IT துறைக்கு வர பெண்களுக்கு தயக்கம் ஏன் ? Why women’s are not interested in IT Jobs | TAMIL | Indian Girls Code | TEDx

மாறிவரும் சுற்றுசூழலுக்கான தீர்வை அல்லது சத்தம் செய்திடும் ரோபோ ஒன்றினை கிராமத்தில் இருக்கும் சிறுமி கண்டுபிடித்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் . நான் அதிதி பிரசாத் (Adithi Prasad ) அதற்கான முயற்சியில் ஈடுபடும் ஒரு பெண் என பேச்சினை தொடர்கிறார் . 

Aditi Prasad founded Indian Girls Code to introduce programming and technology to a new generation of coders in India

 

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் Indian Girls Code என்னும் தலைப்பில் உரையாற்றிய அவர் , தொழில்நுட்ப பிரிவில் (Code Writing ) பெண்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்றும் , மிக இளம் வயதிலேயே பெண்கள் கணிதம் , தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் இருந்து பிரிக்கப்படுகிறார்கள் என உண்மையை போட்டு உடைக்கிறார் .

 

 Who is Adithi Prasad?

 

அதிதி பிரசாத் பெண் குழந்தைகளுக்கு IT துறையின் அடிப்படையான Code எழுதுவதை பெண் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வேலையை செய்து வருகின்றார் . 

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அநாதை ஆசிரமத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு ரோபோடிக்ஸ் குறித்தும் coding எழுதுவது குறித்தும் சொல்லிக்கொடுக்கிறார் . 

இவருடைய நிறுவனமான இன் முக்கிய பணியே பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு code எழுதுவது தொடர்பான பயிற்சியினை அளித்து நிகழ்கால வாழ்கைக்கு தேவையானவற்றை கண்டுபிடிக்க ஊக்குவிப்பதுதான்.

 

எந்த பருவத்தில் இருந்து இந்த பாலின பாகுபாடு நடக்கிறது ?

 

ஏன் பெண்கள் code எழுதுவது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் பெண்கள் அதிக அளவில் இருப்பது இல்லை ? 

மாற்றம் எங்கிருந்து வரவேண்டும் ?

 

என்பது போன்ற கேள்விகளுக்கு உள்ளாக பயணித்து விடை தேடிட முயற்சிப்போம்

 

 ஆண் பெண் பாலின பாகுபாடு ?

 

அதிதி பிரசாத் தன்னுடைய பேச்சில் இதற்கான விடையை தெரிவிக்கிறார் . குழந்தை என்ன படிக்க வேண்டும் என்பது விவரம் தெரியும் வயதிற்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டு விடுகின்றது . ஆண் குழந்தை என்றால் மின்னணு , தொழில்துறை சார்ந்த படிப்புகளையும் பெண் குழந்தை என்றால் கலை , நடனம் , ஆசிரியர் உள்ளிட்ட படிப்புகளையும் படிக்க வைக்கும் பழக்கம் சிறுவயதிலேயே முடிவு செய்யப்படுகின்றது .

 

கலை நடனம் போன்றவை தாழ்ந்த துறைகள் அல்ல , ஆனால் பெண் என்பதனாலேயே அவர்களுடைய திறமை , விருப்பம் அனைத்தையும் கொன்றுவிட்டு குறிபிட்ட துறைகளில் பெண்களை அடைப்பது தவறில்லையா ?

 

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன ?

 

ஆரம்பக்கல்வியில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் 50 / 50 என்கிற விகிதத்தில் தான் கட்டாய பாடமாக  கணிதம் , அறிவியல் , பொறியியல் , தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் சேர்கிறார்கள் . பெண் குழந்தைகள் அந்த படிப்புகளை சிறப்பாகவும் படிக்கிறார்கள் .

 

Percentage that shows the lack of participation of women in IT field
Percentage that shows the lack of participation of women in IT field
 

ஆனால் இதே துறை சார்ந்த படிப்புகள் விருப்ப பாடமாக இருக்கும்போது 50 விழுக்காடு என்பது பாதியாக குறைகிறது .

 

இறுதியாக  கணிதம் , அறிவியல் , பொறியியல் , தொழில்நுட்பம் துறை சார்ந்த பிரிவுகளில் வேலை பார்க்கும் பெண்களின் சதவிகிதம் வெறும் 7 சதவிகிதம் அளவிற்கு குறைந்து போகிறது

 

பெண்கள் கணிணி சார்ந்த துறைகளில் குறைந்த அளவில் வர காரணம் என்ன ?

 

பாகுபாடு : தொழில்நுட்ப துறையில் ஆண் பெண் பாகுபாடு பரந்து விரிந்து கிடக்கின்றது . ஏற்கனவே இருக்கின்ற ஆண் பணியாளர்களின் ஆதிக்கம் பெண்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்துள்ளது . ஆகையால் தான் பெண்கள் IT துறையினை தேர்ந்தெடுக்க பெண்களும் பெற்றோர்களும் தயங்குகின்றனர் .

 

மேலும் திருமணம் , குழந்தை பேறு போன்றவையும் பெண்களுக்கு IT துறையில் நுழையும் பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைக்கல்லாக இருகின்றது .

 

பாலியல் தொந்தரவு குறித்த பயங்களும் அச்சங்களும்

 

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தினை விட அவர்களின் பாதுகாப்பில் தான் பெற்றோருக்கு அதிக அக்கறை இருகின்றது . ஆகையால் தான் பாலியல் தொந்தரவுகள் அதிகம் இருக்கும் என்று நம்பப்படுகின்ற IT துறைக்கு தங்களின் பெண் குழந்தைகளை தயார்படுத்த விருப்பமற்று இருக்கின்றனர் .

 

ஏற்கனவே அதிக அளவில் ஆண்கள் இருக்கக்கூடிய துறையென்பதால் பணி உயர்வு போன்றவற்றில் அதிக பாகுபாடு காட்டப்படுகிறது என்கிற அச்சம் நிலவுகின்றது

 

பெண்களுக்கு ஏற்ற வேலையல்ல என்கிற தவறான எண்ணம்

 

பெண்களுக்கு குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் குடும்பத்தினை கவனிக்கவேண்டிய கடமையும் இருப்பதனால் அவர்களுக்கு ஏற்ற துறையாக IT துறை இருப்பதில்லை . 

மேலும் பெண்களுக்கு இருக்கின்ற பல பொறுப்புகளினால் அவர்களால் பல சமயங்களில் அதிக அளவில் சிந்தித்து செயல்பட முடியாது என்கிற கருத்தாக்கமும் அவர்களுக்குள்ளாகவே இருப்பதனால் IT துறையை தவிர்க்கின்றனர் .

 

 IT துறையில் பெண்களுக்கான தேவை

 

IT துறை தற்போது மிகப்பெரிய துறையாக உருவெடுத்து வருகின்றது . Data Processing, Artificial Intelligence, Digital Advertising,Mobile Application, Robotics போன்றவை எதிர்காலத்தை ஆளப்போகின்ற தொழில்நுட்பங்கள் . 

அப்படிப்பட்ட துறையில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதும்  பெண்கள் அந்த துறையினை வெறுப்பதும் மிகப்பெரிய வெற்றிடத்தை மட்டுமே IT துறைக்கு தந்து வருகின்றது . 

படிக்கும் காலங்களில் ஆண்களை காட்டிலும் அதிக மதிப்பெண் பெற்று சாதனை செய்கிறார்கள் பெண்கள் . ஆனால் வேலை என்று வரும்போது அவர்களின் பங்களிப்பு இருப்பதில்லை .

 

இதனை முறியடித்து ஆண்களுக்கு நிகராக பெண்களும் IT துறையில் அதிக அளவில் பங்கேற்பு செய்திட வேண்டும் . IT துறைக்கான அறிவு தேவையும் ஆள் தேவையும் அதிக அளவில் தேவைப்படுவதால் பெண்கள் அத்தனை தடுப்புகளையும் உடைத்தெறிந்துவிட்டு IT துறையில் இடம்பெற வேண்டும் . 

குறிப்பாக கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் IT துறையில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால் இந்தியா நிச்சயமாக வல்லரசாகும் .

 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *