ஓட்டுக்கு துட்டு வெட்கமில்லையா தமிழக மக்களே ?

தமிழர்கள் என்பவர்கள் உலகின் மூத்த குடியாகவும் பண்பாடு பழக்கவழக்கங்களில் முன்னேறிய ஓர் இனமாகவும் பார்க்கப்படுகிறது . குறிப்பாக சமூக நெறியில் முன்னேறிய தமிழர்களின் செயல்பாடு அந்த தகுதிக்கு ஏற்றவாறா இருக்கின்றது ?

மேன்மையான தமிழகம் :

தமிழகம் இந்தியாவின் சிறந்த மாநிலங்களுள் ஒன்று .

பொருளாதாரம் , வளர்ச்சி ஆகியவற்றில் மிகச்சிறந்த மாநிலமாக திகழ்கிறது .

குறிப்பாக பண்பாடு , சமூக நீதி செயல்பாடுகளில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக திகழ்கின்றது .

ஆனால் ?

ஓட்டுக்கு துட்டு :

நன்றாக படித்த, பண்பாடு ,சமூகநீதியில் சிறந்த தமிழக மக்கள் தற்போது தங்களது ஐனநாயக கடமையை செய்ய “ஓட்டுக்கு துட்டு ” வாங்குகின்றனர் .

இதுகுறித்து மக்கள் கவலை படுவதும் இல்லை , குறைந்தபட்சம் தங்களது ஓட்டுக்களை விற்றதால் மன உறுத்தல் கூட ஏற்படுவதில்லை .

வெட்கமே இல்லாமல்

“போன தேர்தல் ல அவ்வளவு கொடுத்தீங்க , இப்போ கொறச்சு கொடுக்குறீங்க ” எனவும்

“அந்த கட்சிகாரவங்க அவ்வளவு கொடுத்தாங்க நீங்க கொறச்சு கொடுக்குறீங்க ” எனவும்

கேட்டு கேட்டு தங்களது ஓட்டுக்களை விற்க தொடங்கிவிட்டனர் .

பழகிய மக்கள் பழக்கிய கட்சிகள் :

தமிழக மக்கள் ஓட்டுக்களை விற்க பழகியதற்கும் மதுவிற்கு அடிமையாக அலைவதற்கும் காரணம் ” சமூக நீதியை வலியுறுத்திய பெரியாரை முன்னோடியாக கொண்ட இரு பெரும் திராவிட கட்சிகள் தான் ”

ஒருபக்கம் பெரியாரின் கொள்கைகளை தாங்கிக்கொண்டாலும் மறுபுறம் தேர்தல் அரசியலுக்காக பணம் மது ஆகியவற்றை மக்களிடம் திணித்தன இக்கட்சிகள் .

கேவலமான மக்கள் :

படிப்பறிவு இருக்கின்ற சிந்திக்கும் திராணியுள்ள ஒருவன் “மது விற்பதால் குடிக்கிறோம் ” என்றோ ” பணம் கொடுப்பதால் ஓட்டுக்கு பணம் வாங்குகிறோம் ” என்றோ கூறுவது சரியானதாக இருக்காது .

இந்தியாவிலேயே அதிகபடியாக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் மாநிலமாக தமிழகமே இருகின்றது .

இதனால் தஞ்சாவூர் ,அரவக்குறிச்சி தொகுதிகளிலும் ஆர்கே நகரில் ஒருமுறையும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது . ஒத்திவைக்கப்பட்டு நடைபெரும் மறுதேர்தலிலும் பணம் கொடுக்கப்படுவதும் வாங்கப்படுவதும் தான் கேவலம் .

மக்களே திருந்த வேண்டும் :

எந்தவொரு மாற்றமும் மக்களிடமே தொடங்குதல் வேண்டும் . ஓட்டுக்கு பணம் வாங்குவது எவ்வளவு பெரிய ஐனநாயக துரோகம் என்பதை உணர்ந்து மக்களே திருந்த வேண்டும் .

தேர்தல் ஆணையமும் சாலைகளில் போகிறவர்களிடம் தங்களது திறமையை காட்டிக்கொண்டிருக்கமால் கடுமையான நடவடிக்கைளை எடுக்கவேண்டும் .

ஓட்டுக்கு பணம் கொடுப்பவரை வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடவும் வாங்குபவரை வாழ்நாள் முழுவதும் வாக்களிக்கவும் தடை போட வேண்டும் .

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *