நீங்கள் மாறிட வாழ்த்துக்கள் .

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *