மாறிவரும் சுற்றுசூழலுக்கான தீர்வை அல்லது சத்தம் செய்திடும் ரோபோ ஒன்றினை கிராமத்தில் இருக்கும் சிறுமி கண்டுபிடித்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் . நான் அதிதி பிரசாத் (Adithi Prasad ) அதற்கான முயற்சியில் ஈடுபடும் ஒரு பெண் என பேச்சினை தொடர்கிறார் .
அதிதி பிரசாத் பெண் குழந்தைகளுக்கு IT துறையின் அடிப்படையான Code எழுதுவதை பெண் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வேலையை செய்து வருகின்றார் .
தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அநாதை ஆசிரமத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு ரோபோடிக்ஸ் குறித்தும் coding எழுதுவது குறித்தும் சொல்லிக்கொடுக்கிறார் .
இவருடைய நிறுவனமான இன் முக்கிய பணியே பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு code எழுதுவது தொடர்பான பயிற்சியினை அளித்து நிகழ்கால வாழ்கைக்கு தேவையானவற்றை கண்டுபிடிக்க ஊக்குவிப்பதுதான்.
எந்த பருவத்தில் இருந்து இந்த பாலின பாகுபாடு நடக்கிறது ?
ஏன் பெண்கள் code எழுதுவது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் பெண்கள் அதிக அளவில் இருப்பது இல்லை ?
மாற்றம் எங்கிருந்து வரவேண்டும் ?
ஆண் பெண் பாலின பாகுபாடு ?
புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன ?
ஆரம்பக்கல்வியில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் 50 / 50 என்கிற விகிதத்தில் தான் கட்டாய பாடமாக கணிதம் , அறிவியல் , பொறியியல் , தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் சேர்கிறார்கள் . பெண் குழந்தைகள் அந்த படிப்புகளை சிறப்பாகவும் படிக்கிறார்கள் .
ஆனால் இதே துறை சார்ந்த படிப்புகள் விருப்ப பாடமாக இருக்கும்போது 50 விழுக்காடு என்பது பாதியாக குறைகிறது .
பெண்கள் கணிணி சார்ந்த துறைகளில் குறைந்த அளவில் வர காரணம் என்ன ?
பாகுபாடு : தொழில்நுட்ப துறையில் ஆண் பெண் பாகுபாடு பரந்து விரிந்து கிடக்கின்றது . ஏற்கனவே இருக்கின்ற ஆண் பணியாளர்களின் ஆதிக்கம் பெண்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்துள்ளது . ஆகையால் தான் பெண்கள் IT துறையினை தேர்ந்தெடுக்க பெண்களும் பெற்றோர்களும் தயங்குகின்றனர் .
பாலியல் தொந்தரவு குறித்த பயங்களும் அச்சங்களும்
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தினை விட அவர்களின் பாதுகாப்பில் தான் பெற்றோருக்கு அதிக அக்கறை இருகின்றது . ஆகையால் தான் பாலியல் தொந்தரவுகள் அதிகம் இருக்கும் என்று நம்பப்படுகின்ற IT துறைக்கு தங்களின் பெண் குழந்தைகளை தயார்படுத்த விருப்பமற்று இருக்கின்றனர் .
பெண்களுக்கு ஏற்ற வேலையல்ல என்கிற தவறான எண்ணம்
பெண்களுக்கு குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் குடும்பத்தினை கவனிக்கவேண்டிய கடமையும் இருப்பதனால் அவர்களுக்கு ஏற்ற துறையாக IT துறை இருப்பதில்லை .
மேலும் பெண்களுக்கு இருக்கின்ற பல பொறுப்புகளினால் அவர்களால் பல சமயங்களில் அதிக அளவில் சிந்தித்து செயல்பட முடியாது என்கிற கருத்தாக்கமும் அவர்களுக்குள்ளாகவே இருப்பதனால் IT துறையை தவிர்க்கின்றனர் .
IT துறையில் பெண்களுக்கான தேவை
IT துறை தற்போது மிகப்பெரிய துறையாக உருவெடுத்து வருகின்றது . Data Processing, Artificial Intelligence, Digital Advertising,Mobile Application, Robotics போன்றவை எதிர்காலத்தை ஆளப்போகின்ற தொழில்நுட்பங்கள் .
அப்படிப்பட்ட துறையில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதும் பெண்கள் அந்த துறையினை வெறுப்பதும் மிகப்பெரிய வெற்றிடத்தை மட்டுமே IT துறைக்கு தந்து வருகின்றது .
படிக்கும் காலங்களில் ஆண்களை காட்டிலும் அதிக மதிப்பெண் பெற்று சாதனை செய்கிறார்கள் பெண்கள் . ஆனால் வேலை என்று வரும்போது அவர்களின் பங்களிப்பு இருப்பதில்லை .
இதனை முறியடித்து ஆண்களுக்கு நிகராக பெண்களும் IT துறையில் அதிக அளவில் பங்கேற்பு செய்திட வேண்டும் . IT துறைக்கான அறிவு தேவையும் ஆள் தேவையும் அதிக அளவில் தேவைப்படுவதால் பெண்கள் அத்தனை தடுப்புகளையும் உடைத்தெறிந்துவிட்டு IT துறையில் இடம்பெற வேண்டும் .
குறிப்பாக கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் IT துறையில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால் இந்தியா நிச்சயமாக வல்லரசாகும் .