அம்ருதா வழக்கு – அதிமுக உயிர் மூச்சுகள் எதிர்க்கவில்லையே ஏன் ?

செல்வி ஜெயலதாவின் மகள் தான் தான் என்று அம்ருதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . அதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் இருந்து எதிர்ப்பு வரவில்லையே . ஏன் ?

ஜெயலலிதாவும் தொண்டர்களும் :

ஜெயலலிதா என்பவர் தமிழகத்தின் மிகபெரிய ஆளுமையாக இருந்தவர் . அவர் இருந்தவரையில் அதிமுகவில் அவர் எடுக்கும் முடிவே இறுதியானது உறுதியானது . அமைச்சர்கள் கூட தங்களின் துறை குறித்து வாய் திறக்க மாட்டார்கள் .

ஜெயலலிதா என்கிற ஆளுமைக்கு ரத்த சொந்தங்கள் என எதுவும் இருக்கவில்லை . அண்ணண் மகன் மகள் போன்றோர் இருந்தும் அவர் அவர்களை இணைத்துக்கொண்டதில்லை . அவரின் உண்மையான சொந்தங்களாக அவர் கருதியது கட்சியின் அடிப்படை தொண்டனையும் மக்களையும் தான் .

அதற்கு ஏற்றாற்போல மக்களும் கட்சி தொண்டர்களும் அவரின் மேல் அளப்பரிய அன்பு கொண்டிருந்தனர் . இதற்கு உதாரணமாக , அவர் குற்றவாளியென அறிவிக்கப்பட்டபோதும் மக்கள் மத்தியில் வெறுப்பு ஒன்றும் உண்டாகவே இல்லை . அந்த அளவுக்கு தொண்டர்களுக்கும் ஜெயலலிதாவுக்குமான பிணைப்பு இருந்தது .

அவருடைய ஆளுமை காரணமாக எதிர்வரிசையில் இருந்தவர்களைக்கூட ஈர்க்கும் வல்லமையை அவர் கொண்டிருந்தார் .

ஜெயலலிதாவும் நிர்வாகிகளும் :

ஜெயலலிதா தனது அமைச்சர்களையும் நிர்வாகிகளையும் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் . உளவுதுறைமூலமாக அவர்களை கண்காணித்து களையெடுக்கவும் அவர் தயங்கியதில்லை .

இதனால் அதிமுகவில் அமைச்சராக இருந்தவர்கள் சாதாரண மனிதராகவும் சாதாரண தொண்டன் அமைச்சராகவும் மாறிய வரலாறுகளும் அரங்கேறின .

ஜெயலலிதா விரும்பினாரோ அல்லது ஜெயலலிதா விரும்புவார் என அருகில் இருந்தவர்கள் சொன்னதாலோ அவர் காலில் விழுகாத அமைச்சர்களே நிர்வாகிகளே இல்லை எனலாம் .

ஜெயலலிதா இறப்பும் மாறிய மனங்களும் :

எப்போதும் அதிமுக ராணுவ கட்டுப்பாட்டுடன் நடக்கும் கட்சி என சொல்லிவருவார்கள் . ஜெயலலிதா இருந்தவரையில் அப்டித்தான் இருந்தது . ஆனால் அவர் இறந்த பின்னர் நிலமை தலைகீழாக மாறியது .

பழக்கமில்லாதமர்களின் பேச்சினைபோல அதிமுக நிர்வாகிகளின் பேச்சு மக்கள் மத்தியில் சிரிப்பை மட்டுமே கொண்டு வந்தன .

அதிமுக தொண்டர்களுக்கு குறிப்பாக நிர்வாகிகளுக்கு ஒரு கேள்வி :

ஜெயலலிதா தன் கடந்த கால வாழ்வில் சோபன் பாபுவுடன் இருந்ததை மறைக்கவில்லை . அதனைபோலவே அவர் தனது பேருக்கு முன்னால் செல்வி என இடுவதையும் விட்டுவிடவில்லை .

ஆனால் அவர் மறைந்த பின்னர் அம்ருதா என்கிற பெண்ணொருவர் தான்தான் ஜெயலதாவின் மகள் என சுப்ரீம் கோர்ட் ஏறினார் . பிறகு அவர்களின் அறிவுத்துதலின்பேரில் தற்சமயம் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் .

எதிர்த்து பேசாத நிர்வாகிகள் :

வெட்டியான காரணங்களுக்கு கொந்தளிக்கும் அதிமுக நிர்வாகிகளிடம் அமைச்சர்களிடம் ஜெயலதாவின் சொத்துக்களையும் அவரது அரசியல் செல்வாக்குகளையும் பயன்படுத்திக்கொண்டவர்களின் மத்தியில் இருந்து சின்ன எதிர்ப்பு கூட அம்ருதாவிற்கு வரவில்லையே . ஏன் ?

ஜெயலலிதா மிக பெரிய கவுரவமாக கருதியது செல்வி என்கிற அடைமொழியை . அம்ருதா கூறுவது உண்மை, பொய் என்பதை விட்டுவிடுங்கள் . ஆனால் தாங்கள் தலைவியென கருதிய , அவரின் செல்வாக்கால் இன்று முதலமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளையும் அனுபவிப்பவர்களிடம் இருந்து சிறு எதிர்ப்புகூட வரவில்லையே என்பது தான் வருத்தமாக இருக்கின்றது.

அவர்களின் விளக்கமாக “அம்ருதா கூறுவது மிகப்பெரிய பொய் . அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் பேசி அதனை பெரிதுபடுத்த விரும்பவில்லை ” என்கிறார்கள் .

பொய்யென்பதால் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பவர்கள் கமல்ஹாசன் , திமுகவினர் ஏதேனும் சொன்னால் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பது ஏனோ ?

ஆனால் ஒன்றுமட்டும் இவர்களிடம் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது . இன்னும் சில வருடங்கள் கடந்தால் ஜெயலலிதா யார் என்று கூட கேட்பார்கள் .

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *