இன்சூரன்ஸ் எடுக்க போறீங்களா? நீங்கள் கவனிக்க வேண்டிய விசயங்கள் இவை தான்

இன்சூரன்ஸின் முக்கியத்துவத்தை உணராமல், போலீசார் கேட்பார்கள் என்பது போன்ற காரணங்களுக்காக பல தவறுகளுடன் இன்சூரன்ஸ் ஐ பலர் செய்கிறார்கள். பின்னர் விபத்தோ ,திருட்டோ நடக்கும் போது தான் தங்களுடைய தவறை உணர்கிறார்கள்.
இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள்

இன்சூரன்ஸ் என்றால் என்ன?

இருவரும் ஹெல்மெட் அணிந்திருப்பதை பாராட்டும் போலீசார்

கார் அல்லது இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு இன்சூரன்ஸ் என்றால் என்ன? இன்சூரன்ஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும். உங்களது வாகனம் விபத்து அல்லது திருட்டு அல்லது தாக்குதல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டால் இழப்பீட்டை பெறுவதற்கு இன்சூரன்ஸ் செய்திருப்பது அவசியம். வாகனம் வாங்கியது முதல் நீங்கள் அதனை சாலையில் ஓட்டுகிற வரை செல்லத்தக்க இன்சூரன்ஸ் ஆவணத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம். அப்படி இன்சூரன்ஸ் வைத்திருக்காவிடில் போலீசாரின் வழக்குக்கு உள்ளாவதுடன் உங்களால் இழப்பீட்டையும் பெற இயலாது.

அதற்கு முன்னால் First Party Insurance மற்றும் Third Party Insurance என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

First Party Insurance vs Third Party Insurance

இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள்

இன்சூரன்ஸை பொறுத்தவரைக்கும் First Party என்பவர் வாகனத்தின் உரிமையாளர். Second Party என்பவர் இன்சூரன்ஸ் நிறுவனம். Third Party என்பது உங்களது வாகனத்தால் பாதிப்பு அடையக்கூடியவர். இன்சூரன்ஸில் இரண்டு வகை உண்டு ஒன்று First Party Insurance மற்றொன்று Third Party Insurance. ஒவ்வொருவரும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியது Third Party Insurance தான். இல்லாவிட்டால் காவல்துறையினர் உங்களுக்கு அபராதம் விதிப்பார்கள்.

இன்று இணையதளத்தில் இன்சூரன்ஸ் புதுப்பித்துக்கொள்ளுவதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. பாலிசி பஜார் உள்ளிட்ட இணையதளங்களுக்கு சென்றால் மிகக்குறைந்த விலையில் இன்சூரன்ஸ் ஐ புதுப்பித்துக்கொள்ள முடியும். ஒரு நிமிடத்தில் இன்சூரன்ஸ் என்றல்லாம் கூட விளம்பரங்களை காண முடிகிறது. ஆனால் இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் போது நீங்கள் தவறாமல் கவனிக்க வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் செய்யத்தவறினால் நீங்கள் இன்சூரன்ஸ் செய்ததற்க்கே பயனில்லாமல் போய்விடும்.

காலாவதி ஆகுதலை தவிர்க்கவும்

வழக்கம் போல கடைசி நேரத்தில் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் வேலையை செய்வதை தவிர்க்க வேண்டும். நாம் தவறவிடுகின்ற நேரத்தில் ஏதேனும் நிகழ்ந்தால் நம்மால் இழப்பீட்டை பெற இயலாது.

No Claim Bonus ஐ குறிப்பிட தவறாதீர்கள்

கடந்த ஆண்டில் நீங்கள் இன்சூரன்ஸ் மூலமாக இழப்பீடு பெறவில்லை எனில் அதனை குறிப்பிட்டு குறிப்பிட்ட சதவிகித தொகையை போனஸ் ஆக பெற முடியும், இதற்க்கு No Claim Bonus என்று பெயர். தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இழப்பீடு பெறாமலேயே வாகனத்தை இயக்கிடும் போது இந்த No Claim Bonus அதிகரிக்கும்.

 

சராசரி No Claim Bonus ,

 

1 Year 20%

2 Years 25%

3 Years 35%

4 Years 45%

5 Years 50%

5 + Depends

நம்மில் பலர் இதனை கவனிக்காமலேயே சென்றுவிடுவதனால் இந்த பலனை தவறவிடுகின்றனர்.

சரியான இன்சூரன்ஸ் தொகையை தேர்ந்தெடுங்கள் [IDV]

போலீஸ் பிடிக்கும் போது காண்பிப்பதற்கு இன்சூரன்ஸ் என்ற ஒன்று இருந்தால் போதும் என நினைக்க வேண்டாம். எதிர்பாராதவிதமாக விபத்தோ அல்லது திருட்டோ நடந்துவிட்டால் சரியான இழப்பீட்டை பெறுவதற்கு நீங்கள் சரியான IDV – Insured Declared Value  ஐ தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும். சில இன்சூரன்ஸ் கம்பெனிகள் மிகக்குறைந்த விலையில் இன்சூரன்ஸ் தருகிறோம் என்பார்கள், அவர்களின் IDV – Insured Declared Value ஐ கவனிக்க தவறாதீர்கள்.

சரியான தகவலை கொடுத்திடுங்கள்

அவசர கதியில் கொடுக்கின்ற தகவலில் கதவறுகளை செய்து விடாதீர்கள். இன்சூரன்ஸ் கம்பெனிகள் மிகக்கவனமாக அனைத்து தகவல்களையும் சோதனை செய்த பின்னர் தான் உங்களுக்கு இழப்பீடு வழங்குவார்கள். ஆகவே உங்களது பெயர், வாகன எண் , nominee , முகவரி என அனைத்தையும் கவனமாக கொடுத்திடுங்கள்.

இன்சூரன்ஸ் கம்பெனியை அணுகுதல்

சில இன்சூரன்ஸ் கம்பெனிகள் விபத்து அல்லது திருட்டு நடந்த 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்திற்கு உள்ளாக தகவல் அளித்திடவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை வைத்திருப்பார்கள்.ஆகவே விபத்து அல்லது திருட்டு நடந்த உடன் உங்களது இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தெரியப்படுத்துங்கள். அவர்களின் வழிகாட்டுதல் படி அடுத்தடுத்து நடந்திடுங்கள்.


Get updates via WhatsApp





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

One thought on “இன்சூரன்ஸ் எடுக்க போறீங்களா? நீங்கள் கவனிக்க வேண்டிய விசயங்கள் இவை தான்

  • January 7, 2020 at 11:44 pm
    Permalink

    Good info.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *