5 interesting facts about SIM card? | Tamil | சிம் கார்டு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

Mobile பயன்படுத்துகின்ற அனைவருக்கும் சிம் கார்டு (SIM CARD) எப்படி இருக்குமென்பது தெரியும் , ஒரு சிறிய பிளாஸ்டிக் அட்டையில் (chip) சிப் பொருத்தப்பட்டு இருக்கும் . அந்த சிறிய பிளாஸ்டிக் அட்டை எவ்வளவு சிறப்பான விசயங்களை கொண்டிருக்கின்றது தெரியுமா ?.

 

Mobile SIM Card
Normal Mobile SIM Card

 

மொபைல் எண்ணுக்கான அடையாளம் (identifier) மற்றும் contact details சேமிக்கும் வசதியும் சிம் கார்டில் இருக்கும் .மொபைல்போனில் இருந்து நெட்ஒர்க்கில் இணைந்து call போன்றவற்றினை செய்ய SIM Card இல் இருக்கக்கூடிய தகவல்கள் அவசியம்.

 

SIM என்பதற்கு ஆங்கில விரிவாக்கம் Subscriber Identity Module

 

 ஒரு சிறிய பிளாஷ்டிக் துண்டிற்குள் இருக்கக்கூடிய சிப்பில் Subscriber Profile (Unique ID), IMSI, Authentication Key சேமிக்கப்பட்டு இருக்கும் , அதன் மூலமாகவே சிம் பொருத்தப்பட்ட மொபைல் நெட்ஒர்க் உடன் இணைந்து கொள்ளும் .பிறகு Call களை செய்திட முடியும் .

 

When First SIM card introduced?

 

1992 ஆம் ஆண்டுவாக்கில் GSM வசதிகொண்ட மொபைல் போன்களுடன் சிம் கார்டு வந்தது . Nokia  1011 தான் முதலாவதாக வெளியான GSM Mobile .

 

Why SIM card is must for Mobile?

 

SIM card என்பது European Telecommunication Standard படி தயாரிக்கப்படுகிறது . அதன்படி மொபைல் போனில் பொருத்தும்படி சிம் கார்டு தயாரிக்கப்பட வேண்டும் . மேலும் தனித்துவமான அடையாள எண் (Unique ID ) உள்ளிட்ட பாதுகாப்பு குறியீடுகள் அனைத்தையும் கொண்ட Chip பிளாஸ்டிக் அட்டைக்குள் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்

 

GSM தொழில்நுட்பத்தில் அழைப்புகள் encrypt செய்து டிஜிட்டல் வடிவத்தில் அனுப்பப்படும் . அந்த அழைப்புகளை decrypt செய்வதற்கான ரகசிய குறியீடு சிம் கார்டில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்

 

 SIM card கார்டு எதையெல்லாம் சேமித்து வைக்கும் ? | SIM card Storage

 

மொபைல் இல் தற்போது பயன்படுத்துகின்ற சிம் கார்டின் சேமிப்பு திறன் 128 KB முதல் 256 KB வரை இருக்கும் . ஒவ்வொரு சிம் கார்டிலும் மொபைல் நெட்ஒர்க்கில் இணைவதற்கான தகவல்கள் (Host Information) , IMSI (International Mobile Subscriber Identity), Subscriber Profile போன்ற தகவல்கள் இருக்கும் .

 

மேலும் குறைவான Contact களையும் சேமித்து வைக்கவும் முடியும் .

 

 SIM card இல்லாமல் உங்களால் மொபைலில் இருந்து call, message , internet என எதையும் செய்திட முடியாது .

 

Telecommunications Standard இன் படி அனைத்து நாடுகளிலும் (193 Countries) SIMCard ஒரே அளவில் தான் இருக்கும் .

 

Mini micro nano SIM card
Mini micro nano SIM card

 

Full Size, Mini SIM, Micro SIM, Nano SIM என பல வடிவங்களில் SIM Card வந்துவிட்டது .

 

எதிர்கால எப்படி இருக்கும் ? | Future SIM card

 

நாம் அனைவரும் எதிர்காலத்தில் பயன்படுத்தப்போகிற சிம் கார்டு eSIM card தான் . இதில் ஒரு chip ஒன்று நிரந்தரமாகவே மொபைலில் பொருத்தப்படும் . அதோடு  இருக்கும் Remote SIM Provisioning மூலமாக நமது eSIM ஐ activate செய்துகொள்ளலாம் .

 

eSIM (Embedded SIM)

 

தற்போது Google Pixel 2 , Apple Watch 3 (Few Cars) ஆகியவற்றில் eSIM பயன்படுத்தப்படுகிறது .

 

How to Secure your SIM card?

 

Insert SIM card into mobile
Insert SIM card into mobile

 

நமது SIM CARD அடுத்தவர்களால் திருடப்பட்டால் அதனை வேறு மொபைலில் போட்டு  அதிலிருந்து அவர்களால் call செய்திட முடியும் , நமது contact தகவல்களை பெற முடியும் .

 

இதுபோன்று நடைபெறுவதை தவிர்க்க SIM LOCK என்கிற வசதியை பயன்படுத்திட வேண்டும் . ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் உள்ளிட்ட அனைத்து மொபைல்களிலும் இந்த வசதி இருக்கின்றது . இதனை ஆன் செய்து PIN எண்ணை வைத்துவிட்டால் போதும் உங்களது SIM card ஐ வேறு கருவியில் போட்டால் PIN எண்ணை கேட்கும் . சரியான PIN எண்ணை கொடுக்காவிடில்  SIM உடனடியாக lock செய்யப்படும் . அலுவலகத்திற்கு  சென்று போதிய ஆதாரங்களை காட்டி அதே எண்ணுடைய புதிய SIM card ஐ பெற்றுக்கொள்ளலாம்.

 

PAMARAN KARUTHU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *