வறுமை பத்திற்கும் மேலே செய்யும் – சிறுகதை – ஸ்ரீ
பணம் பத்தும் செய்யும் என்பார்கள் ஆனால் வாழ்க்கையில் வறுமையும் கூட பத்திற்கும் மேலே செய்யும் என்பதை எவரும் இங்கு சொல்வதில்லை .
…உதாரணம் இக்கதை …
அன்று வேலை கொஞ்சம் அதிகமாகிவிட்டதால் எப்போதும் வரக்கூடிய பேருந்தில் வசந்தியால் வர முடியவில்லை . அதற்கு அடுத்த பேருந்தில் தான் வந்துகொண்டிருந்தாள் .
பேருந்து வந்து நிறுத்தத்தில் நின்றதும் வசந்திக்காக காத்திருந்த அவளது அம்மா படபடப்புடன் “என்ன ஆச்சு ,ஏன் வசந்தி போன பஸ் ல வரல …நான் என்னமோ ஏதோனு நெனச்சுட்டேன் , ஒரு போன் பண்ணி சொல்லிருக்கலாம்ல “என அடுக்கினார் .
“எங்கமா உன் போனு நான் அடிச்சேன் நீதான் எடுக்கல ” என வசந்தி சொல்ல பதறிப்போன அவளது அம்மாவிற்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது வீட்டுல சார்ஜ் போட்டுட்டு வந்த நெனப்பு . “அட ஆமா ! புல்லருக்க போயிட்டு வந்து சார்ஜ் போட்டதை எடுக்கல வசந்தி , வா போலாம் ” என்று வீட்டிற்கு கிளம்பினார்கள் .
வரும் வழியில அவளது அம்மா ” வசந்தி போன வெள்ளிக்கிழமை உன்ன பொண்ணு பாக்க வந்தாங்கல்ல அவங்க வேணாம்னு சொல்லிட்டாங்களாம் ” . வசந்தி ” நான்தான் இப்போ எனக்கு ஒன்னும் வேண்டாம்னு சொல்லுறேன்ல நீதான் கேக்காம வாரம் ஒருத்தரா வர வச்சு கொல்ற ” என்றாள் . ” அவங்க உன்மேல குறை ஒன்னும் சொல்லல , பொண்ணு லட்சணமாத்தான் இருக்கு ஆனா நல்ல வீடு இல்ல , மச்சுனனுக்கும் நல்ல வேலைனு சொல்லிக்கும்படியா ஒன்னும் இல்லனு யோசிக்கிறாங்களாம் ” என்றார்.
” சரி விடும்மா ” என்றால் வசந்தி.
“உங்கஅப்பா இருந்திருந்தா இப்புடியெல்லாம் சொல்ல விட்டிருப்பாரா “என கலங்கினார் வசந்தியின் அம்மா .
வசந்தியின் அப்பா மரம் அறுக்கும் மில்லில் நடந்த விபத்தில் இறந்து போனார் . அப்போது மூத்தவளான வசந்திக்கு 13 வயதிருக்கும் , அவள் தம்பிக்கு 10 வயதிருக்கும் . திடீரென்று இறந்துபோனதால் குடும்பமே நிலை தடுமாறியது . வசந்தியின் அம்மாதான் கூலிவேலைக்கு சென்று பிள்ளைகளை படிக்க வைத்தார் .
வசந்தி ஓரளவு குடும்ப சூழ்நிலையை உணர்ந்திருந்தால் நன்றாகவே படித்தால் . ஆனால் மேற்படிப்புக்கு போனால் வருமானம் பத்தாது என்பதால் தான் இந்த தற்காலிக வேலைக்கு செல்கிறாள் . விதியோ என்னமோ தன் தம்பி படித்து நல்ல வேலைக்கு சென்று காப்பாற்றுவான் என நினைத்தால் அவனும் அப்பாவை போலவே மர மில்லுக்கே சென்றுவிட்டான் .
நல்ல அழகான பெண்ணாக இருந்தாலும் , படிப்பறிவு இருந்தாலும் , நல்ல குடும்பமாக இருந்தாலும் அனைத்தையும் தாண்டி பணம் தானே தேவைப்படுகிறது என்றெண்ணிக்கொண்டே வந்தால் வசந்தி .இந்த நினைப்புகள் மனதில் ஓடிய பொழுதில் வீட்டிற்கே அம்மாவும் மகளும் வந்து சேர்ந்துவிட்டனர் . அப்போது தொலைக்காட்சியில் “பணம் பத்தும் செய்யும் ” என உரையாடலை கேட்ட வசந்தி , “வறுமையும் கூட பத்திற்கும் மேலே செய்யும் ” என முணுமுணுத்துக்கொண்டே செருப்பை கழட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தால் வறுமை அவளுடனே சென்றது .
உண்மை தானே !
ஸ்ரீ